இந்திய விளையாட்டு வீராங்கனைகள் இதுவரை வென்றுள்ள பதக்கங்கள் எத்தனை?

1951-ஆம் ஆண்டு முதல், இந்திய விளையாட்டு வீராங்கனைகள் மொத்தமாக 698 பதக்கங்களை, சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பெற்றுள்ளனர்.

பதக்கங்களின் எண்ணிக்கை குறித்த பிபிசியின் ஆய்வில், 2019ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி வரையில், இந்திய வீராங்கனைகள் 201 தங்கம், 240 வெள்ளி மற்றும் 257 வெண்கலம் வென்றுள்ளனர்.

இதுவரை இந்திய வீராங்கனைகள் எந்த துறையில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள்?

ஆசிய போட்டிகளிலேயே பெரும்பாலான பதக்கங்கள் கிடைத்துள்ளன. 1951-ஆம் ஆண்டு முதல், இந்திய வீராங்கனைகள் மொத்தமாக 206 பதக்கங்களை வென்றுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கின்றன. கடந்த 2014 மற்றும் 2018ல் நடைபெற்ற விளையாட்டுகளில் இந்திய வீராங்கனைகள் 67 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளிலும் இந்திய வீராங்கனைகள் பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளார்கள். 1978-ஆம் ஆண்டின் காமன்வெல்த் விளையாட்டுகளில் தொடங்கி, இதுவரை அவர்கள் மொத்தமாக 160 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

காமன்வெல்த் போட்டிகளில் பெற்ற தங்கப் பதக்கங்கள் மட்டும், மற்ற போட்டிகளில் பெற்ற தங்கப் பதக்கங்களைவிட அதிகம். இந்திய வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டிகளில் இதுவரை, 58 தங்கம், 61 வெள்ளி மற்றும் 38 வெண்கலம் வென்றுள்ளார்கள்.

குறிப்பிட்ட நிகழ்வுகளை கிளிக் செய்து, அந்த ஆண்டிற்கான பதக்க விவரங்களை பாருங்கள்

எந்த விளையாட்டில் அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளன?

தடகளம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் ஆகியவற்றில் இந்தியாவிற்கு அதிக பதக்கங்கள் கிடைத்துள்ளன. இந்தியப் பெண்கள் தடகளத்தில் 156, துப்பாக்கி சுடுதலில் 137, மல்யுத்தத்தில் 73 பதக்கங்கள் பெற்றுள்ளனர்.

பேட்மிண்டன் (70), ஹாக்கி (10), எய்தல் (65), குத்துச் சண்டை (45) ஆகிய முக்கியப் போட்டிகளில் இந்தியப் பெண்கள் பதக்கப் பட்டியலில் முன்னிலையில் இருந்தனர்.

முறையியல்

இந்த தரவுகளுக்காக, பிபிசி தரவுகள் குழு, உலக அளவிலும், பிராந்திய அளவிலும், இந்தியா பெற்றுள்ள பதக்கங்கள் (தங்கம், வெள்ளி, வெண்கலம்) குறித்த தரவுகளை திரட்டியது.

இந்திய வீராங்கனைகள் 1951-ஆம் ஆண்டுதான் முதல் பதக்கத்தை வென்றனர். அதனால், தரவுகளின் காலம் 1951-இல் இருந்து தொடங்குகிறது. இங்கு உங்களால், அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகள், விளையாட்டு, உலகக் கோப்பை குறித்த பட்டியல்களை பார்க்க முடியும்.

பெரும்பான்மையான பதக்கங்கள் குறித்த தகவல்களை இதில் கொண்டுவர குழு முயன்றுள்ளது. நாங்கள் ஏதேனும் போட்டியை சேர்க்கத் தவறியிருந்தால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். அதை சேர்த்துக்கொள்கிறோம். கிரிக்கெட் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் அளிக்கப்படுவதில்லை என்பதால், அவை இதில் சேர்க்கப்படவில்லை.

குழுவாக பெற்ற வெற்றிகளில், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு பதக்கம் ஒதுக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காடாக, ஹாக்கியில் இந்தியா வென்றிருந்தால், அதில் விளையாடிய ஒவ்வொரு வீராங்கனைக்கும் ஒரு பதக்கம் அளிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இந்த எண்ணிக்கை நமது தரவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது. இது, குழுவின் வெற்றிக்காக போராடி வென்ற ஒவ்வொரு வீராங்கனையின் பங்களிப்பிற்கு நாம் அளிக்கும் முறையான அங்கீகாரத்திற்கான தகவல்.

சாம்பியன்ஷிப்புகளின் பட்டியலைக் காண இங்கே கிளிக் செய்க

ஆய்வு: ஷதாப் நஸ்மி

தரவுகள் உதவி: ஆன்யா அஃப்தாப்

மேம்பாடு: ஆலி பேட்டின்சன் மற்றும் துருவ் நென்வானி

இன்ஃபோகிராபிக்: ககன் நரே, நிகிதா தேஷ்பாண்டே மற்றும் புனித் பர்னாலா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: