நிலவுக்கு பயணிக்க முன்பணம் கட்டிய இரண்டு பேர்

நிலவுக்குப் பயணம் செய்ய இரண்டு அமெரிக்க தனி நபர்கள் கட்டணம் செலுத்தியுள்ளதாக, அமெரிக்க எரோஸ்பேஸ் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் அறிவித்திருக்கிறது.

2018 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்வெளி பயணம் மூலம் 45 ஆண்டுகளில் முதல்முறையாக மனிதர்கள் நிலவுக்குப் பயணிக்க உள்ளனர்.

இந்தப் பயணத்திற்கு, பெயர் வெளியிடாத இரண்டு பேர் குறிப்பிடத்தக்க வைப்புத்தொகையை செலுத்திவிட்டதாகவும், அவர்கள் முழு மனித குலத்தின் நம்பிக்கைகளையும், கனவுகளையும் சுமந்து செல்வார்கள் என்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் முஸ்க் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வழங்கும் ஒத்துழைப்புதான், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூற்றை உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண :பிபிசி தமிழ் யு டியூப்