You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஞ்ஞானிகளையே அதிர வைக்கும் 5 ரோபோக்கள்
அணுவிபத்து கழிவுகளை சுத்தம் செய்யும் மனிதக் குரங்கு போன்ற ரோபோ முதல் பெரிய பொருட்களை துவக்க உதவும், மின்சக்தியால் இயங்கும் ரோபோ வரை என ரோபோ தொழில்நுட்பங்கள் நம்பமுடியாத அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகின்றன.
விஞ்ஞானிகளையே ஆச்சரியமடைய வைக்கும் ஐந்து ரோபோக்களைப் பற்றி நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தில் உள்ள தலைமை பொறியாளரான அஷெடி ட்ரெபி ஓளினு கூறுகிறார்.
ரோபோசிமியன்
மீட்பு பணிகளுக்காக தயாரிக்கப்பட்ட மனித குரங்கை போன்ற இந்த ரோபோ பல அங்கங்களைக் கொண்டது.
தீ விபத்து, ரசாயனக் கசிவு, அணு விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்ட இடங்களை சுத்தம் செய்வதே இதன் பணி.
கலிஃபோர்னியா, பசடேனாவில் உள்ள நாசா ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரோபோவை, எந்தவொரு வேலைக்கும் மறுகட்டமைப்பு செய்யமுடியும் என இதன் படைப்பாளர்கள் கூறுகின்றனர்.
அடா
அடா என்பது 3டி தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட ரோபோ கை.
இதனை பிரிட்டன் நிறுவனமான ஓபன் பையோனிக்ஸ் உருவாக்கியுள்ளது.
இந்த கையின் தொழில்நுட்ப வரைபடம் ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கு பொருத்தமான ப்ரிண்டரை கொண்ட எவரும் இதனை பயன்படுத்தலாம்.
"உற்பத்தி பற்றி நாம் நினைத்துக்கொண்டிருப்பதை, இந்த 3டி பிரிண்டிங் மாற்ற போகிறது" என விளக்குகிறார் ட்ரெபி ஓளினு.
"உங்கள் கணினியில் நீங்கள் எதை டிசைன் செய்தாலும் ஒரே பொத்தானை அழுத்தி உருவாக்கலாம்.
இன்னும் சில ஆண்டுகளில் உங்கள் படுக்கையறையில் உங்களுக்கு சொந்தமான ரோபோவை உருவாக்கி அச்சிட முடியும்."
ஃபீனிக்ஸ்
அமெரிக்காவின் பியோனிக்ஸ்-ல் உருவாக்கப்பட்ட ஃபீனிக்ஸ், சக்தி வாய்ந்த புற உடற்கூடினை கொண்டது.
ஒருமுறை சார்ஜ் போட்டால் தொடர்ந்து 4 மணி நேரம் நடக்கும் திறன் கொண்ட ஃபீனிக்ஸ், 12.25 கிலோ எடை கொண்டது என இதனை உருவாக்கிய நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது.
"மிகப்பெரிய பொருட்களை தூக்குவது போன்ற, உங்களால் செய்ய முடியாத காரியங்களை செய்வதற்கு இது உதவுகிறது.
மாற்றுத்திறனாளிக்கும் இது உதவியாக இருக்கும்.
''மனித மற்றும் ரோபோ கலப்பினமாக மனிதர்கள் பரிணாம வளர்ச்சி பெறுவதற்கு இது உதவும் என நினைக்கிறேன்" என்கிறார் நாசா பொறியாளர்.
பெப்பர்
உணர்ச்சி நுண்ணறிவு மிக்க ஒரு மனித உருவமாக பெப்பர் உள்ளது.
மற்றவர்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் தன்மை என்பது ரோபோக்களிடம் இல்லாத ஒரு விஷயம்.
''ரோபோக்களுடன் நாம் தொடர்பு கொள்ளும் விதத்தையும், ரோபோக்கள் வீட்டுக்கு எப்படிப் பயன்படுத்தப்படலாம் என்பதையும் இது மாற்றப் போகிறது.''
ஜப்பானில் சாப்ட் வங்கி ரோபாட்டிக்சால் தயாரிக்கப்பட்ட பெப்பர், சில கடைகளில் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருக்கிறது.
கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர்
நாசாவின் முதன்மை பொறியியாளரின் முதல் ஐந்து பட்டியலில் கடைசியில் இருப்பது, கியூரியாசிட்டி மார்ஸ் ரோவர், இது அவர் பணிபுரிந்த ஒரு திட்டமாகும்.
அது 2012 ல் செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்கியது.
பூமியில், ஓர் அறை அளவு இருக்கக்கூடிய ஒரு கருவியை, ஒரு காலணிப் பெட்டி அளவுக்குக் குறைப்பதன் மூலம், அதை மற்ற கிரகங்களுக்கு அனுப்ப வகை செய்வதே, விஞ்ஞானிகள் முன்னுள்ள சவாலாக இருந்தது.
இதற்கு 120 வாட் என்ற மிகக்குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது.
ஆனால் பூமியில், தொலைதூரத்தில் உள்ள , எளிதில் அணுகமுடியாத பகுதிகளுக்கு மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்ல இதைப் பயன்படுத்த முடியும்.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்