You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜயகாந்த்: கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மியாட் மருத்துவமனை செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முன்னதாக விஜயகாந்த் கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் நலமுடன் உள்ளதாகவும் தே.மு.தி.க தெரிவித்திருந்தது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று இரவில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஜயகாந்த் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக மியாட் மருத்துவமனைக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்றபோது, அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பது தென்பட்டது. அது உடனடியாக சரிசெய்யப்பட்டது. தற்போது விஜயகாந்த் நலமுடன் உள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.
இதற்காக சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட பின் சென்னை திரும்பிய அவர், கடந்த சில மாதங்களாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த விஜயகாந்த், தேமுதிகவின் 14-வது ஆண்டு விழாவையொட்டி கடந்த 14-ஆம் தேதி தேமுதிக கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மேலும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்நிலையில், விஜயகாந்துக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் நேற்று இரவு தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் அவர் உடல்நிலை குறித்து உடனடியாக எந்த தகவலையும் வெளியிடாத நிலையில் தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஐபிஎல் 2020: அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் - 49 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
- அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்
- சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங்
- போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத், தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராக என்சிபி உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :