லாங் மார்ச் 5பி: பூமியில் விழுந்த சீன ராக்கெட்டின் பாகங்கள் - விண்வெளி குப்பைகள் குறித்து எழும் கேள்விகள்

ஜூலை 24, 2022 அன்று தெற்கு சீனாவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ஏவுகணை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜூலை 24, 2022 அன்று தெற்கு சீனாவில் இருந்து ஏவுகணை ஏவப்பட்ட லாங் மார்ச் 5பி ஏவுகணை

சீன நாட்டின் ஏவுகணை ஒன்றின் எஞ்சிய துண்டுகள், இந்தியா மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் பூமியை நோக்கி விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாங் மார்ச் 5 ஏவுகணையின் பெரும்பாலான எஞ்சிய பகுதிகள் வளிமண்டலத்தில் எரிந்துவிட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியது.

முன்னதாக, மக்கள் வசிக்கும் பகுதியில் ஏவுகணையின் எஞ்சிய பகுதிகள் தரையிறங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று விண்வெளி நிபுணர்கள் கூறியிருந்தனர்.

ஏவுகணையின் 'முக்கிய நிலை' (core stage) கட்டுப்பாடில்லாமல் திரும்புவது விண்வெளி குப்பைகளை கையாளும் பொறுப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

சர்வதேச விதிமுறைப்படி, பூமிக்கு இத்தகைய பகுதிகள் மீண்டும் நுழையும் போது சிறிய துண்டுகளாக சிதைந்துவிட வேண்டும். இத்தகைய ஏவுகணைகளை வடிவமைக்க சீன விண்வெளி நிறுவனத்திற்கு நாசா முன்பு அழைப்பு விடுத்தது.

இந்நிலையில், ஒரு ட்வீட்டில், லாங் மார்ச் 5 ஏவுகணை நேற்று இரவு சுமார் 10 மணியளவில் (இந்திய நேரப்படி) இந்தியப் பெருங்கடலில் மீண்டும் நுழைந்தது' என்று அமெரிக்க விண்வெளி மையம் கூறியது.

இதற்கிடையில், சீனாவின் விண்வெளி மையம் 119 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 9.1 டிகிரி வடக்கு அட்சரேகை என மறு நுழைவு வழங்கியது. இது சுலு கடலில் உள்ள ஒரு பகுதியை ஒத்திருக்கிறது. இது வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் தீவின் கிழக்கு பகுதியான பலவானில் உள்ளது.

டியாங்காங் (Tiangong) எனப்படும் சீனாவில் உள்ள இன்னும் கட்டிமுடிக்கப்படாத விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் சமீபத்திய ஏவுகணைகள் கட்டுப்படுத்தப்பட்ட நுழையும் திறனைக் கொண்டிருக்கவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, லாங் மார்ச் 5 ஏவுகணை ஓர் ஆய்வக தொகுதியை டியாங்காங் நிலையத்திற்கு கொண்டு சென்றது. ஏவுகணை மீண்டும் நுழைவது தரையில் இருப்பவர்களுக்கு மிகச்சிறிய ஆபத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் அது பெரும்பாலும் கடலில் தரையிறங்கும் என்று சீன அரசு புதன்கிழமையன்று கூறியது.

ஆனால், 2020ம் ஆண்டு மே மாதம் ஐவரி கோஸ்ட் என்ற பகுதியில் உள்ள பொதுச்சொத்துகள் சேதமடைந்தன இதேப் போல், ஏவுகணையின் துண்டுகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு கீழே வருவதற்கான வாய்ப்பு இருந்தது.

அது தரைதட்டுவதற்குமுன், ஏவுகணையின் பகுதி பூமியைச் சுற்றி ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருந்தது, அங்கு அது கட்டுப்பாடற்ற மறு நுழைவை நோக்கி இழுத்துச் செல்லப்பட்டது.

ஏவுகணைகளைப் பொருத்தவரையில், இது அதிகம் செலவாகும் ஒன்றாக இருக்கலாம், ஏனெனில், வரலாற்று ரீதியாக வீட்டு எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும் டைட்டானியம் போன்ற பொருட்கள் எரிவதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. குறிப்பாக 25 டன்களுக்கு மேல் எடையுள்ள லாங் மார்ச் 5 ஏவுகணையில், அத்தகைய பொருட்களின் அளவும் ஒரு பிரச்னையாகும்.

லாங் மார்ச் 5பி ஏவுகணை

இதேப் போன்ற வடிவமைப்பில், லாங் மார்ச் 5 ஏவுகணை இரண்டு முறை விண்ணில் செலுத்தப்பட்டது. ஒன்று - 2020ம் ஆண்டு மே மாதம், மற்றொன்று 2021 மே மாதம். இந்த இரண்டு முறையும் டியாங்காங் விண்வெளி மையத்தின் வெவ்வெறு கூறுகளை அது ஏந்தி சென்றது.

இந்த இரண்டு சமயங்களிலும் ஏவுகணையின் 'முக்கிய நிலை' (core stage) குப்பைகள் ஐவரி கோஸ்ட் மற்றும் இந்தியப் பெருங்கடலில் மீண்டும் பூமியில் கொட்டப்பட்டன.

இந்த சம்பவங்கள் மூலம் யாருக்கும் காயமோ அல்லது எந்த சேதமோ ஏற்படவில்லை. ஆனால் பல விண்வெளி மையங்கள் இந்த செயல்பாட்டை விமர்சித்தது.

செவ்வாய்க்கிழமையன்று, சீன அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் , லாங் மார்ச் 5 ஏவுகணைக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது என்று மேற்கத்திய ஊடகங்களை குற்றம் சாட்டியது.

சமீபத்தில் ஏவப்பட்டது ஏவுகணை, இந்த மூன்று தொகுதிகளில் இரண்டாவதாக சீனாவின் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு சென்றது.

17.9மீட்டர் நீளமுள்ள வென்டியன் ஆய்வகக் கூறு, இரண்டு ஆய்வகங்களில் முதலவதாக நிலையத்தை அடையும். கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தியான்ஹே கூறு ( Tianhe module) மூலம் விண்வெளி நிலையத்தை உருவாக்கத் தொடங்கியது.

2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் டியாங்காங் நிலையம் முழுவதும் கட்டிமுடிக்கப்படும் என சீனா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: