You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டீன் ஜோன்ஸ்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம்
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளர் குழுவில் இருந்த அவருக்கு 59 வயதாகிறது.
கிரிக்கெட் விமர்சகராக இருந்த டீன் ஜோன்ஸ், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடருக்கு, யூ டியூப் வர்ணனையாளராக இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
இந்திய ஊடகங்களில் மிகவும் பிரபலமான ஜோன்ஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுத்து வழங்கிய மூலம் மிகவும் பிரபலமானார்.
மெல்போர்னில் பிறந்த டீன், 52 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடி, 3631 ரன்கள் எடுத்திருந்தார்.
164 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய அவர், 7 செஞ்சுரி மற்றும் 46 முறை 50கள் ரன் எடுத்து 6068 ரன்களை குவித்திருந்தார்.
டீன் ஜோனஸ் இறப்புக்கு பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
டீனின் இறப்பு அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டீன் கிரிக்கெட்டை மிகவும் விரும்பினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீன் ஜோனசுடன் தனது முதல் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் விளையாட வாய்ப்பு கிடைத்ததாக பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், அவரது இரங்கலை தெரிவித்துள்ளார்.
டீன் ஜோன்ஸ் இறந்ததை இன்னும் நம்ப முடியவில்லை என்று டிவீட் செய்துள்ள விரேந்தர் ஷேவாக், இந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். தனக்கு பிடித்த வர்ணனையாளர் டீன் என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது முக்கிய ஆட்டங்களுக்கு அவர் வர்ணனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும், டீன் ஜோனஸ் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- ஆமதாபாத் தமிழ் பள்ளி: போராட்டத்தில் குதித்த மாணவர்கள், நேரடியாக தலையிட்ட எடப்பாடி பழனிச்சாமி
- டெல்லி கலவரம் 2020: 2 புகார்கள், ஆனால் எஃப்.ஐ.ஆர் இல்லை: உரை நிகழ்த்தியதை மறுக்கும் கபில் மிஸ்ரா - பிபிசி ஸ்பெஷல் ரிப்போர்ட்
- சீனா- அமெரிக்கா பதற்றம்: புதிய பனிப்போருக்கு தயாராகிறதா உலகம்?
- "சசிகலா வெளியில் வருவதால் எந்த தாக்கமும் இருக்காது": அமைச்சர் ஜெயக்குமார்
- கொரோனா அறிகுறிகளுடன் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :