35 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா: உலகின் அதிகவேக சதம் சமன்

இந்தூரில் இலங்கைக்கு எதிராக நடந்து வரும் டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேனான ரோகித்சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் வங்கதேசத்திற்கு எதிராக 35 பந்துகளில் சதமடித்தே இதுவரை டி20 போட்டிகளில் அதிகவேகமான சதமாக இருந்தது.

தனது இன்றைய சதத்தின் மூலம் இந்த சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ரோகித், 10 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகளை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் ரோகித் இன்று படைத்துள்ளார்.

முன்னதாக, இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச தீர்மானித்தது.

இன்றைய போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான லோகேஷ் ராகுல் 89 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து, இலங்கைக்கு 261 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :