You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கிரிக்கெட்: தோல்வித் துயரத்தை மீம்களில் கரைக்கும் இந்திய ரசிகர்கள் !
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தானிற்கு இடையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என எதிர்பார்த்த நிலையில் இந்தியா படு தோல்வி அடைந்தது.
கிரிக்கெட் போட்டி அதுவும் இந்தியா பாகிஸ்தான் போட்டி என்பதால் பரபரப்பிற்குப் பஞ்சமில்லை; அந்த பரபரப்பின் அளவிற்கு போட்டிகளை விமர்சித்து வந்த மீம்களும் சமூக ஊடகத்தில் பரவலாக வலம் வந்தன.
டாஸை வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. ஆனால் பாகிஸ்தானின் விக்கெட்டுகளை எடுக்க தவறியதால் பாகிஸ்தான் அதிக ரன்களை சேர்க்க நேர்ந்தது.
3 ரன்கள் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்த போதும், அந்த பந்து 'நோ-பால்' என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார்.
முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், ஒரு கட்டத்தில் நன்றாக அடித்து ஆடிக் கொண்டிருந்த பாண்ட்யா, ஜடேஜாவால் ரன் அவுட் ஆனார்.
கிரிக்கெட்டில் தோற்றால் என்ன ஹாக்கியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது. அதுதானே நமது தேசிய விளையாட்டு என்பதை போல் அமைந்த இந்த படம் நேற்று அதிகமாக டிவிட்டரிலும் முகநூலிலும் பகிரப்பட்டது.
எனவே கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் திடீரென தங்களின் கவனத்தை ஹாக்கியின் பக்கம் திருப்பி தங்கள் மனக்கவலைக்கு ஆறுதல் தேடினர்.
டிவிட்டரில் #INDvPAk என்ற ஹேஷ்டாக் நீண்ட நேரமாக டிரண்டிங்கில் இருந்தது.டிவிட்டர் பதிவுகள் மூலமாக, ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தையும், ஆதரவையும் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையுடனும் பலர் வெளிப்படுத்தினர்.
இது ஒரு விளையாட்டுதான் என்றும், அதில் வெற்றி தோல்வி என்பது சகஜமான ஒன்று, எனவே அதை தீவிரமாக எடுத்து கொள்ள கூடாது என்றும் ட்விட்டுகள் பகிரப்பட்டன; சிலர் பாகிஸ்தானிற்கு தங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்தனர்.
தொடர்பான செய்திகள்:
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்