தூக்கமின்மை: தினமும் ஐந்து மணி நேரம் தூங்கினால் என்ன நடக்கும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மிஷெல் ராபர்ட்ஸ்
- பதவி, டிஜிட்டல் சுகாதார ஆசிரியர்
தினமும் குறைந்தது 5 மணி நேரம் உறங்கும் பழக்கம், 50 வயதை கடந்தவர்களுக்கு நாள்பட்ட பலவித உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்தலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆரோக்கிய குறைவு தூக்கத்தை கெடுக்கும். ஆனால் மோசமான தூக்கம் உடல்நலக்குறைவுக்கான ஒரு முன்னேச்சரிக்கையாகவோ அல்லது ஆபத்தாகவோ இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆழ்ந்த தூக்கம் உடலையும், மனதையும் மீட்டெடுக்கவும், ஓய்வெடுக்கவும் , புத்துயிர் அளிக்கவும் உதவும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் "தங்க உறக்க எண்" என்று அழைக்கப்படும் 'இரவு தூக்க மணி நேர அளவு' ஏன் முக்கியமானது என தெளிவாக இல்லை.
பிரிட்டனின் பி எல் ஓ எஸ் மருந்துகள் ஆய்வு, அரசு ஊழியர்களின் உடல்நலம் மற்றும் தூக்கத்தை ஆய்வு செய்தது. சுமார் 8000 பேரிடம் ஒரு வாரத்தில் இரவில் எத்தனை மணி நேரம் உறங்குகிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. அவர்களில் சிலர் தூக்க கண்காணிப்பு கடிகாரம் அணிந்திருந்தனர்.
நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதயநோய் உள்ளிட்ட நாள்பட்ட உடல்நல பாதிப்புகள் குறித்து கடந்த 2 தசாப்தங்களில் அளிக்கப்பட தொடர் சிகிச்சைகளின் அடிப்படையில் அவர்கள் பரிசோதிக்கப்பட்டனர்.
50 வயதிற்குட்பட்ட 5 மணிநேரத்துக்கும் குறைவாக தூங்குபவர்களுக்கு, 7 மணி நேரம் தூங்குபவர்களை காட்டிலும் பல நோய்கள் தாக்கும் ஆபத்து 30 சதவீதம் கூடுதலாகும்.
50 வயதில் குறைந்த தூக்கம் என்பது இறப்பு அபாயத்துடன் தொடர்புடையது. குறிப்பாக நாள்பட்ட நோய்களின் பாதிப்புடன் தொடர்புடையது.


பொதுவாக 7 மணி அல்லது 8 மணி நேரம் உறங்க வேண்டும் என்று நிபுணர்களும், லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் பாரிஸ் சிட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர்.
நாம் ஏன் உறங்குகிறோம்?
இது குறித்து ஆராய்ச்சியாளர்களுக்கு நிச்சயமாக தெரியாவிட்டாலும், தூக்கம் என்பது மூளைக்கு நினைவுகளை செயல்படுத்த உதவுகிறது . மனநிலைக்கும் , மனச்செறிவு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கு தூக்கம் நல்லது என்பது தெளிவாகிறது.
தூக்கம் என்பது மூளை தனது கழிவுகளை அகற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும் .


பட மூலாதாரம், Getty Images
நல்ல தூக்கத்திற்கான சில எளிய வழிகள்:
- பகலில் சுறுசுறுப்பாகவும், துடிப்பாகவும் இருப்பதன் மூலம் உங்களது உடலை சோர்வடைய செய்யுங்கள். இரவில் படுக்கைக்கு செல்லும்போது உடலை தளர்வாக வைத்திருங்கள்.
- பகல் நேர குட்டித்தூக்கத்தை தவிருங்கள்
- நல்ல வழக்கமான இரவு நேரத்தை ஏற்படுத்தி, உங்கள் படுக்கையறை வசதியாகவும், உறங்குவதற்கு ஏதுவாகவும் இருப்பதை உறுதி செய்யுங்கள்
- நல்ல அடர்த்தியான திரைசீலைகள், கும்மிருட்டை ஏற்படுத்தும் தடுப்புகள், சௌகரியமான அறை வெப்பநில , படுக்கையில் ஸ்மார்ட் போன் உபயோகம் போன்ற இடையூறுகள் இல்லாதிருத்தல் போன்றவை நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
- காஃபின் மற்றும் ஆல்கஹாலை படுக்கைக்கு செல்லும் முன் பயன்படுத்துவதை குறையுங்கள் அல்லது தவிருங்கள்
- உங்களால் உடனடியாக உறங்க முடியாவிட்டால் மனதை கட்டாயப்படுத்தாதீர்கள் அல்லது விரக்தி அடையாதீர்கள். எழுந்து சிறிது நேரம் ஏதாவது செய்யுங்கள். அதாவது புத்தகம் படிப்பது போன்ற
- செயலில் ஈடுபடுங்கள். பின்னர் தூக்கம் வர ஆரம்பித்ததும் படுக்கைக்கு திரும்புங்கள்.
- நீங்கள் இரவு ஷிப்ட்டுகளில் வேலை செய்கிறீர்கள் என்றால் இரவு பணிக்கு முன் சிறிது நேரம் உறங்குங்கள். சிறிது தூக்கத்தை இரவில் மாற்ற முயற்சி செய்யுங்கள். இரவு பணி முடிந்து திரும்பி வந்ததும் சிறிது உறங்க தொடங்குங்கள். பின்னர் மாலையில் சீக்கிரம் படுக்கைக்கு செல்ல முற்படுங்கள்.


இது குறித்து சர்ரே ஸ்லீப் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் டெர்க் ஜான் டிஜ்க் பிபிசி செய்தியிடம் கூறியபோது, இரவு நேர பணி என்பது குறுகிய தூக்கத்திற்கு மட்டுமே வழிவகுக்கிறது என்றும் இது நல்லதல்ல என்றும் கூறினார் . பொதுவாக சிலருக்கு இது சரியாகப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
சிலர் ஏன் குறைவாக தூங்குகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வி. இதற்கு என்ன காரணம். இதற்கு நாம் ஏதாவது செய்ய முடியுமா? தூக்கம் என்பது நமது வாழ்க்கைமுறையை மாற்றக்கூடிய முக்கிய காரணியாகும் .
நீண்ட நேர கெட்ட தூக்கமும் நல்ல உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும் விஷயமாகும்.
பொது மருத்துவர்கள் இப்போதெல்லாம் தூக்க மாத்திரையை அரிதாகவே பரிந்துரைக்கின்றனர். பொதுவாக தூக்க மாத்திரைகள் பக்க விளைவுகள் மற்றும் சார்பு நிலையை ஏற்படுத்துகின்றன .
ஆனால் தூக்க பிரச்னைகள் பெரும்பாலும் தீர்க்கப்படுபவையாகவும், மருத்துவ ஆதரவு கொண்டவையாகவும் உள்ளன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













