‘பர்ப்பிள்‘ பணித்திட்டம் முதல் ‘ஐஃபோன் X‘ வரை

'ஆப்பிள்' நிறுவனத்தின் ஐஃபோன் செல்பேசி வெளியிட்டின் 10-ஆவது ஆண்டாகிய இந்த ஆண்டு, இது வரை வழங்கப்படாத அளவுக்கு மிகப் பெரியதொரு மேம்பாடோடு புதிய ஐஃபோன் வெளியாகும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முன்பக்கம் முழுவதும் காட்சித்திரையாக அமைகின்ற சீரமைக்கப்பட்ட வடிவமைப்போடு, முகத்தை ஸ்கேன் செய்து அடையாளமாக ஏற்கும் அமைப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப மெய்நிகர் வசதிகளோடு இந்த புதிய ஐஃபோன் வெளியாகும் என பலரிடமும் எதிர்பார்ப்பு எழுந்தது.

பல்வேறு வசதிகளையுடைய இந்த புதிய ஐஃபோனின் விலை அதிகமாக இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் ஊகம் வெளியிட்டனர்.

ஸ்மார்ட் ஃபோன் எல்லா இடங்களிலும் காணப்படும் ஒரு பொருளாக இவ்வுலகில் மாறிவிட்ட நிலையில். ஒரு தசாப்த காலத்திற்கு முன்னால், ஸ்வீவ் ஜாப் இதனை எவ்வளவு ஆச்சரியமூட்டும் வகையில் வெளியிட்டார் என்பதையும், இந்த செல்பேசி சந்தையில் பெரும் மாற்றங்களை கொண்டு வருமா? என்பது பற்றி வேறுபட்ட கருத்துக்கள் எந்த அளவுக்கு நிலவியது என்பதையும் மறந்துவிடுவது எளிதானது.

புதிய ஐஃபோன் வெளியாகும் வேளையைக் குறிப்பதற்காக, இந்த ஐஃபோன் கடந்த வந்த 10 முக்கிய தருணங்களை தொகுத்து வழங்குகின்றோம்.

01.2004: 'பர்ப்பிள்' பணித்திட்டம் பிறப்பு

முதலில் ஐமேக் பின்னர் ஐபாடு ஆகியவற்றின் வெற்றிக்கு பின்னர், தன்னுடைய அடுத்த திருப்புமுனை தயாரிப்பு பொருளாக 'டேப்ளட்களை' ஆப்பிள் நிறுவனம் வடிவமைக்க தொடங்கியது.

பர்ப்பிள் குறியிடப்பட்ட வடிவமைப்புடைய ஃபோனை ஆகஸ்ட் 2005 ஆம் ஆண்டு 'ஆப்பிள்' நிறுவனத்தின் வடிவமைப்பாளர்கள் உருவாக்கினர்.

02. ஜூலை 2008: முதல் ஐஒஎஸ் ஆப் (App) ஸ்டோர் செல்பேசி மென்பொருட்கள் (ஆப்ஸ்) வெளியீடு

முதலாவது ஐஃபோன் வெளியானபோது, ஒற்றை காட்சி திரையை நிரம்பும் அளவுக்குக்கூட செல்பேசி மென்பொருட்கள் (ஆப்ஸ்) இருக்கவில்லை

ஆனால், இப்போது, ஐஒஎஸ் இயங்குதளத்தில் மட்டும் செயல்படக்கூடிய 20 லட்சத்திற்கு மேலாகவே அமெரிக்க செல்பேசி மென்பொருட்கள் உள்ளன.

03.செப்டம்பர் 2008: "ஹெடிசி ட்ரீம்" வெளியீடு

"ஹெடிசி ட்ரீம்" செல்பேசி வெளியீடு, ஒன்றை காப்பி செய்து ஒட்டுவது, தெருப் பார்வை வசதி மற்றும் பல்லூடக செய்தி சேவை உள்பட ஐஃபோனில் இல்லாத அம்சங்களை வழங்கியது.

04.பிப்ரவரி 2010: 'சிறி' செல்பேசி மென்பொருள் "சிறி நிறுவனத்தால்" வெளியீடு

இந்த மெய்நிகர் உதவி செல்பேசி மென்பொருள் முதலில் ஐஒஎஸ் இயங்குதளத்தில் வெளியானபோது, மிகவும் தெளிவற்ற கலிஃபோர்னிய ஆய்வு நிறுவனத்தில் இருந்து வெளியான குறைவான விவரங்கள் அடங்கிய செல்பேசி மென்பொருளாக 'சிறி' வசதி இருந்தது. இந்த செல்பேசி மென்பொருளை உருவாக்க கலிஃபோர்னிய ஆய்வு நிறுவனம், அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஒரு பகுதி நிதி ஆதரவையும் பெற்றிருந்தது.

05.ஜூன் 2010: முதலாவது சுய புகைப்படம் எடுக்கும் ஐஃபோன்

2003 ஆம் ஆண்டு 'சோனி எரிக்சன்' நிறுவனம் தயாரித்திருந்தாலும். ஐஃபோன் 4 இரண்டு பக்கங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ள முதல் செல்பேசியாக இருந்தது.

06.அக்டோபர் 2011: ஸ்டீவ் ஜாப் மரணம்

2011 ஆம் ஆண்டு அப்டோபர் 4 ஆம் தேதி டிம் குக் 4S ஐஃபோனை வெளியிட்டபோது, ஜஃபோன் அரங்கேற்ற நிகழ்வு பற்றி பெரும் விமர்சனங்களை சந்தித்தார்.

அவர் மிகவும் சோகமாக தோன்றியதாக பிபிசியும் குற்றஞ்சாட்டியிருந்தது.

தன்னுடைய ஆலோசகரும், நண்பருமான ஸ்டீவ் ஜாப் மரணத்தின் வாயிலில் இருந்ததை டிம் குக் உணர்ந்திருந்தார் என்பது அப்போது வெளிப்படவில்லை.

4S ஐஃபோன் வெளியான அடுத்த நாள் அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி ஸ்டீவ் ஜாப் இறந்தார்.

07.ஏப்ரல் 2012: இன்ஸ்டாகிராமை ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியது ஃபேஸ்புக் நிறுவனம்

ஐஃபோன் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பில் குழப்பங்கள் உருவாக்கியது என்பதற்கு ஆதாரம் தேவைப்படுமானால், இன்ஸ்டாகிராம் வாங்கப்பட்டதை கூறலாம்.

இந்த விற்பனை அறிவிக்கப்பட்டபோது, இந்த செல்பேசி மென்பொருள் உருவாகி 18 மாதங்களே ஆகியிருந்தது.

13 பணியாளர்களை மட்டுமே கொண்டிருந்த இன்ஸ்டாகிராம் வாங்கப்படுவது அறிவிக்கப்படும் ஒரு வாரத்திற்கு முன்னர் வரை ஐஒஎஸ் இயங்குதளத்தில் மட்டுமே செயல்படும் செல்பேசி மென்பொருளாக இருந்து வந்தது.

08.ஜூலை 2012: அவ்தென்டெக் நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்

2012 ஆம் ஆண்டு கைரேகை உணர்வறி சில்லு தயாரிக்கும் அவ்தென்டெக் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்கியது சாம்சங் நிறுவனத்திற்கு சில முக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

09.ஆகஸ்ட் 2013: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஸ்டீவ் பால்மெர் அறிவிப்பு

1997 ஆம் ஆண்டு, தோல்வியை சந்தித்த ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு தயாரிப்பின் 150 மில்லியன் பங்குகளை வாங்கியதன் மூலம் மைக்ரோசாப்ட் உதவி அளித்தது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் முதலில் சரியாக புரிந்து கொள்ளாத, பின்னர் அதனை இணைப்பதற்கு போராடிய தயாரிப்பு ஒன்றை வெளியிட்டதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதற்கு கைமாறு செய்தது.

10.ஜூலை 2016: 'போக்கிமான் கோ' விளையாட்டு ஆப் வெளியீடு

இந்த விளையாட்டு வெளியானதன் மூலம், உண்மையான உலகின் பார்வை கலந்த வரைகலை படங்கள் மக்கள் பலரை கவர முடியும் என்பதை இந்த செல்பேசி விளையாட்டு வெளிப்படுத்தியது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :