India Vs NZ 90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்ற இந்தியா

இந்திய கிரிக்கெட் அணி

பட மூலாதாரம், KERRY MARSHALL/GETTY IMAGE

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் ஆட்டம் பே ஓவல், மௌன்ட் மௌங்கானுய் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மாவும் (87 ரன்கள்) ஷிகார் தவனும் (66 ரன்கள்) சிறப்பாக ஆடி ரன் குவிப்பை தொடங்கி வைத்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி (43), அம்பாதி ராயுடு (47ரன்கள்), தோனி (48 ரன்கள்) கெதார் ஜாதவ் (22 ரன்கள்) என அடுத்தடுத்த மட்டையாளர்கள் சிறப்பாக ஆடியதால், இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து மொத்தம் 324 ரன்கள் எடுத்தது.

நியூசிலாந்து

பட மூலாதாரம், HAGEN HOPKINS

325 ரன்கள் இலக்கோடு களமிறங்கிய நியூசிலாந்து அணி 8 ஓவருக்குள் 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

அடுத்தடுத்து ஆடிய பேட்ஸ்மன்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆட்டமிழக்க, 30 ஓவருக்குள் 8 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்திருந்தது.

8-வதாக களமிறங்கிய பிராஸ் வெல் சிறப்பாக அடித்து ஆடி 48 பந்துகளுக்கு 57 ரன்கள் குவித்தார்.

குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 45 ரன்கள் மட்டுமே கொடுத்து ரன் குவிப்பை மட்டுப்படுத்தினார்.

இறுதியில், 40.2 ஓவர்களில் நியூசிலாந்து 234 ரன்கள் எடுத்து எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது.

நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :