விராட் கோலி அதிரடியில் மொஹாலி போட்டியில் வென்றது இந்தியா

நியூசிலாந்துக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

விராட் கோலி

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, 26-வது சதம்; இறுதி வரை ஓயாமல் 154 ஓட்டங்கள்

286 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி 48.2 ஓவர்களில் 289 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

விராட் கோலியின் அதிரடியும், தோணியின் பொறுப்பான ஆட்டமும் இந்தியாவை வெற்றி கனியை சுவைக்கச் செய்தது.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 26-வது சதம் விளாசிய கோலி, இறுதி வரை ஆட்டமிழக்காமல் 154 ஓட்டங்கள் எடுத்தார்.

134 பந்துகளை சந்தித்த தோணி 80 ஓட்டங்கள் எடுத்தார்.

தோணி, விராட் கோலி

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, வலுவான அடித்தளத்துக்காக இணைந்த கைகள்

விராட் கோலி, தோணி இணை மூன்றாவது விக்கெட்டுக்கு 151 ஓட்டங்கள் எடுத்தது.

மிகவும் சிறப்பாக விளையாடிய விராட் கோலி இன்றைய போட்டியின் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

முன்னதாக, 49.4 ஓவர்களில் 285 ஓட்டங்களை நியூசிலாந்து எடுத்திருந்தது.

உமேஷ் யாதேவ், கேதர் ஜாதவ் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளையும், அமித் மிஷ்ரா, ஜெஸ்பிரித் பூம்ரா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

5 ஆட்டங்கள் கொண்ட இந்த ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 2:1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது.