அழிவின் விளிம்பில் இருக்கும் சுரா மீன்களை காக்கும் பெண்ணின் கதை

தனி ஒருத்தியாக சுத்திதலை சுராவை காத்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்.

நூறு சுறாக்களுக்கு மத்தியில்

இலினா ஜெனிலா முதல் முதலாக பசிஃபிக் பெருங்கடலில் உள்ள கோகொஸ் தீவு அருகே நீந்திக் கொண்டிருந்த போதுதான் இந்த சுத்திதலை சுராவை பார்த்தார்.

இந்த வகை சுத்திதலை சுராக்கள் எப்போதும் தனியாக இருக்காது. அதன் இயல்பு அப்படி, எப்போதும் நூற்றக்கணக்கான சுராக்கள் ஒன்றாக செல்லும்.

அன்றும் அப்படிதான் நடந்தது.

நூற்றுக்கணக்கான சுராக்கள் மத்தியில் அவர் சிக்கிக் கொண்டார்.

இவருடைய டைவிங் உபகரணங்களிலிருந்து வந்த நீர் குமிழிகளை பார்த்து, அதற்கு அஞ்சி அவை சென்று விட்டன.

சுத்திதலை சுறா அழிவின் விளிம்பில் இருக்கிறது.

சுத்திதலை சுறாவை எதிர்கொண்ட பிறகு இலினா தன் வாழ்க்கையை அதன் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்க முடிவு செய்தார்.

"அந்த தருணம் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. நான் என் பணியை அதன் பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்க முடிவு செய்தேன்" என்கிறார் இலினா.

ஒன்பது வகையான சுத்திதலை சுறாவில் பெரும்பாலானவை ஆபத்தில்தான் இருக்கின்றன. குறிப்பாக பசிஃபிக் பெருங்கடல் கோஸ்டா ரைஸா பகுதியில் தென்படும் ஸ்கலொப்பிட் சுத்திதலை ரகமும் ஒரு வகை.

தடையில்லை

அதிகளவில் மீன் பிடித்தல், அதன் வால் பகுதி விற்பனை ஆகியவை இந்த சுறா அழிவதற்கு காரணமாக இருந்தாலும், அந்த வகை சுறாவை பிடிப்பதில் எந்த தடையுமில்லை. அதேநேரம் இதை சர்வதேச அளவில் விற்பதற்கு சில தடைகள் உள்ளன.

கோஸ்டா ரைசாவில் சுத்திதலை சுறாவால் செய்யப்பட்ட உணவானது மிகவும் பிரபலம். இதற்காக அதிகளவில் இந்த சுத்திதலை சுறாக்கள் பிடிக்கப்படுகின்றன.

இவ்வகை சுறாக்களை பிடிப்பதற்கு தூண்டிலாக சுறா குட்டிகளை பயன்படுத்தப்படுகின்றன.

பெருங்கடல் அழியும்

"அழியும் நிலையில் இருக்கும் ஒரு உயிரினம் தூண்டிலாக பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறான செயல்பாடுகள் நமது பெருங்கடலையே அழித்துவிடும்" என்கிறார் இலினா.

இலினாவின் பணிகளுக்காக அவருக்கு விட்லி விருது வழங்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :