தனது மகனை அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்தார் செளதி அரசர் சல்மான்

செளதி அரேபியாவின் அரசர் தன்னுடைய மகன் மொஹமத் பின் சல்மானை, தனக்குப் பின் பட்டத்துக்கு வரும் வரிசையில் முதலாவதாக இருந்த தனது மருமகன் மொஹமத் பின் நயேஃபுக்கு பதிலாக, அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்துள்ளார்.

31 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் சல்மான் செளதி அரேபியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியில் தொடர்ந்து கொண்டே நாட்டின் துணை பிரதமராகவும் இருப்பார் என்பதுதான் அரசர் சல்மான் ஆணையின் சாரம்சமாகும்.

உள்நாட்டு பாதுகாப்பு தலைவர் பதவியிலிருந்து 57 வயதாகும் இளவரசர் மொஹமத் பின் நயேஃப் நீக்கப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதிய முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ள சல்மானுக்கு தான் விசுவாசமாக இருப்பதாக நயேஃப் உறுதியளித்துள்ளதாக எஸ் பி எ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

தன் ஒன்றுவிட்ட சகோதரர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் மரணமடைந்ததை அடுத்து 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரியணை ஏறினார் அரசர் சல்மான்.

பதவியேற்றவுடன் சில மாதங்கள் கழித்து தனது முதல் பெரிய அமைச்சரவை மாற்றத்தை அறிவித்த அரசர் சல்மான், இளவரசர் மொஹமத் பின் நயேஃபை முடிக்குரிய இளவரசராகவும், இளவரசர் மொஹமத் பின் சல்மானை முடிக்குரிய துணை இளவரசராகவும் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்