அறிவியல் அதிசயம்: இறந்த டைனோசரின் புதைபடிவம் கிடைக்க காரணமான சிறுகோள் மோதல்

பட மூலாதாரம், BBC/JOHN SAYER
- எழுதியவர், ஜோனாதன் அமோஸ்
- பதவி, அறிவியல் நிருபர்
டைனோசரின் பாதுகாக்கப்பட்ட கால் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள தானிஸ் புதைபடிவ தளத்தில் கிடைத்து வரும் குறிப்பிடத்தக்க கண்டுப்பிடிப்புகளில் இதுவும் ஒன்று. இந்த கண்டுப்பிடிப்பு, தோலுடன் கூடிய கால் பகுதியைக் கொண்டது.
இந்த புதைபடிவம் எந்த நிலையில் உள்ளது என்பது ஆச்சரியமடைய வைக்கும் விஷயமல்ல. இது பழங்கால மாதிரிகளுக்கு சான்றாக உள்ளது என்று கூறப்படுகிறது.ஒரு பெரிய அளவிலான சிறுகோள் பூமியைத் தாக்கிய அதே நாளில், தானிஸ் உயிரினங்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டன என்பது கூற்று.66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் காலம் முடிந்து பாலூட்டிகளின் காலம் தொடங்கிய காலம் அது. இந்த மாற்றம் ஏற்படுவதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காலத்திலிருந்து, பாறைகளில் மிகக் குறைவான டைனோசர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பேரழிவிலிருந்து ஒரு மாதிரி கண்டுப்பிடிக்கப்பட்டது என்பதே அபூர்வமானது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
இது குறித்து, ஏப்ரல் 15ஆம் தேதி சர் டேவிட் அட்டன்பரோ வழங்கும் நிகழ்ச்சிக்காக, தானிஸ் பகுதியில் பிபிசி மூன்று வருடங்களுக்கு படப்பிடிப்பு நடத்தியுள்ளது. இந்த கண்டுப்பிடிப்புகளை சர் டேவிட் மறுஆய்வு செய்வார். அதில் பல முதன்முறையாக பொது மக்கள் பார்வைக்கு ஒளிபரப்பப்படும். கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலுடன், சிறுகோள் மோதிபோது ஏற்பட்ட விளைவாக வானில் சிதறி விழுந்து இடிபாடுகளுக்கு மத்தியில் சுவாசித்து சிதறிக் கிடந்த மீன் பாகங்களும் காணப்பட்டன.
இந்த கண்டுப்பிடிப்புகளில் மரக் கம்பத்தால் வளைந்த ஓர் ஆமையின் புதைபடிவம்; சிறிய பாலூட்டிகளின் எச்சங்கள் மற்றும் அவை செய்த பொந்துகள்; கொம்பு கொண்ட ட்ரைசெர்ராடாப்ஸின் (triceratops) தோல், பறக்கும் ப்டேரோசாரின் முட்டைக்குள் இருக்கும் கரு; குறுங்கோள் தாக்கத்தில் இருந்து பிரிந்த துண்டு ஆகியவையும் உள்ளன.
"ஒரு தருணத்திற்கு பின் அடுத்து என்ன நடந்தது என்ற விவரங்களை கூறும் பல விஷயங்கள் எங்களிடம் உள்ளன. அது கிட்டதட்ட திரைப்படங்களில் வரும் காட்சிகள் போலவே இருந்தது. ஒரு சமயத்தில் நாங்கள் பாறை உள்ளதை பார்த்தோம். மற்றொரு இடத்தில் புதைப்படிவங்களை பார்த்தோம். அவை அந்த காலத்தை கண் முன் காட்டியது", என்று பிரிட்டனில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மாணவர் ராப்ர்ட் டிபல்மா தெரிவிக்கிறார். அவர் இந்த தானிஸ் தோண்டும் பணியில் ஈடுப்பட்டுள்ள குழுவை வழிநடத்துகிறார்.

ஏறக்குறைய 12 கி.மீ பரப்பளவு உள்ள ஒரு விண்கல், நம் கிரகத்தை கடைசி பெரும் அழிவை ஏற்படுத்தி தாக்கியது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
யுகடன் தீபகற்பத்தில் உள்ள மெக்சிகோ வளைகுடா, இந்த தாக்குதல் நடந்த தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அது தானிஸிலிருந்து சுமார் 3,000 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால் அந்த நிகழ்வில் ஏற்பட்ட தாக்கம், அதன் அழிவை வெகு தொலைவு வரை உணரப்பட்டது.
வடக்கு டகோட்டா புதைபடிவ தளம் பல்வேறு குவியல் கொண்ட தளம். விலங்குகள் மற்றும் தாவரங்களின் எச்சங்கள் கற்பனைக்கு எட்டாத வகையில், நில அதிர்வுகள் மூலம் வரிசையாக ஏற்பட்ட ஆற்று நீரின் அலைகளால் வண்டல் குப்பையாக ஒன்றாக சேர்ந்ததாக தெரிகிறது. நிலத்தை அடிப்படையாகக் கொண்ட உயிரினங்களுடன் நீர்வாழ் உயிரினங்கள் கலக்கப்பட்டன.
இந்த புதைபடிவ எச்சங்களில் ஸ்டர்ஜன் மற்றும் துடுப்பு மீன்கள் முக்கியமானவை. அவற்றின் செதில்களில் சிறிய துகள்கள் சிக்கியுள்ளன. அந்த துகள்கள் பூமியில் விழுந்தபோது ஏற்பட்ட தாக்கத்திலிருந்து சிதறி உருகிய பாறையின் பாகங்களாக இருக்கலாம். அந்தத் துகள்கள் ஆற்றுக்குள் விழுந்தபோது, அவற்றை மீன்கள் சுவாசித்திருக்கலாம்.
இவை, வேதியியல் ரீதியாகவும் கதிரியக்ககால அளவை மூலமாக மெக்சிகோவில் தாக்கம் நிகழ்ந்த இடத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் பாதுகாக்கப்பட்ட மர பிசினில் இருந்து மீட்கப்பட்ட இரணு துகள்களில் பூமிக்குப் புறம்பான தோற்றத்தைக் குறிக்கக்கூடிய சிறு சேர்ப்புகளும் உள்ளன.
"இந்தச் சிறிய கண்ணாடி கோளங்களுக்குள் சேர்ப்புகள் இருப்பதை நாங்கள் கவனித்தபோது, ஆக்ஸ்ஃபோர்டுக்கு அருகிலுள்ள டயமண்ட் எக்ஸ்-ரே சின்க்ரோட்ரானில் அவற்றை வேதியியல் ரீதியாக பகுப்பாய்வு செய்தோம்," என்று மான்செஸ்டரில் டிபால்மாவின் முனைவர் பட்ட மேற்பார்வையாளரான பேராசிரியர் பில் மேனிங் விளக்குகிறார்.

"எங்களால் வேதியியலைப் பிரித்து, அந்தப் பொருளின் கலவையை அடையாளம் காண முடிந்தது. அந்த ஆய்வில் இருந்து அனைத்து ஆதாரங்களும் அனைத்து வேதியியல் தரவுகளும் நாம் தாக்கத்தை ஏற்படுத்திய, டைனோசர்களுக்கு முடிவு கட்டிய சிறுகோள் பகுதியைப் பார்க்கிறோம் என்பதை உறுதியாகக் கூறுகின்றன.தானிஸ் என்ற பகுதி இருப்பது குறித்தும், அவை கூறிய கூற்றுகளும் கடந்த 2019 ஆம் ஆண்டு, நியூயார்க்கர் இதழில், முதன்முறையாக பொதுவெளியில் வெளியானது. அப்போது அது பேரார்வத்தை தூண்டியது. பொதுவாக, புதிய கண்டுப்பிடிப்புகள் குறித்து அறிவியல் சார்ந்த இதழ்களில் வெளியிடபடுவதேயே அறிவியல் எதிர்பார்க்கும். ஒரு சில மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆவணங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. மேலும் புதைபடிவங்களை பிரித்தெடுத்தல், தயாரித்தல் மற்றும் விவரிக்கும் நுட்பமான செயல்முறையின் மூலம் தோண்டும் பணியில் ஈடுப்பட்டுள்ள குழு பணியாற்றிவருகின்றனர். அதனால், இதுப்போன்ற கண்டுப்பிடிப்புகள் மேலும் எதிர்பார்க்கலாம் என்று அக்குழு உறுதியளித்துள்ளது.
இதன் தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்க, பிபிசி பல கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்ய வெளி ஆலோசகர்களை அழைத்தது.
லண்டனின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் பாரெட் கண்டுபிடிக்கப்பட்ட காலைப் பார்த்தார். அவர் ஆர்னிதிசியன் (பெரும்பாலும் தாவரங்களை உண்ணும் )டைனோசர்களில் நிபுணர்.
"இது ஒரு தெசெலோசரஸ் வகையைச் சேர்ந்தது . இந்த வகையான டைனோசர்களின் தோல் எப்படி இருந்தது என்பதற்கான முந்தைய பதிவுகள் எங்களிடம் இல்லை. மேலும் இந்த விலங்குகள் பல்லிகளைப் போல மிகவும் செதிளாக இருந்தன என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. அவை இறைச்சி உண்ணும் வகையை சேர்ந்த மற்ற விலங்குளை போல இறகுகள் கொண்டில்லை.", என்றார்.
"இது ஒரு விலங்கு போல் தெரிகிறது. அதன் கால் மிக விரைவாக வெட்டப்பட்டன. காலில் நோய் இருந்ததற்கான எந்த ஆதரமும் இல்லை. வெளிப்படையான நோய்க்குறிகள் எதுவும் இல்லை. கடிபட்ட அடையாளங்கள் போன்ற எந்த தடயமும் இல்லை," என்று அவர் என்னிடம் கூறுகிறார்."ஆதனால் , இது ஏறக்குறைய உடனடியாக இறந்த விலங்காகவே இருக்ககூடும் என்பது எங்களின் சிந்தனை.", என்கிறார்.

ஒரு பிரளயம் ஏற்பட்ட விளைவாக, இந்த டைனோசர் உண்மையில் குறுங்கோள் தாக்கிய நாளில் இறந்ததா என்பது இங்கு மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தோண்டப்பட்ட வண்டல்களில், இந்த கால் பகுதி இருக்கும் நிலையைக் கருத்தில் கொண்டு, தானிஸ் குழு அவ்வாறு நிகழ்த்திருக்கலாம் என்று நினைக்கிறது.அப்படியானால், அது மிகவும் கண்டுபிடிப்பாக இருக்கும்.
ஆனால், எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஸ்டீவ் புருசாட்டே, இன்றைய நிலையில், தனக்கு அதில் சந்தேகம் இருப்பதாகக் கூறுகிறார்.அவர் பிபிசியின் வெளி ஆலோசகர்களில் ஒருவராக செயல்பட்டார். அவர் மேலும் மதிப்பாய்வு செய்யப்பட்ட பல கட்டுரைகளில் முன்வைக்கப்பட்ட வாதங்களைக் காண விரும்புகிறார். மேலும் சில தொல்லுயிரியல் விஞ்ஞானிகள் மிகவும் குறிப்பிட்ட நிபுணத்துவம் கொண்டவர்கள், தங்கள் சுயாதீன மதிப்பீட்டை தளத்திற்குச் சென்று அளிக்க வேண்டும்.
உதாரணமாக, குறுங்கோள் தாக்குதலுக்கு முன்னர் இறந்த, விலங்குகள், அந்த தாக்குதல் மூலம் வெளிவந்திருக்கலாம். பின்னர் அவற்றின் மரணங்கள் ஒரே நேரத்தில் நேர்ந்தது போல தோன்றும் வகையில் மீண்டும் புதைத்திருக்கலாம் என்று பேராசிரியர் புருசாட்டே கூறுகிறார்.அந்த மீன்கள் அவற்றின் செதிள்களில் சிறுருளைகளை கொண்டவை. அவை நிச்சயமாக குறுங்கோளை தாக்குதல் மூலம் வந்திருப்பவை. ஆனால் இதில் வேறு சில கூற்றுகளும் உள்ளன. இன்னும் வழங்கப்படாத பல சூழ்நிலை ஆதாரங்கள் அவர்களிடம் உள்ளன என்று நான் கூறுவேன், " என்றார்.
இந்த கண்டுபிடிப்புகளில் சிலவற்றிற்கு, அவை தாக்குதல் ஏற்பட்ட நாள் அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்திருக்கின்றன என்பது முக்கியமா? டெரோசர் முட்டைக்குள் ஒரு டெரோசர் கருவுடன் இருப்பது மிகவும் அரிதானது; வட அமெரிக்காவிலிருந்து வேறு எங்கும் இதுப்போல இல்லை. இந்த கண்டுப்பிடிப்பு குறுங்கோள் பற்றியது மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை", என்கிறார்.

டெரோசார் முட்டை தனித்துவமானது என்பதில் சந்தேகம் இல்லை.
நவீன எக்ஸ்ரே தொழில்நுட்பம் மூலம் முட்டை ஓட்டின் வேதியியலையும் இதர பண்புகளையும் கண்டறிய முடியும். இது கடினமானதாக இருந்ததைவிட தோல் போலவே இருந்திருக்கலாம். இது ஸ்டெரோசார் தாயின் முட்டையை ஆமை போல மணல் அல்லது வண்டலில் புதைத்து வைத்ததைக் குறிக்கலாம்.எக்ஸ்ரே டோமோக்ராஃபி மூலம் ஸ்டெரோசார் குஞ்சுகளின் எலும்புகளைப் பிரித்தெடுப்பதும் அவற்றை அச்சு எடுப்பதும் உயிரினம் எப்படி இருந்திருக்கும் என்பதை மறுகட்டமைப்பு செய்வதும் சாத்தியமாகும். டிபால்மா இதைச் செய்துள்ளார்.
குட்டி ஸ்டெரோசார் அநேகமாக ஒரு வகை அஜ்தார்கிட் என்ற பறக்கும் ஊர்வன வகைப்பாட்டின் ஒரு பிரிவாக இருக்கலாம், அதன் வயது வந்த இறக்கைகள் ஒரு நுனியிலிருந்து மற்றொரு நுனி வரை 10 மீட்டருக்கும் அதிகமான நீளம் வரை இருக்கும்.
புதன்கிழமையன்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தில் பார்வையாளர்களுக்கு டானிஸ் கண்டுபிடிப்புகள் குறித்து டிபால்மா சிறப்பு விரிவுரை வழங்கினார். அவரும் பேராசிரியர் மானிங்கும் மே மாதம் ஐரோப்பிய புவி அறிவியல் யூனியன் ஜெனரல் சபையில் தங்களது சமீதத்திய தரவுகளை வழங்குவார்கள்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












