உங்களால் இப்போட்டியில் சிக்ஸர் அடிக்க முடியுமா? #BBCIplQuiz-7

பட மூலாதாரம், DIBYANGSHU SARKAR
11-ஆவது ஐபிஎல் சீசனில் லீக் சுற்று இன்னும் சில நாட்களில் நிறைவு பெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் குறித்து ஒரு ரசிகராக நீங்கள் எவ்வளவு விஷயங்களை நினைவில் வைத்திருக்கிறீர்கள் என்பதை நீங்களே தெரிந்து கொள்ள உங்களுக்கு ஒரு வாய்ப்பு.
வாழ்த்துகள்.
1. விராட் கோலி ஒரு சீசனில் அதிகபட்சம் எத்தனை சதங்கள் விளாசியுள்ளார்?
1. ஒன்று
2. இரண்டு
3. நான்கு
2. ஐபிஎல்லில் ஒட்டுமொத்தமாக இதுவரை அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்து வீச்சாளர் யார்?
1. லசித் மலிங்கா
2. பியூஸ் சாவ்லா
3. ஹர்பஜன் சிங்

பட மூலாதாரம், SESHADRI SUKUMAR
3. முதல் பத்து ஐபிஎல் தொடர்களில் அதிக முறைகோப்பையை வென்ற அணி எது?
1. மும்பை இந்தியன்ஸ்
2. சென்னை சூப்பர் கிங்ஸ்
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
4. ஐபிஎல் கோப்பை வென்ற அணிகளில் அதிக முறை இருந்தவர் யார்?
1. கிரோன் பொல்லார்டு
2. மகேந்திர சிங் தோனி
3. ரோஹித் ஷர்மா
5. இதுவரை எத்தனை அயல்நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையை வென்றுள்ளனர்?
1. ஒன்று
2. இரண்டு
3. மூன்று
சரியான விடை
1. நான்கு (2016-ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் (2), ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்(1), கிங்ஸ் லெவன் பஞ்சாப்(1) அணிகளுக்கு எதிராக சதங்கள் அடித்துள்ளார்.)
2. லசித் மலிங்கா (இதுவரை 110 இன்னிங்ஸில் பந்துவீசி 154 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்)
3. மும்பை இந்தியன்ஸ் (2013, 2015, 2017 தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் கோப்பை வென்றுள்ளது)
4. ரோஹித் ஷர்மா (2009, 2013, 2015, 2017 ஆகிய சீசன்களில் கோப்பையை வென்ற அணியில் இருந்தவர் ரோஹித் ஷர்மா)
5. மூன்று (ஷேன் வார்னே, கில்கிறிஸ்ட், டேவிட் வார்னர் ஆகிய மூன்று ஆஸ்திரேலயா வீரர்களும் வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்று கோப்பையை வென்றவர்களாவர்).

பட மூலாதாரம், Marianna Massey
புள்ளிகள்
0 - நீங்கள் டக் அவுட்.
1-2 - அடுத்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்
3-4 - அபாரம். அடுத்தடுத்த குவிஸ் போட்டிகளில் சிக்ஸர் அடியுங்கள்
5 - அட்டகாசம். நீங்கள் சிக்ஸர் விளாசிவிட்டீர்கள் !
முந்தைய ஐபிஎல் குவிஸ் போட்டிகளில் பங்குபெற :
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












