You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோலி சர்ச்சை கருத்து: ''இத்தாலியில் திருமணம் செய்துகொண்டவர் இப்படி பேசலாமா?''
தனது பேட்டிங்கை விமர்சித்த ரசிகரை "இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்" என்ற விராட் கோலியின் சாடல் குறித்து உங்கள் கருத்து என்ன? என பிபிசி தமிழின் வாதம் விவாதம் பகுதியில், நேற்றைய தினம் நேயர்களிடம் கேட்டிருந்தோம்.
இதற்கு வாசகர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர். அதன் தொகுப்பை இங்கே காணலாம்.
1. "கோலியிடம் உங்களுக்கு பிடித்த கால்பந்து வீரர் யார் என கேள்வி கேட்ட போது "கிறிஸ்டியானோ ரொனால்டோ" என்று கூறினார்..! ஏன் இந்தியாவின் சுனில் சேத்ரியை சொல்லாமல் போர்ச்சுகல் வீரரை சொன்னார்?" என கேள்வி எழுப்புகிறார் மோகன் எனும் வாசகர்.
2. "இத்தாலியில் திருமணம் செய்துகொண்ட கோலி இப்படிப் பேசலாமா என்ற ரீதியில் கேள்வி கேட்டிருக்கிறார்" ஃபாஸ்லான் லத்தீஃப் எனும் நேயர்.
3. "விளையாட்டில் பிடித்தவரை ரசிக்கிறோம் ; அயல்நாட்டு கம்பெனிகளின் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என கூறுங்களேன்" என்கிறார் பிரைட் ஆனந்த்.
4. ''ஆனா இவர் மட்டும் ஐபிஎல்லில் அயல்நாட்டு வீரர்கள் சிக்ஸர் நடிக்கும்போதும் விக்கெட் எடுக்கும் போதும் கைதட்டுவாராம் குதிப்பாராம்'' என எழுதியிருக்கிறார் சவுக்கத் அலி.
5. ''இந்திய ரசிகர்களை பொறுத்தவரை பல்வேறு நாட்டு வீரர்கள் மீது அதிக பாசம் வைப்பார்கள். பிரைன் லாரா, அப்ரிடி, ஸ்டீவ் வாஹ், வாசிம் அக்ரம், முரளிதரன், ஏபிடி வில்லியர்ஸ், ஷேன் வார்னே உள்ளிட்ட பல்வேறு வீரர்களை இந்திய பிடிக்கும். அதேபோல் சச்சின்,தோனி உள்ளிட்டோருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். ஏன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் விராட் கோலியின் இந்த கருத்துக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் முகம் சுழிக்கும்படி செய்துள்ளது.
பணத்தை வாங்கி கொண்டு பொழுதுபோக்கிற்காக விளையாடுவதை, ஏதோ சுதந்திர போராட்டம் அளவிற்கு சித்தரித்து விமர்சிப்பது வரம்பு மீறிய செயல்.'' என்கிறார் சலாம் பாஷா.
6. ''கிரிக்கெட் என்பது ஒரு உலகலாவிய விளையாட்டு. இதை ரசிப்பவர்கள் பல நாட்டுவீரர்களுக்கும் ரசிகர்களாக இருப்பர்.
இதில் தன் நாட்டு வீரரை மட்டுமே ரசிக்கவேண்டும் என நினைப்பது முட்டாள்தனம்.'' என்பது ஷேக் உடுமனின் கருத்து.
7. ''கோலியின் வாதம் விவேகமற்றது. பேசாமல் கடந்து போயிருக்கலாம். கோலியின் கோபமே அவரது பலவீனம்''. என்கிறார் சரோஜா பாலசுப்ரமணியம்.
8. ''தன் நாட்டு வீரர்களை தன் நாட்டு ரசிகர்கள் தாம் ரசிக்க வேண்டும் என அவர் விரும்புவது அவருடைய விருப்பம்.. ஆனால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கூறுவது ஏற்கத்தக்கதல்ல. மிகவும் கண்டனதிற்குரியது'' என முகநூலில் கூறியிருக்கிறார் அப்துல் காதிர்.
பிற செய்திகள்:
- சிங்கங்கள் துரத்தியதில் நீரில் மூழ்கி 400 எருமைகள் உயிரிழப்பு
- கலிபோர்னியா பார் தாக்குதலில் 13 பேர் பலி: முன்னாள் கடற்படை வீரர் மீது சந்தேகம்
- 'டெஸ்லா' தலைவராக பொறுப்பேற்கும் பெண் நிர்வாகி ரோபைன் டென்ஹோம்
- மெய்நிகர் செய்தி வாசிப்பாளர்: நிஜத்தை நிழலாக்கும் சீனா
- கிராம ஃபோட்டோ ஸ்டுடியோக்களும், சில நினைவுகளும்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: