மியூகோர்மைகோசிஸ் காற்றில் பரவுமா? ஒரே முகக்கவசத்தை அதிக நாட்கள் பயன்படுத்துவது சரியா?

மியூகோர்மைகோசிஸ்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் 8,848 பேர் வரை மியூகோர்மைகோசிஸ் என்கிற கருப்புப் பூஞ்சையால் பதிக்கப்பட்டிருப்பதாக, இந்தியாவின் ரசாயனம் மற்றும் உரத் துறைக்கான இணை அமைச்சர் சதானந்த கெளடா செய்தி முகமைகளிடம் கூறியுள்ளார்.

இந்த நோயாளில் குஜராத்தில் 2,281 பேரும், மகாராஷ்டிரத்தில் 2,000 பேரும் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் 40 பேர் மியூகோர்மைகோசிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என ஏ.என்.ஐ முகமை குறிப்பிட்டு இருக்கிறது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள், புற்றுநோய், ஹெச்.ஐ.வி போன்ற உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் நோய் உள்ளவர்களுக்கு இந்த பூஞ்சை பரவினால், அவர்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். பிபிசியின் முன்பு வெளியான செய்தி ஒன்றின்படி இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இறக்கும் விகிதம் சுமார் 50 சதவீதமாக உள்ளது.

தற்போது அதிவேகமாக இந்தியாவில் பரவி வரும் இந்த பூஞ்சை நோய் குறித்து மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள்? இதன் அறிகுறிகள் என்ன? என்ன காரணத்தினால் இத்தனை பேருக்கு பரவுகிறது? இந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை காண்பதற்கு முன், மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன? என்பதை பார்த்துவிடுவோம்.

மியூகோர்மைகோசிஸ்

மியூகோர்மைகோசிஸ் இப்போது புதிதாக வந்த ஒரு விஷயமல்ல. ஒருவகையான பூஞ்சைக் காளானால் ஏற்படும் இந்த தொற்று, 2002ஆம் ஆண்டிலேயே கண்டறியப்பட்ட ஒன்றுதான். அரிதாகவே இந்நோய் மனிதர்களுக்கு ஏற்படும்.

மண், தாவரங்கள், உரம், அழுகும் பழங்கள் மற்றும் காய்கறிகளில் பொதுவாகக் காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. இந்த தொற்று ஏற்பட்ட பின்னர் பூஞ்சை சைனஸ், மூளை, நுரையிரல் எனப் பரவி உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.

Banner image reading 'more about coronavirus'
Banner

மியூகோர்மைகோசிஸ் அறிகுறிகள் என்ன?

"கொரோனா உடன் தொடர்புடைய மியூகோர்மைகோசிஸ் விவகாரத்தில், மூக்கில் வரும் வலி அல்லது அடைப்புதான் (Stuffiness) முதல் அறிகுறி" என கூறியுள்ளார் மேதாந்தா மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நரேஷ் ட்ரேஹன்.

"கன்னத்தில் ஏற்படும் வீக்கம், வாய்க்குள் ஏற்படும் பூஞ்சை திட்டுகள், கண் இமைகளில் ஏற்படும் வீக்கம் போன்றவைகளும் இதன் அறிகுறிகள் தான்" என கூறியுள்ளார். அதோடு இதற்கு கட்டாயமாக மருத்துவ சிகிச்சை அவசியம் எனவும் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

காற்றின் மூலம் பவரலாம்

"மியூகோர் காற்றில் பரவலாம்" என கூறியுள்ளார் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர், உட்சுரப்பியல் மற்று வளர்சிதை மாற்றத் துறைத் தலைவர் நிகில் டாண்டன். மேலும் "பரவும் மியூகோர் நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் செய்யாது. மியூகோர் நுரையிரல் வரை பரவலாம், ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு" என ஏ.என்.ஐ முகமையிடம் குறிப்பிட்டிருக்கிறார் நிகில் டாண்டன். "ஒருவேளை நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாக இருந்தால், அதை எதிர்த்து போரிடும்" எனவும் கூறியுள்ளார்.

யார் எல்லாம் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது?

"மியூகோர்மைகோசிஸ் பூஞ்சை தொற்று புதியதல்ல என்றாலும், இந்த அளவுக்கு அதிகமாக பரவியதில்லை. இத்தொற்று ஏன் இந்த அளவுக்கு அதிகமாக பரவுகிறது எனத் தெரியவில்லை. ஆனால் பரவலுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என கருதுகிறோம்" என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் பேராசிரியர் மருத்துவர் சரத் சந்திரா கூறுகிறார்.

அதில் அவர் முதலில் பட்டியலிடும் காரணம் "கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய்". அதனைத் தொடர்ந்து டொசிலிசுமாப் (Tocilizumab) உடன் தொடர்ந்து ஸ்டிராய்டுகளை எடுத்துக் கொள்வது, வென்டிலேட்டரில் இருப்பது, ஆக்சிஜன் எடுத்துக் கொள்வது என அடுத்தடுத்த காரணங்களைக் கூறுகிறார்.

"கொரோனா சிகிச்சை முடிந்து 6 வார காலத்துக்குள், மேலே குறிப்பிட்ட விஷயங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் கூட, அவர்கள் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது" என்கிறார் மருத்துவர் சரத் சந்திரா.

முகக்கவசம் கூட பூஞ்சைக்கு வாழ்விடமாகலாம்

மியூகோர்மைகோசிஸ்

பட மூலாதாரம், Getty Images

ஒரே முகக்கவசத்தை 2 - 3 வார காலத்துக்கு தொடர்ந்து பயன்படுத்துவது கருப்புப் பூஞ்சைக்கான ஏற்ற சூழலாக அமையலாம் எனவும் எச்சரித்து இருக்கிறார். எனவே முகக்கவசத்தை அடிக்கடி மாற்றுவது, துவைத்து சுத்தம் செய்வது நல்லது என்பதை கவனித்தில் கொள்ளவும்.

மருத்துவர் ஆலோசனையின்றி ஸ்டீராய்டுகள் கூடாது

அதே போல "பூஞ்சைகள் நெருக்கடியான இடத்திலும், ஈரப்பதமுள்ள இடத்திலும் எளிதிலும் வளரும். எனவே உங்கள் சுற்றுப் புறத்தை அடிக்கடி தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர்சாதனப் பெட்டிகளில் பல நாட்களாக வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிருங்கள். கூடுமானவரை சுத்தமான புதிய பழங்களை சாப்பிடுங்கள்" என அறிவுறுத்தி இருக்கிறார் டெல்லியில் இருக்கும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுரேஷ் குமார்.

மிக முக்கியமாக, மருத்துவரின் ஆலோசனையின்று கொரோனாவைக் கட்டுப்படுத்த ஸ்டீராய்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார் மருத்துவர் சுரேஷ் குமார்.

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட வேறு சில ஆய்வுகளில் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாவர்கள், அதற்கு முன்பு கொரோனா சிகிச்சை பெற்றபோது அவர்களுக்கு ஸ்டீராய்டுகள் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தூர் நகரில் உள்ள 201 மியூகோர்மைகோசிஸ் நோயாளிகள் குறித்த தரவுகளை வைத்து இந்த நடந்துள்ளது. ஆய்வுக்கு கணக்கில் கொள்ளப்பட்ட நோயாளிகள் ஸ்டீராய்டு சிகிச்சை பெற்றவர்களாக மட்டும் அல்லாமல், அவர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வேறு ஒரு நோய் இருந்துள்ளது முக்கியமாக நீரிழிவு நோயால் அவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

கொரோனா சிகிச்சை காரணமா?

கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பரவ, நிறைய ஸ்டீராய்டு பயன்படுத்தி கொரோனா சிகிச்சையளிப்பது தான் காரணம் என சில செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன.

"மியூகோர்மைகோசிஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தான் காரணம் என்று கூறுவது சரியல்ல. புதிய கொரோனா திரிபு கணையத்தில் இருக்கும் பீட்டா செல்களை பாதிக்கிறது. எனவே ரத்தத்தில் சர்க்கரை அளவும் அதிகரிக்கிறது" என விளக்கமளித்துள்ளார் மருத்துவ ஆய்வு மற்றும் கல்வி இயக்குநரகத்தின் இயக்குநர் தாத்யா ராவ் லஹானா.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

குழந்தைகளும் பாதிப்பு

குஜராத் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்த 15 வயது சிறுவன் ஒருவருக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டதாகவும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் தற்போது நலமாக இருப்பதாகவும், அவரை 2 அல்லது 3 நாட்களுக்குள் டிஸ்சார்ச் செய்ய எதிர்பார்ப்பதாகவும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அபிஷேக் பன்சால் ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.

என்ன தான் தீர்வு

"மியூகோர்மைகோசிஸ் விவகாரத்தில், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஸ்டீராய்டு கொடுக்கப்படுபவர்களின் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிப்பது, ஸ்டீராய்டு வழங்கும் நேரம் மற்றும் அளவை கவனத்தில் கொள்வது ஆகியவை மிகவும் அவசியம்" என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார்.

மியூகோர்மைகோசிஸால் பாதிக்கப்பட்டவர்களை சரியான நேரத்தில் கண்டு பிடித்துவிட்டால், அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திவிடலாம் என மருத்துவர்கள் செய்தி முகமைகளிடம் கூறியுள்ளனர்.

தகவல் தொகுப்பு:கெளதமன் முராரி, பிபிசி தமிழுக்காக

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :