You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒயின் குடித்தால் இதயத்துக்கு நல்லதா? ஆய்வுகள் சொல்வது என்ன?
ஒயின் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா? ஒயின் குடித்தால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என நாம் நம்புகிறோம்.
பொதுவாக ரெட் ஒயின் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை என பலர் கூறுகின்றனர். நோய் உண்டாக காரணமாக இருக்கும் உடல் இடையை ஒயினில் உள்ள antioxidant (ஆன்டிஆக்ஸிடன்ட்) வேதிப்பொருள் குறைக்கும். ஒயிட் ஒயினை விட ரெட் ஒயினில் ஆன்டிஆக்ஸிடன்ட் 10 சதவிகிதம் அதிகம் உள்ளது.
யூனிவர்சிட்டி ஆஃப் மிலனில் உள்ள ஆல்பர்டோ பெர்டெல்லி என்ற ஆராய்ச்சியாளர், குறைந்த அளவில் ஒயின் பருகுவது, இதய நோய் பாதிப்பை குறைக்கும் என்று கூறுகிறார். மேலும் மத்திய தரை கடை நாடுகளை போல ஒரு நாளுக்கு உணவுடன் சேர்த்து 160 மில்லி லிட்டர் ஒயின் பருகலாம் என கூறுகிறார் அவர்.
பல ஆராய்ச்சியாளர்கள் உடல் ஆரோக்கியத்து பலன் அளிக்கும் நலன்கள் அனைத்தும் ரெட் ஒயினில் தான் உள்ளது என நம்புகின்றனர்.
மேலும் ரெட் ஒயினில் இருக்கக்கூடிய வேதிப்பொருட்களில், அல்சீமர் நோய்க்கு எதிரான பாதுகாப்புதன்மையும் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.
ரெட் ஒயின் குடிப்பவர்களுக்கு உடல் எடைக்கு ஏற்ற உயரம் சரியாக இருக்காது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் தான் ரெட் ஒயினை அளவோடு பருகுவது ஆரோக்கியமானது என கருதப்படுகிறது. மேலும் ரெட் ஒயின் குடிப்பது உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது என்பது உண்மை அல்ல, ஆனால், ரெட் ஒயின் குடிக்கும் சிலர் ஆரோக்கியமாக இருக்கின்றனர் என பெர்டெல்லி கூறுகிறார்.
2016ம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில், ஆறு மாதத்திற்கு, மாலை உணவுடன் ஒரு கிளாஸ் ரெட் ஒயின் பருகியவர்களுக்கு ரத்த அழுத்தத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
லண்டனின் கிங்ஸ் கல்லூரியை சேர்ந்த ஆய்வாளர் கரோலின் லி ராய் கூறுகையில் ரெட் ஒயின் ஆரோக்கியத்திற்கு விருப்பமான பானமாக இருக்கலாம், ஆனால் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
மேலும் அவர் கூறுகையில், மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என நமக்கு தெரியும், ஆனால் ரெட் ஓயினும் நன்மை பயக்கும் ஒரு மதுபானம் என்று தான் கண்டறியப்பட்டது. எனவே ரெட் ஒயின் பருக சொல்லி நான் யாருக்கும் பரிசீலனை செய்ய மாட்டேன் என்றார்.
உலகின் மிகவும் கடுமையானதாக கருதப்படும் வழிகாட்டு விதிமுறைகளான பிரிட்டன் விதிமுறைகளின்படி 14 யூனிட்களுக்கு மேல் ஒருவர் மதுபானம் பருகக்கூடாது. அதே சமயத்தில் ஒயின் குறித்து ஆராய்ச்சிகள் கூறும் எந்த நன்மைகளும் நமக்கு புதிதல்ல, ஆரோக்கியமானதாக இருந்தாலும் தவிர்ப்பது நல்லது என்றே பலர் கூறுகின்றனர். ஆனால் மது அருந்துபவர்களுக்கு, ஒயின் ஒன்றே ஆரோக்கியமான பானமாக விளங்குகிறது.
எனவே ஒயின் குடித்தால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதல்ல, உடல் ஆரோக்கியத்தை பெருக்குவதற்கு பல வழிகள் உள்ளது. ஆனால் மக்களில் பலர் தங்கள் வேலை பளுவை முடித்து விட்டு அரை பாட்டில் ஒயின் குடிப்பது, உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது என நம்புகின்றனர். ஆனால் அது உண்மை அல்ல என்றும் பெர்டெல்லி கூறுகிறார்.
உண்மையில் உங்கள் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேண்டுமா ?
நிறைய பழம் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளுங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், ஒரு கிளாஸ் ஒயின் குடிப்பது மட்டும் வழி அல்ல என்று அவர் பரிந்துரைக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: