கள்ளக்குறிச்சி வன்முறை: மாணவி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி

கள்ளக்குறிச்சி கலவரம்

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சைலந்திரபாபு தெரிவித்துள்ளார். இது தவிர, சம்பந்தப்பட்ட பள்ளியில் படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தை மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளதாக சைலேந்திர பாபு கூறியுள்ளார்.

வன்முறை நடந்த பள்ளியையும் அதன் வளாகத்தையும் மாநில உள்துறை செயலாளரும் காவல்துறை டிஜிபியும் இன்று மாலையில் நேரில் பார்வையிட்டனர். அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் இருவரும் கேட்டறிந்தனர். பிறகு செய்தியாளர்களை இருவரும் கூட்டாக சந்தித்தனர். அப்போது டிஜிபி சைலேந்திர பாபு, "மாணவி இறந்த விவகாரத்தில் முக்கிய தடயமாக கருதப்படும் சிசிடிவி கேமராக்கள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது," என்று கூறினார்.

"வன்முறை தொடர்பாக இதுவரை 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலவரம் அடங்கியுள்ளது. காவல்துறை டிஐஜி, ஒரு எஸ்பி, 52 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆனாலும் கூட அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி உரிய வகையில் கலவரத்தை போலீஸார் அடக்கியுள்ளனர். மாணவியின் மரணம் தொடர்பாக நடத்திய விசாரணையின் அங்கமாக, மாணவி தங்கியிருந்த விடுதியில் போதுமான பாதுகாப்பு வசதிகள் உறுதிப்படுத்தப்படாதது தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.

சைலேந்திர பாபு
படக்குறிப்பு, தமிழ்நாடு உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு

"இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவயின் பெற்றோருக்கு எழும் அனைத்து சந்தேகங்கள் குறித்தும் சிபிசிஐடி புலனாய்வாளர்கள் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். பள்ளிக்கூடத்தை வன்முறை கும்பல் தாக்கியது தனி வழக்காக விசாரிக்கப்படும். அதை இலக்கு வைத்து ஏன் வன்முறையாளர்கள் வந்தார்கள், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும்," என்று அவர் கூறினார்.

உளவுத்துறை முன்கூட்டியே கொடுத்த தகவல் அடிப்படையிலேயே போலீஸார் இங்கு பாதுகாப்புக்கு அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர் என்று சைலந்திரபாபு கூறியபோது, இடதுசாரி மாணவர் அமைப்பு மூன்று நாட்களுக்கு முன்பே போராட்டம் தொடர்பாக சுற்று வட்டாரத்தில் சுவராட்டிகள் ஒட்டியதாகவும் வாட்ஸ்அப் குழு அமைத்து எப்படி ஆடை அணிந்து வர வேண்டும் என்பது உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டும் போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தவறியதா என்றும் செய்தியாளர்கள் கேட்டனர்.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்த விவகாரத்தை பெரிய அசம்பாவிதமோ எதிர்வினையோ நடக்காமல் உயிர் சேதம் ஏற்படாமல் எப்படி டிஐஜி பாண்டியன், எஸ்பி செல்லகுமார் உள்ளிட்டோர் கையாண்டிருக்கிறார்கள் என பார்க்க வேண்டும். வாட்ஸ்அப் குழு அமைத்து கூட்டம் சேர்த்ததாக வரும் தகவல் குறித்தும் விசாரிக்கப்படும். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பதே அவர்கள் வந்த பிறகுதான் தெரிந்தது. இவை குறித்தெல்லாம் விசாரிக்கப்படும் என்று சைலேந்திர பாபு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி கலவரம்

பள்ளி முதல்வரின் அறையில் ஆணுறையை கண்டுபிடித்ததாக போராட்டக்காரர்கள் கூறியது பற்றி ஒரு செய்தியாளர் கேட்டபோது, அனைத்து விவகாரங்களும் விசாரிக்கப்படும் என்று டிஜிபி கூறினார். சம்பவ நாளில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அழித்து விட்டதாக சொல்வது பற்றி கேட்டதற்கு, போலீஸ்வசம் ஏற்கெனவே சிசிடிவி காட்சிகள் உள்ளன என்று டிஜிபி சைலேந்திரபாபு பதிலளித்தார்.

கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று அது தொடர்பான சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது பற்றி கேட்டதற்கு, குறிப்பிட்ட ஒரு பள்ளியில் நடந்த சம்பவத்தை வைத்து, பாதுகாப்பாக இயங்கி வரும் பிற பள்ளிகளின் இயக்கத்தை முடக்க முற்படுவது சரியானதாக இருக்காது என்று உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. வதந்திகளை நம்பி மக்கள் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் பணீந்திர ரெட்டி கேட்டுக் கொண்டார்.

வன்முறையாக மாறிய போராட்டம்

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மர்ம சாவு தொடர்பான விவகாரத்தில் நீதி கேட்டு இன்று நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தின் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அங்கு நிலைமையை மேற்பார்வையிடவும் அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவும் மாநில உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு ஆகியோரை சம்பவ பகுதிக்கு விரைந்து செல்ல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அங்கு போராட்டம் நடந்த பகுதியில் அதிரடிப்படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, கள்ளக்குறிச்சி அருகே மாணவியின் மரணத்திற்கு நீதி கோரி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேவேளை சிலர் வாகனங்களுக்கு தீ வைத்து கல்வீசி தாக்குதல் நடத்தியதால் வன்முறை வெடித்தது. இதில் காவல்துறையினரும் காயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, சாலை மறியலில் ஈடுபடும் கிராமத்தினர்

இதையடுத்து வன்முறை கும்பலை கட்டுப்படுத்த போலீசார் குறைந்தது இரண்டு முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இந்த நிலையில், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். கள்ளக்குறிச்சிக்கு விரையும்படி உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கம் வாயிலாக கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

கோடாட்சியர் பிறப்பித்த தடை உத்தரவு

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144(2) தடை உத்தரவை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பான உத்தரவில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் வட்டத்துக்கு உள்பட்ட அனைத்து கிராமங்கள் மற்றும் சின்ன சேலம் வட்டம், சின்னசேலவம் குறுவட்டத்துக்கு உள்பட்ட கிராமங்கள் மற்றும் நைனார்பாளையம் குறுவட்டத்துக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களிலும் பொது அமைதிக்கு குந்தகம், கலகம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக நான் கருதுவதால் இந்த பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவிட குற்றவியல் குற்றவியல் விசாரணை முறை சட்டத்தின் 144இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது," என்று கோட்டாட்சியர் குறிப்பிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி கலவரம்

பட மூலாதாரம், KALLAKURICHI RDO

கள்ளக்குறிச்சி கலவரம்

பட மூலாதாரம், KALLAKURICHI RDO

இதே விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நடந்த நிகழ்வுகளின் சமீபத்திய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி ஜூலை 13ஆம் தேதி இறந்தது தொடர்பாக பல கட்ட போராட்டம் நடத்தப்பட்டதால் பல்வேறு அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரம்
படக்குறிப்பு, பி.என். ஸ்ரீதர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்

மாணவி இறந்தது தொடர்பாக அவரது தாயார் செல்வி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தபோது சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாகவும் இந்த நிலையில், ஜூலை 17ஆம் தேதி காலை 10 மணியளவில் 1,000க்கும் மேற்பட்ட நபர்கள் பள்ளி முன்பு கூடி கற்களை வீசி தாக்கியும் காவல்துறை மற்றும் பல்ளி வாகனங்களை தீ வைத்தும் கொளுத்தினர். இதை கட்டுப்படுத்த கூடுதல் போலீஸ் படையினரை விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், மாணவி இறந்த சம்பவத்தை மாநில குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு ஜூலை 18ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இது குறித்து தமது செய்திக்குறிப்பில் விவரித்துள்ள ஆட்சியர், உயர் நீதிமன்ற விசாரமைக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆஜராகுமாறு அறிவுறுத்தி உள்ளதாகவும் போராட்டத்தைக் கட்டுப்படுத்த கோட்டாட்சியர் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், நைனார்பாளையம் குறுவட்டங்களுக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் இந்த விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை நடந்து வருவதாகவும் ஆட்சியர் ஸ்ரீதர் குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சியில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள சின்னசேலத்தில் உள்ள தனியார் உறைவிட பள்ளியில் 12Eம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி ஜூலை 13ஆம் தேதி அவர் தங்கியிருந்த விடுதி வளாகத்தில் இறந்து கிடந்தார். விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்த சிறுமி, மேல் தளத்தில் இருந்து தரையில் குதித்து தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கலவரம்

இந்த நிலையில், அவரது உடல் கூராய்வு அறிக்கையில் அந்த மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகார் தொடர்பாக ஏற்கெனவே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோருக்கு ஆதரவாக உள்ளூர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் சில குரல் கொடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து மாணவியின் மரணத்தை 'சந்தேக மரணம்' ஆக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை நடத்தினர். முன்னதாக, மாணவியின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரியநாசலூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீதி கேட்டு கடந்த புதன்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி கலவரம்

பள்ளி நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டி, மாணவியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் ஜூலை 16ஆம் தேதியன்று நான்காவது நாளாக போராட்டம் நடத்தினர்.இடதுசாரி மாணவர் அமைப்பும் உள்ளூர் அரசியல் கட்சிகள் சிலவற்றின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், மாணவயின் மரணத்துக்கு நீதி கேட்டு இந்த விவகாரத்தை மாநில குற்றப்புலனாய்வு சிஐடி வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் போராடியது.

வார இறுதி போராட்டத்தில் வன்முறை

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி வளாகத்துக்கு வெளியே இன்று காலையில் திடீரென போராட்டக்காரர்கள் பெருமளவில் திரண்டனர். காவல்துறையினர் போடப்பட்டிருந்த தடுப்புகளை கீழே தள்ளிவிட்டு, ஒரு கும்பல் பள்ளிக்கு உள்ளே நுழைந்தது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தப்படும் தகவல் தொடர்பாக மாநில உளவுப்பிரிவு சார்பில் மாவட்ட காவல் நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்ததாக பிபிசி தமிழுக்கு தெரிய வந்துள்ளது. மேலும், உளவுத்தகவல் அடிப்படையில் நெடுஞ்சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போலீஸாரை குவிக்க விழுப்புரம் சரக டிஐஜி நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், நெடுஞ்சாலை வழயிாக இல்லாமல் உள்ளூர் கிராமங்கள் வழியாக போராட்டக்காரர்கள் பள்ளிக்கு அருகே வந்ததாக தெரிய வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி கலவரம்

இந்த நிலையில், பள்ளிக்குள் நுழைந்த போராட்டக்காரர்களில் சிலர், அதன் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளுக்கு தீ வைத்தனர்.

பள்ளி வளாகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் பேருந்துக்கும் சிலர் தீ வைத்தனர். பள்ளிக்குள் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரை தலைகீழாக கவிழ்த்து அதை சுத்தியலால் அடித்துச் சேதப்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி கலவரம்

இதேவேளை போராட்டக்காரர்களில் ஒரு குழுவினர் பள்ளியின் மொட்டை மாடியை அடைந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த பெயர் பலகையை சேதப்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி கலவரம்

இறந்த சிறுமிக்கு நீதி கோரும் பதாகைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். சிறிது நேரம் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையின் சிறந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து போலீஸார் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

மற்றவர்கள் பள்ளியின் முதல்வர் அறைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த மேஜைகள், மர அலமாரி போன்ற பொருட்களை வெளியே எடுத்து வந்து தீ வைத்து எரித்தனர்.

இந்த நிலையில், பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் மீது போராட்டக்காரர்கள் சிலர் கற்களை வீசினர். இந்த சம்பவம் காரணமாக, சென்னை-சேலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 2
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 2

கள்ளக்குறிச்சியில் கூடுதல் போலீஸ் குவிப்பு

இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் 900 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேலத்தில் இருந்து சென்னை வரும் நெடுஞ்சாலை பாதையில் பள்ளி அமைந்திருப்பதால், அந்த பாதையை போலீஸார் தற்காலிகமாக முடக்கியுள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேப்பூர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் த நிலையில், தமிழ்நாடு காவல்துறையின் கூடுதல் தலைமை இயக்குநர் தாமரைக்கண்ணன் சம்பவ பகுதிக்கு வந்துள்ளார். இதுவரை நடந்த வன்முறை தொடர்பாக தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், பள்ளி நிர்வாக செயலாளர் சாந்தி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், "நடந்த வன்முறைக்கு இறந்த மாணவியின் தாயார்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர் வெளியிட்ட செய்திகள் அனைத்தும் தவறானவை. அந்த மாணவியின் செல்பேசி மற்றும் அவரது தாயாரின் செல்பேசியை கைப்பற்றி அதில் உள்ள விவரங்களை ஆராய்ந்தாலே இந்த விவகாரத்தில் உண்மை என்ன என்பது தெரிய வரும். பள்ளிக்கு சொந்தமான ஏராளமான பொருட்களை வன்முறையாளர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மாணவர்களின் கல்விச்சான்றிதழ்கள், ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இப்படி ஏன் செய்துள்ளனர் என்பதை பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்," என்று சாந்தி பேசியுள்ளார்.

YouTube பதிவை கடந்து செல்ல, 3
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 3

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :