செந்தில் பாலாஜி: "அண்ணாமலை தைரியமானவராக இருந்தால் வழக்கு தொடரட்டும்"

செந்தில் பாலாஜி

"அண்ணாமலை தைரியமுள்ளவராக இருந்தால் மின் வாரியத்தில் தவறு நடப்பதாக நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்து வழக்கு பதியட்டும்." என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

அவர் பேசியதிலிருந்து,

  • மின் வாரியத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் மார்ச் மாதத்தில் முழுமை பெறும்.
  • 2 ஆண்டில் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியிடப்பட்டு , 233 துணை மின் நிலையத்திற்கு இடங்கள் தேர்வாகிவிட்டது , எஞ்சிய 83 க்கு இடத் தேர்வு நடைபெறுகிறது.
  • சூரிய மின் சக்தி , காற்றாலை மின் உற்பத்தி போன்ற மரபுசாரா உற்பத்தி எல்லா பருவ காலகட்டத்திலும் நமக்கு கிடைக்காது.
  • முதல்வர் வழிகாட்டுதல்படி 15.6.22 முதல் நேற்று வரை மின்வாரிய சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.
  • இதுவரை 10லட்சத்து 37 ஆயிரத்து 607 சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது.
  • 2070 துணை மின் நிலைய பணிகள் , 5லட்சத்து 88 ஆயிரத்து மரக்கிளைகள் அகற்றம் , 33,772 மின்கம்பங்கள் மாற்றம். 27ஆயிரத்துக்கும் மேல் சாய்ந்த மின்கம்பம் ஒருமாதத்தில் சரிசெய்யப்பட்டது.
  • தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர்க்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, அவ்வாறு வெளியான கருத்து தவறானது.
  • ஆட்சிக்கு வந்த 14 மாதத்தில் மின் வாரியத்தில் 2200 கோடியை சேமித்துள்ளோம் , தனியார் நிறுவனங்களுடனான உற்பத்தி ஒப்பந்தம் கடந்த ஆட்சியில் போடப்பட்டது. அதை ரத்து செய்வது அல்லது குறைந்த விலையில் வாங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.
  • அடுத்த 5 ஆண்டில் புதிய மின உற்பத்தி 6220 மெகாவாட் அளவு அடுத்த உற்பத்தி செய்ய இலக்கு வைத்துள்ளோம்.
  • மின்வாரியத்தை மேம்படுத்த , மக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் , சிறிய கட்டண மாற்றத்தை மட்டுமே அமல்படுத்தியுள்ளோம் .
  • திமுக ஆட்சி அமைந்த பிறகு கல்வி நிலையம் , கோயில் அருகே உள்ள 45 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
  • அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக மது விற்கும் கடை எது என்று ஆதாரப்பூர்வமாக குறிப்பிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் . கடையை பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டால் இன்றே உங்களுடன் ஆய்வுக்கு வருவதற்கு நான் தயார்.
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: