பளுதூக்கும் பிரிவில் மீண்டும் தங்கம் வென்றது இந்தியா

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான 69 கிலோ பளு தூக்கும் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பூனம் யாதவ் தங்கம் வென்றுள்ளார்.
பெனாரசை சேர்ந்த பூனம், மொத்தம் 222 கிலோ எடையை தூக்கி இந்த பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில், 63 கிலோ பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார் பூனம்.
பளுதூக்கும் பிரிவில் இந்தியா இதுவரை ஐந்து தங்கப்பதக்கங்களையும், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








