கர்ப்பகாலத்தில் கடின விளையாட்டு - செரீனா ஒருவர் மட்டுமா ?
செரீனா வில்லியம்ஸின் கர்ப்பம் குறித்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கர்ப்பமாக இருந்தபோதே ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றுள்ளார் என்பதை பலரால் நம்பமுடியவில்லை.
ஆனால், அவர் ஒருவர் மட்டுமே விளையாட்டில் பங்குபெறும் கர்ப்பவதி அல்ல.
மலேசியாவை சேர்ந்த நுர் சுர்யானி டைபி என்ற வீராங்கனை 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்ஸில் ஏர் ரைஃபிள் போட்டியில் போட்டியிட்ட போது 8 மாத கர்ப்பமாக இருந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை அலிசியா மோன்டானோ 2014ல் இன்னும் 7 வாரத்தில் தன் முதல் குழந்தையை பிரசவிக்கவிருந்த நிலையில் அமெரிக்கா டிராக் மற்றும் ஃபீல்ட் சாம்பியன்ஷிப் 800 மீட்டர் போட்டியில் பங்கேற்றார்.

கனடா நாட்டை சேர்ந்த கர்லர் வீராங்கனை கிறிஸ்டி மூர் ஐந்த மாதங்கள் கர்ப்பமாக இருந்த போது, 2010ல் வான்கூவர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கெடுத்தார்.

அந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெள்ளிப்பதக்கத்தோடு வீடு திரும்பினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












