You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியா ஏவிய தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள்
ஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து புதிய தெற்காசிய நாடுகளுக்கான தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக ஏவியது.
முழுவதுமாக இந்தியாவின் நிதியில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் பிராந்திய நாடுகளின் தொலைத்தொடர்பு மற்றும் ஒலிபரப்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு உதவும்.
இலங்கை, மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகள் இந்த செயற்கைக்கோள் மூலம் பயனடையும். இந்த முயற்சியில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை.
இந்த முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் "விண்வெளி ராஜதந்திரம்" என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தனது டிவிட்டர் பதிவில் மோதி, விஞ்ஞானிகளால் தான் பெருமைப்படுவதாக பாராட்டினார்.
இந்த செயற்கைக்கோளை நிறுவ மூன்று ஆண்டுகள் ஆனது. இந்த செயற்கைக்கோள் நம்பகமான ஜிஎஸ்எல்வியை கொண்டு ஏவப்பட்டது.
இந்த தெற்காசிய செயற்கைக்கோள் 12 கே யு டிரான்ஸ்பாண்டர்களை கொண்டுள்ளது. இதை கொண்டு இந்தியாவின் அண்டை நாடுகள் அவர்களின் தொலைத்தொடர்பு சேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஒவ்வொரு நாடும் குறைந்தபட்சம் ஒரு டிரான்ஸ்பான்டரை அணுக முடியும், ஆனால் அவர்கள் தங்களுக்கென சொந்த நில கட்டுப்பாட்டு உள்கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
இயற்கை பேரழிவு நேரங்களின் போது தெற்காசிய நாடுகளுக்கிடையேயான முக்கியமான தொடர்புத் தகவல்களை சேமிக்கும் திறனும் இந்த செயற்கைக்கோளுக்கு உள்ளது.
அடிக்கடி பூகம்பங்கள், சூறாவளிகள், வெள்ளங்கள் மற்றும் சுனாமிகள் ஆகிய இயற்கை சீற்றங்களை இந்த பிராந்தியங்கள் அனுபவிக்கிறன.
இந்த தெற்காசிய செயற்கைக்கோள், இயற்கை பேரழிவுகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க உதவும். மேலும் தகவல் தொடர்புக்கு பாதுகாப்பான பாதையை வழங்கும்.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்