உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்த ஆஸ்திரேலியா

அதிவேக இணைய சேவை

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியாவில் அதிவேக இணைய சேவை பதிவுசெய்யப்பட்டதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோனஷ் பல்கலைக்கழகம், ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம், மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் தரவுகள் இணைய வேகத்தை விநாடிக்கு 44.2 டெராபைட்ஸ் என பதிவு செய்தன.

இந்த வேகத்தில், பயனாளர்கள் 1,000 ஹை டெஃபினிஷன் படத்தை ஒரு விநாடிக்குள் பதிவிறக்கம் செய்ய முடியும்.

பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின் சமீபத்தில் செய்த ஆய்வின் தரவுகள் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் ஆகும்.

ஆஸ்திரேலியா, இணைய சேவை வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படும் நாடுகளில், எப்போதும், ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாகத்தான் இருக்கும். மேலும் அங்கே இணைய சேவை மெதுவாக உள்ளது என்ற புகாரே பயனாளர்களிடமிருந்து அடிக்கடி வரும்.

Banner image reading 'more about coronavirus'
Banner

இந்த புதிய அதிவேக இணைய சேவை ஏற்கனவே இருந்த தகவல் பரிமாற்ற சாதனங்களில் உள்ள 80 லேசர்களுக்கு பதில், மைக்ரோ-கோம்ப் எனப்படும் சின்ன பொருளை மாற்றியதன் மூலம் பெற முடிந்தது.

இந்த மைக்ரோ-கோம்ப் எனப்படும் சின்ன சாதனம் ஆய்வகத்திற்கு வெளியே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் பொருத்தப்பட்டது.

உலகில் ஆப்டிகல் ஃபைபர் பிராட்பேண்ட்களில் உள்ள ஆப்டிகல் சிப் மூலமாக உருவாக்கப்படும் அதிவேக இணைய சேவை இதுவே ஆகும்.

வரும்காலத்தில் இணைய சேவை எப்படி இருக்கும் என்பதற்கான கற்பனையை இந்த கண்டுபிடிப்பு கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய குழு கூறுகிறது.

தற்போதைய நிலையில் எந்த ஒரு பயனாளருக்கும் இணைய சேவையின் வேகம் மிகுந்த அவசியமான ஒன்றாகும். இந்த நவீன வாழ்க்கை முறை பேண்ட்விட்த் கட்டமைப்பின் மேல் இருக்கும் அழுத்தத்தை அதிகரிப்பதால் இந்த கண்டுபிடிப்பு பல்வேறு வகையான தொழிற்சாலைகளை மாற்றுவதற்காக உதவவுள்ளது என்பதை மோனாஷ் பல்கலைக்கழகத்தில் மின்சாதனம் மற்றும் கணினி அறிவியல் பேராசியராக இருக்கும் பில் கார்கெரேயின் கூற்றாகும்.

மிகப்பெரிய திருப்புமுனை

கொரோனா வைரஸ் காரணமாக எடுக்கப்பட்ட முடக்கநிலை முடிவால் இணைய கட்டமைப்பு தற்போது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

அடுத்து வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள், எதிர்பாராத விதமாக மக்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்க , பிறரிடம் பழக போன்றவற்றிற்காக இணைய கட்டமைப்பின் தேவை அதிகமாகும் என்று கூறியுள்ளார் கார்கரேன்.

எங்களின் இந்த ஆராய்ச்சி ஏற்கனவே இருக்கும் ஃபைபரின் முழுத்திறனையும் காட்டுகிறது. இது தற்போதைய மற்றும் வருங்கால தகவல் பரிமாற்றத்துக்கான முதுகெலும்பு ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.

அதிவேக இணைய சேவை

பட மூலாதாரம், Getty Images

இது நெட்ஃபிலிக்ஸ் பற்றினது மட்டுமல்ல என்கிறார் அவர். இந்த இணைய வேகம் தானாக இயங்கும் கார்கள் எதிர்கால போக்குவரத்து போன்றவற்றிற்கு பயன்படலாம். அதுமட்டுமல்லாமல் மருந்தகம், கல்வி, நிதி மற்றும் இணையத்தில் செய்யப்படும் வணிகம் மற்றும் தூரத்தில் இருக்கும் குழந்தைகளிடம் தொடர்பு கொள்ளவும் இது பயன்பட வாய்ப்புள்ளது என கூறினார்.

இது மிகப்பெரிய திருப்புமுனை எனக்கூறியுள்ளார் ஸ்வின்பார்ன் பல்கலைக்கழக பேராசியரான டேவிட் மோஸ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: