உலக இதய தினம்: உங்கள் இதயத்தை பாதுகாக்க 6 முக்கிய கேள்வி பதில்கள்

ஆண்டுதோறும் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதய நோய்களில் இருந்து தப்பிப்பது மற்றும் இதயத்தை நலமுடன் பாதுகாப்பது ஆகியவை குறித்த முக்கியக் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது பிபிசி தமிழின் இந்தத் தொகுப்பு.

1. இதய நோயில் இருந்து தப்பிப்பது எப்படி?

நீண்ட நாட்கள் வாழ வேண்டுமா? புற்றுநோய் மற்றும் இதய நோய் ஏற்படும் ஆபத்துகளை குறைக்க வேண்டுமா?

அப்படியென்றால், ஆய்வாளர்கள் என்ன தீர்வு சொல்கிறார்கள் என்பதை கீழே படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

2. இதயத்தின் நலனுக்கு எந்த எண்ணெய் நல்லது?

உங்கள் உணவை சமைக்கப் பயன்படுத்தப்படும் உங்கள் இதயத்தின் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

எண்ணெய் வகைகள் கொழுப்பு மற்றும் கலோரிகள் நிறைந்திருந்தாலும், ரசாயன ரீதியில் நமது உடல் நலத்தின் மீதான அவற்றின் தாக்கம் மிகவும் மாறுபட்டதாக இருக்கலாம்.

3. மாரடைப்பு எவ்வாறு உண்டாகிறது? தடுக்க என்ன வழி?

உலகில் ஏற்படும் இறப்புகளில் சுமார் மூன்றில் ஒரு இறப்புக்குக் காரணம் மாரடைப்பு. பெரும்பாலும் முதியவர்களுக்கே மாரடைப்பு ஏற்பட்டாலும், எல்லா வயதினருக்கும் மாரடைப்பு வரலாம்.

4. ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் - வேறுபாடு என்ன?

கார்டியாக் அரெஸ்ட்(இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது?

5. இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது?

இரவில் நமக்கு தூக்கம் வருவதற்கு நமது உடல் கடிகாரம் அல்லது சிக்கேடியான் ரிதமே காரணம். ஆனால், நமது உடல் அசைவுகள் செயல்படும் விதத்தில் அது பெரிய அளவில் மாற்றங்களை செய்யும் வல்லமை கொண்டுள்ளது.

6. ஒயின் குடித்தால் இதயத்துக்கு நல்லதா?

பல ஆராய்ச்சியாளர்கள் உடல் ஆரோக்கியத்து பலன் அளிக்கும் நலன்கள் அனைத்தும் ரெட் ஒயினில் தான் உள்ளது என நம்புகின்றனர்.

7. போனஸ் கேள்வி

ஆறு கேள்வி பதில்களின் தொகுப்பு என்று கூறிவிட்டு ஏழாவது கேள்வி உள்ளது என்று நினைக்கிறீர்களா?

இது போனஸ் கேள்வி. இந்த பதிலும் உங்கள் இதயத்துக்கு உதவலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :