காங்கிரசில் நேரு குடும்பத்தின் வார்த்தைக்கு மரியாதை சரிந்துவிட்டதா? காரணம் என்ன?

சோனியா காந்தி - ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோனியா காந்தி - ராகுல் காந்தி
    • எழுதியவர், ஃபைசல் முகமது அலி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் செய்த ஜெய்ப்பூரில் நிகழ்த்திய கிளர்ச்சியை அடுத்து காங்கிரசில் காந்தி குடும்பத்தின் ஆதிக்கம் குறைந்துள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசாங்கத்தை பாஜகவின் ஆபரேஷன் தாமரையிலிருந்து காப்பாற்றிய அசோக் கெலாட் கோஷ்டி, ஜெய்ப்பூரில் திட்டமிட்ட கட்சிக் கூட்டத்துக்குப் பதிலாக போட்டி கூட்டத்தை நடத்தி கட்சிக்கு அழுத்தம் கொடுக்க முயன்றது. டெல்லியில் இருந்து ஒரு குழுவை வேலைக்கு அனுப்பியது. தலைவர் சோனியா காந்தி, எம்.எல்.ஏ.க்களை சந்திக்காமல் பராங் திரும்பினார்.

ஜெய்ப்பூரில் நடந்த நாடகத்தைப் பற்றி யார் என்ன சொல்வார்கள்? நீங்கள் யாருடன் பேசுகிறீர்கள் என்பதைப் பொறுத்து பார்வை மாறும்.

காங்கிரஸ்காரர்கள் அதை உள்கட்சி ஜனநாயகம் என்று காட்ட முயற்சிப்பார்கள், கெலாட்டுக்கு கட்சித் தலைவர் பதவி கிடைக்கக்கூடாது என்று கருதிய சிலர் பின்னிய வலை இது என்று கெலாட் முகாம் வாதிடும். மறுபுறம், ராகுல் முதலில் தனது கட்சியை இணைக்கட்டும், பின்னர் இந்தியாவை இணைக்க நடைபயணம் போகலாம் என்று பாஜக கிண்டல் செய்யும்.

ஆனால், காங்கிரஸ் மேலிடத்தின் செல்வாக்கு மெல்ல மெல்ல வீழ்ச்சி கண்டு பல ஆண்டுகள் அல்ல, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

"நாம் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Presentational grey line
Presentational grey line

நரேந்திர மோடியைப் போல் கட்சியை வெற்றி ரதத்தில் அமர வைக்கும் திறன் கட்சிக்கு இருந்தால், தேர்தலில் தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமியை முதல்வராக அமர்த்தலாம்," என்கிறார் அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான ரஷீத் கித்வாய்.

போபாலில் இருந்து நம்மிடம் தொலைபேசியில் பேசிய ரஷித் கித்வாய், "மத்தியப் பிரதேச மாநில பாஜக தலைவராக சிவராஜ் சிங் சௌகான் இருந்தபோதுதான் சட்டமன்றத் தேர்தலில் பாஜக பின்னடைவை சந்தித்தது. இருந்தபோதும், சிவராஜ் சிங் சவுகானிடம்தான் பின்னர் ஆட்சி அதிகாரம் சென்றது" என்கிறார்.

"மார்ச் 1990 இல் பீகாரில் லாலு பிரசாத் யாதவ் அரசு அமைவதற்கு முன், ஒன்பதாவது மாநில சட்டசபை நீடித்தபோது 'நான்கு முதல்வர்கள்' பதவியேற்றனர், ஒவ்வொரு முறையும் சிறிய சலசலப்புக்குப் பிறகு, இந்த விவகாரம் 'அனைவரின் ஒப்புதலுடன் தீர்க்கப்பட்டது'. இதை 'ஒருமித்த கருத்து' என்ற சொல்லால் காங்கிரஸ் விவரித்தது.

கோடு

சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகிய பெரிய தலைவர்கள்

•குலாம் நபி ஆசாத் - 26 ஆகஸ்ட் 2022

•கபில் சிபல் - 25 மே 2022

•ஹர்திக் படேல் - 18 மே 2022

•சுனில் ஜாகர் - 14 மே 2022

•ஆர்பிஎன் சிங் - 25 ஜனவரி 2022

•கேப்டன் அமரீந்தர் சிங் - 2 நவம்பர் 2021

•ஜோதிராதித்ய சிந்தியா - 10 மார்ச் 2020

கோடு

காலம் மாறிவிட்டது

ராகுல் காந்தி - அசோக் கெலாட்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி - அசோக் கெலாட்

ஆனால் இப்போது கடந்த சில ஆண்டுகளாக நிலைமை மாறிவிட்டது. இந்த ஆண்டு கட்சியில் உள்ள பிரச்சனைகளைப் பற்றி கட்சியின் 23 பெரிய தலைவர்கள் கடிதம் எழுதி அதை கட்சித் தலைவருக்கு அனுப்பிவைத்தனர். அவர்களில் குலாம் நபி ஆசாத் மற்றும் கபில் சிபல் ஆகியோர் கட்சியை விட்டு விலகியதால், ஆனந்த் சர்மா தனிமைப்பட்டுப்போனார்.

ராகுல் காந்தியின் உள்வட்டத்தில் நன்கு தெரிந்த ஜோதிராதித்ய சிந்தியா, ஆர்.பி.என்.சிங், ஜிதின் பிரசாத் ஆகியோரின் கதையும் பழையது இல்லை.

எந்தவொரு அரசியல் கட்சிக்கும் இரண்டு முக்கிய ஈர்ப்பு புள்ளிகள் உள்ளன. ஒன்று சித்தாந்தம் மற்றொன்று அதிகாரம், அதாவது அதிகாரத்தை அணுகுவதற்கான சாத்தியம், என்கிறார் டெக்கான் ஹெரால்டு ஆங்கில நாளிதழின் முன்னாள் ஆசிரியர் கே சுப்ரமணியா,

கே.சுப்ரமணியாவின் கூற்றுப்படி, 'காங்கிரஸ் கட்சி இந்த இரு வகையிலும் ஈர்ப்பைக் கொண்டிருக்கவில்லை. கட்சி ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை, 2024 இல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று யாராவது உறுதியாக கூற முடியுமா?'

"இன்று 60 வயதாக இருப்பவர்கள் 2029 வரும்போது நமக்கு 70 வயதாகிவிடும் என்று நினைக்கிறார்கள், அல்லது இன்று 70 வயதாக இருப்பவர்கள் 80 வயதாகிவிடும் என்று நினைக்கிறார்கள், அப்போது நம்மைப் பற்றி யார் நினைப்பார்கள், நமக்கு வாய்ப்பு கிடைக்குமா" என்ற கருத்து நிலவுவதாக கூறுகிறார் அவர்.

அசோக் கெலாட் - பிரியங்கா காந்தி.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அசோக் கெலாட் - பிரியங்கா காந்தி.

1990 களின் முற்பகுதியில் நரசிம்மராவ் கட்சி அலுவலகத்தில் இருந்தபோது, ஒட்டுமொத்தக் கட்சியும் அவருடனும், பின்னர் சீதாராம் கேசரியுடன் நின்றதாகவும், ஆனால், 1998 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை நெருங்கவில்லை. இதையடுத்து சீதாராம் கேசரி தலைவர் பதவியில் இருந்து மிக மோசமான முறையில் வெளியேற்றப்பட்டார் என்கிறார் சுப்ரமணியா.

காங்கிரஸுடன் நெருக்கமாகப் பணியாற்றிய ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக கட்சியில் ஏற்பட்ட சங்கடமான நிலைக்கும், சமீபகால நிகழ்வுகளுக்கும் ராகுல் காந்திதான் பொறுப்பு. ராகுல் ஒரு குழுவால் சூழப்பட்டுள்ளார், அவர்கள் மூலமாகவே வேலை செய்கிறார், மேலும் தங்கள் கட்சி எம்.பி.க்கள் சந்திக்கக்கூட நேரம் கொடுப்பதில்லை, என்றார்.

இது குறித்து அந்த நபர் கூறுகையில், ''கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி ஓய்வு பெற்று கேரளாவுக்கு திரும்பியபோது, ராகுல் - பிரியங்கா ஆகியோர் அவருக்கு பிரியாவிடை விருந்து தரக் கூட நினைக்கவில்லை. சோனியாவுக்கு உடல் நிலை சரியில்லை.

"டாம் வடக்கன் போன்ற நீண்ட கால விசுவாசமான கட்சி ஊழியர் ஒருவரை ராகுல் காந்தி பலர் முன்னிலையில், பொதுவெளியில் மோசமாக நடத்தியதால் அவர் கட்சியை விட்டு வெளியேறினார். அவர் ஒரு நல்ல மனிதராக இருக்கலாம், ஆனால் அவருக்கு மக்களுடன் பழகத் தெரியாது".

அதிகாரம் இன்னும் தொலைவில் இருப்பதால், முன்னோக்கி தெளிவான பாதை இல்லாததால் இந்த கதைகள் அனைத்தும் வெளிவருகின்றன என்று ரஷித் கித்வாய் கூறுகிறார்.

"ராகுல் காந்தி அல்லது பிரியங்காவைப் பற்றி பேசப்படும் விஷயங்கள் புதியவை அல்ல. ஆனால் இந்த சூழ்நிலையில்தான் அவை வெளியில் சொல்லப்படுகின்றன." என்கிறார் காங்கிரஸ், இந்திய அரசியல் ஆகியவை குறித்து பல நூல்கள் எழுதிய ரஷித் கித்வாய்.

ஜெய்ப்பூரில் நடந்த அரசியல் அதிரடிகள் குறித்து ராஜஸ்தான் மூத்த பத்திரிக்கையாளர் திரிபுவன் கூறுகையில், "ஒருவேளை அசோக் கெலாட்டுடன் விவாதிக்காமல் முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம். என் பார்வையில் அவர் முதலில் காங்கிரஸ் தலைவராக அனுமதிக்க வேண்டும், பின்னர் ராஜஸ்தான் முதல்வர் யார் என்ற கேள்விக்கு தீர்வு காணப்பட வேண்டும்," என்றார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

திரிபுவன் கூறுகையில், பஞ்சாப்பை அடுத்து, ராஜஸ்தானிலும் இதே நிலைதான் ஏற்படும்.

மன்மோகன் சிங், முகுல் வாஸ்னிக், பிரமோத் திவாரி போன்ற ஐந்து தலைவர்கள் மாநிலங்களவைக்கு வர வழிவகை செய்த ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர்களைக் கையாள்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ரஷித் கித்வாய் இதன் மறுபக்கத்தை சுட்டிக்காட்டுகிறார்.

1970 களில் இருந்து காங்கிரஸின் அமைப்பு பலவீனமடையத் தொடங்கியது, எமர்ஜென்சி காலத்தில் கட்சியின் பலம், சித்தாந்தம் ஆகியவற்றைக் காட்டிலும் இந்திரா காந்திக்கான விசுவாசம் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. உறவினர்களுக்கு பதவிகள் கிடைக்கத் தொடங்கின. காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பதால் ஆட்கள் அதனை சூழத் தொடங்கினர்.

கீழ் மட்டத்தில் - கிராமம், பஞ்சாயத்து, தொகுதி, மாவட்ட அளவில் நுழைந்த பலவீனம் பின்னர் படிப்படியாக மேல்நோக்கி அதிகரிக்கத் தொடங்கியது. இப்போது அது முழுமையடையத் தொடங்கியது. சோனியா காந்தி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், ராகுல் காந்திக்கு அதிகாரம் கிடைக்கவில்லை, உத்தரபிரதேச வாக்காளர்களால் பிரியங்கா காந்தியின் செல்வாக்கு மதிப்பிடப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார்.

இந்த காங்கிரஸ் கலாசாரம் பாஜகவிலும் மெல்ல மெல்ல தலையெடுக்கத் தொடங்கியது. ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், காங்கிரஸ் போல அல்லாமல், பாஜக சித்தாந்தத்தைப் பின்பற்றுகிறதா இல்லையா என்று பார்க்கும் பொறுப்பு ஆர்.எஸ்.எஸ்.சிடம் உள்ளது என்கிறார் சுப்ரமண்யா.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

"இரண்டு ஹை கமாண்ட்கள் (கட்சி மேலிடத்தை ஆங்கிலத்தில் இப்படி எழுதுவது வழக்கம்) கதை: தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போராடும் காங்கிரஸ் மேலிடம் ஒருபுறம், ஜேபி நட்டாவை இரண்டாவது முறையாகத் 'தேர்வு' செய்ய உள்ள பாஜக மேலிடம் மறுபுறம். டெல்லியில் யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர்தான் 'ஹை கமாண்ட்'. மாறாக எதிர்க்கட்சியில் இருந்தால் ஹையும் இருக்காது, கமாண்டும் இருக்காது (மேல் நிலையும் இல்லை அதிகாரமும் இல்லை)," என பிரபல தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது ட்வீட் ஒன்றில் குறிப்பிட்டார்.

இப்போது நடந்து வரும் முழு கதையின் சாரமும் இதுதானோ?

காணொளிக் குறிப்பு, திருமாவளவன் vs தமிழிசை சௌந்தரராஜன்; காந்தி பிறந்த நாளில் ஆர்.எஸ்.எஸ். பேரணி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: