லியாண்டர் பயஸ் திடீர் விலகல்: டென்னிஸில் மட்டுமல்ல சர்ச்சைகளிலும் நாயகன்

    • எழுதியவர், வந்தனா,
    • பதவி, பிபிசி தொலைகாட்சி ஆசிரியர் (இந்திய மொழிகள்)

சர்வதேச அரங்கில் 17 வயதிலேயே களம் இறங்கிய லியாண்டர் பயஸ், கடந்த 28 ஆண்டுகளாக ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பல்வேறு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

பயஸ்

பட மூலாதாரம், Getty Images

2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் குழுவில் அணி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக லியாண்டர் பயஸ் கேள்வி எழுப்பினார். இதனால் சீற்றமடைந்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், "ஒரு விஷமமான நபரை வெற்றிகொள்ள வேண்டுமானால் அவருடன் விளையாடக்கூடாது" என்று டிவிட்டர் செய்தி வெளியிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் குழுப்போட்டிகளில் பங்கேற்காமல் விலகுவதாக லியாண்டர் பயஸ் பி.டி.ஐக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளது அவர் மீதான சர்ச்சைகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

போட்டிகளில் வெல்வதில் மட்டுமல்ல, சர்ச்சைகளின் நாயகராகவும் இடம்பெறுவது வழக்கம். அவர் மீதான சர்ச்சைகளைப் பற்றி பேசுவதற்கு முன்பு, அவருடைய விளையாட்டு சாதனைகளை பற்றி பார்க்கலாம்.

பயஸ்

பட மூலாதாரம், Getty Images

28 ஆண்டுகளுக்கு முன்பு, 1990ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் வீரர்கள் மோதினர். சண்டிகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் ரிசர்வ் ஆட்டக்காரராக குழுவில் இடம் பெற்றிருந்தார் 17 வயது லியாண்டர் பயஸ்.

அன்றைய போட்டியில் குழுவின் தலைவர் நரேஷ் குமார் விளையாடாமல் லியாண்டர் பயஸுக்கு விளையாட அனுமதி கொடுத்தார். ஜீஷான் அலி உடன் தனது முதல் டேவிஸ் கோப்பை போட்டியில் விளையாட களம் இறங்கினார் பயஸ்.

5 செட்கள் கொண்ட போட்டியில் இந்திய அணி 4-6, 6-3, 6, 4, 6, 18-16 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அன்று டேவிஸ் கோப்பையை வென்ற லியாண்டர் பயஸ், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

பயஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்திய டேவிஸ் கோப்பை வரலாற்றிலேயே மிக நீண்ட நேரம் நடந்த ஐந்தாவது செட் அது. தற்போது 45 வயதாகும் லியாண்டர் பயஸ், அதிக நேரம் விளையாடும் இந்திய டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

28 ஆண்டு காலமாக சிறந்த டென்னிஸ் நட்சத்திரமாக திகழும் பயஸ், ஆக்ஷன், டிராமா, ரொமான்ஸ், சர்ச்சைகள் என அனைத்து அம்சங்களிலும் முன்னணியில் இருக்கிறார் என்றே சொல்லலாம்.

கால்பந்துக்கு பதிலாக டென்னிஸை தேர்ந்தெடுத்த பயஸ்

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

1986, மே மாதம் 12ஆம் தேதி… லியாண்டர் பயஸ் டென்னிஸ் விளையாடுவதற்காக தனது வசதிகளை எல்லாம் விட்டு கிளம்பியபோது அவரின் லட்சியம் இந்திய ஹாக்கி அணி வீரரான தன் தந்தையைப் போன்று ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.

கொல்கத்தாவில் வசித்து வந்த லியாண்டர் பயஸுக்கு டென்னிஸும், கால்பந்தும் மிகவும் பிடித்த விளையாட்டுகள். ஆனால் 12 வயதில் எந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பது என்ற முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டபோது அவர் தேர்ந்தெடுத்தது டென்னிஸை தான். அப்போது ஒலிம்பிக்கில் வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியம் கால்பந்து என்பதில் இருந்து டென்னிஸாக மாறியது.

பயஸ்

பட மூலாதாரம், Getty Images

கடந்த 28 ஆண்டுகளாக டென்னிஸ் விளையாடும் லியாண்டர் பயஸ் பற்றி ஏ.டி.பி வோர்ல்ட் டூர் (ATP World Tour) வெளியிட்ட சிறப்புச் செய்தியில், "ஏ.டி.பி தரவரிசை பட்டியலில் தற்போது இடம் பெற்றிருக்கும் 100 வீரர்களில் 43 பேர் மற்றும் இரட்டையர் போட்டியில் விளையாடும் 21 வீரர்கள் பிறப்பதற்குக் முன்பே, 1990 ஆம் ஆண்டில் விம்பிள்டன் ஜூனியர் பட்டத்தையும், 1991இல் அமெரிக்க ஓபன் ஜூனியர் பட்டத்தையும் வென்று லியாண்டர் பயஸ் தனது வெற்றிப் பயணத்தை துவங்கிவிட்டார்."

ஒலிம்பிக் கனவை நனவாக்கிய லியாண்டர் பயஸ்

1996இல் ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார் பயஸ். அப்போது வெற்றி பெற்ற அகாஸி, சர்கி செர்கெய் ப்ருகியுரா, பயஸின் புகைப்படம் எல்லா பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் வெளியானதை விளையாட்டு ரசிகர்கள் இன்றும் நினைவில் வைத்திருப்பார்கள்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

முதல் செட்டை இழந்த பயஸ் 3-6 என்ற செட் கணக்கில் தோற்றாலும், போராடிய அவர் 6-2, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார். போட்டிகளில் எதிராளிக்கு கடுமையான சவால் ஏற்படுத்துவதில் பயஸ் 45 வயதிலும் வல்லவராகவே இருக்கிறார்.

தனது சுயசரிதையில், 'மிக உயர்ந்த இயக்க ஆற்றல் கொண்ட மனிதர்' என்று பயஸைப் பற்றி சிறப்பாக குறிப்பிட்டிருக்கிறார் ஆண்ட்ரே அகாசி.

பிரபலமான பயஸ்-சாம்ப்ராஸ் போட்டி

20 ஆண்டுகளுக்கு முன்னர் 1998ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், டென்னிஸ் ஜாம்பவான் பீட் சாம்ப்ராஸுடன் போட்டியிட்ட பயஸ், அவரை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அனைவரையும் வியப்படையச் செய்தார். இந்த போட்டிகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் சாம்ப்ராஸ் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தை பெற்றிருந்தார் என்பதே அனைவரின் ஆச்சரியத்திற்கும் காரணம்.

இந்த அதிரடி வெற்றி மூலம் ஒற்றையர் பிரிவில் 73வது இடத்தையும், இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதியுடன் இணைந்து இரண்டாம் இடத்திலும் இடம் பெற்றார். 1998ஆம் ஆண்டு பயஸுக்கு எல்லாவிதத்திலும் வெற்றி ஆண்டு என்றே சொல்லலாம்.

1999இல் பயஸும் பூபதியும் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இரண்டு வெற்றிகளுடன் அவர்கள் உலகின் வெற்றிகரமான டென்னிஸ் இரட்டையர்கள் என்று பெயர் பெற்றனர்.

அதன் பிறகு கிராண்ட் ஸ்லாம், விம்பிள்டன், யூ.எஸ் ஓபன் என பயஸுக்கு ஏறுமுகம்தான்.

பயஸ்

பட மூலாதாரம், Getty Images

நடாலுடன் ஜோடி சேர்ந்த பயஸ்

5 அடி 10 அங்குல உயரம் கொண்ட பயஸ், அவரை விட மிகவும் உயரமான போட்டியாளரையும் வென்று, இந்திய வீரர்களின் மனவலிமையும், உத்திகளும் அவர்களை விட மேம்பட்டிருப்பதை நிரூபித்திருக்கிறார்.

பயஸின் ஆட்டத்தை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், அவரது காலில் சிறுத்தையின் பலமும், வேகமும் இருப்பதாக கூறுகின்றனர்.

தனது விளையாட்டு பாணியை தொடர்ந்து மேம்படுத்திவருவதே தனது வெற்றியின் ரகசியம் என்று தனது ஊடக நேர்காணல்களில் பயஸ் கூறியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

இரட்டையர் பிரிவில் புதிய கூட்டாளியை சேர்ப்பதும் பயஸின் உத்திகளில் ஒன்று. மார்டினா நவரத்திலோவா, மார்டினா ஹிங்கிஸ் உட்பட 120க்கும் மேற்பட்ட வீரர்களுடன் பயஸ் ஜோடி சேர்ந்துள்ளார்.

பயஸ்

பட மூலாதாரம், Getty Images

2015இல் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டிகளில் விளையாட நடாலுடன் ஜோடி சேர்ந்தார் பயஸ். அந்த சமயத்தில் தரவரிசைப் பட்டியலில் பின்தங்கியிருந்த பயஸுக்கு நடாலுடன் ஜோடி சேர்ந்ததில் நன்மை ஏற்பட்டது.

தொடரும் சர்ச்சைகள்

சர்ச்சைகளை எழுப்புவதிலும் தயங்காதவர் லியாண்டர் பயஸ் என்றே சொல்லலாம். இந்திய ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவராக திகழும் பயஸ் தனது சக வீரர்களுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு கொள்வார்.

இந்தியாவின் பிரபல இரட்டையர் ஜோடியான பயஸ்-பூபதி ஜோடி 90களில் இணைந்து விளையாடி பல வெற்றிகளை குவித்த்து. ஒரு கட்டத்தில் இருவரிடையே ஏற்பட்ட பிளவை யாராலும் சரி செய்யவே முடியவில்லை.

இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக அடிக்கடி செய்திகள் வெளியாகும். 2017ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பை அணியில் இருந்து வெளியேறிய பயஸ், தனது ஜோடியான மகேஷ் பூபதி தன்னுடன் மேற்கொண்ட வாட்ஸ்-அப் செய்திகளை வெளியிட்டதாக குற்றம் சாட்டினார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

டேவிஸ் கோப்பை அணியின் தலைவருக்கு இது தகுதியான நடவடிக்கை இல்லை என்று கூறினார்.

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் உரிய தகுதி இல்லாத வீரர்களுடன் தன்னை ஜோடி சேர்த்தால், போட்டியில் இருந்து வெளியேறுவதாக அச்சுறுத்தல் வெளியிட்ட பயஸ், பின்னர் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடினார்.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாக பயஸ் வந்தது பற்றி விமர்சனங்கள் எழுந்தன. அணியின் மோசமான விளையாட்டுக்கு பிறகு, அணி தேர்வு தான் காரணம் என்பதுபோல் பயஸ் விமர்சனங்களை முன்வைத்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ரோஹன் போபண்ணா, பெயர் குறிப்பிடாமல் டிவிட்டர் செய்தி ஒன்றை பதிவிட்டார். அதில், "மீண்டும் தொடங்கிவிட்டார், செய்திகளில் இடம்பிடிக்கும் அதே பழைய முறை, சக வீரர்களுக்கு எதிராக ஊடகங்களில் அறிக்கை" என்று குறிப்பிட்டிருந்தார்.

'என்றும் இளமை'

சர்ச்சைகள் தொடர்ந்தாலும் அவை லியாண்டர் பயஸின் விளையாட்டுத் திறனையும் சாதனைகளையும் பாதிக்கவில்லை. 'இரும்பு மனிதன்' 'என்றும் இளமையானவர்' என்றும் அவர் புகழப்பட்டார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

மே மாதம் 23வது முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டம்வென்ற செரீனா வில்லியம்ஸ், தன்னுடைய மகள் எலெக்சிஸுடன் டிவிட்டரில் புகைப்படத்தை பதிவிட்டார். அதற்கு "@serenawilliams 2040இல் விம்பிள்டனில் விளையாட ஒரு ஜோடியை தேடுகிறேன். அப்போது எலெக்சி கோப்பையை வெல்ல எனக்கு உதவுவாரா?" என்று பியஸ் பதிலளித்தார்.

இது நகைச்சுவையான பதிலாக பார்க்கப்பட்டது. 2040ஆம் ஆண்டுக்குள் பயஸ் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்றாலும், லியாண்டர் பயஸின் தன்னம்பிக்கை, திறமை மற்றும் மன உறுதியை காட்டுகிறது இந்த பதிவு. இதுதான் அவரது வெற்றியின் ரகசியம்.

ஜகார்த்தாவில் லியாண்டர் பயஸ் விளையாடியிருந்தால், 2006க்கு பிறகு அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கலாம். 2006இல் பூபதி மற்றும் சானியாவுடன் சேர்ந்து விளையாடிய பயஸ், ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் என இரண்டு தங்கம் வென்றார்.

இனிமேல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பயஸ் விளையாடுவதை மக்களால் பார்க்க முடியாமல் போகலாம்.

லியாண்டர் பயஸின் சாதனைகள்

ஆசிய விளையாட்டு 2006

பூபதியுடன் இணைந்து ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம்

சானியாவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம்

கிராண்ட் ஸ்லாம்

10 கலப்பு இரட்டையர் பட்டங்கள், 8 ஆண்கள் இரட்டையர் பட்டங்கள், மொத்தம் 18 பட்டங்கள்.

கலப்பு மற்றும் ஆண்கள் இரட்டையரில் பங்கேற்ற அனைத்து நான்கு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் பயஸ் வெற்றி பெற்றுள்ளார்.

டேவிஸ் கோப்பை

அதிக இரட்டையர் போட்டிகளில் (43) வென்று உலக சாதனை

ஒலிம்பிக்

7 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட டென்னிஸ் வீரர் என்ற உலக சாதனை

1996 ஒலிம்பிக்ஸில் வெண்கலப் பதக்கம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :