சீன வீராங்கனையை வீழ்த்தி சிங்கப்பூர் ஓபன் பட்டத்தை வென்றார் பி.வி. சிந்து

சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் இறுதிப் போட்டியில் சீனா வீராங்கனை வாங் சியை வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார் பி. வி. சிந்து.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டியில் சிந்து சீன வீராங்கனை வாங் சியை 21 -9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

முன்னதாக நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை சயானா கவாகாமியை 21-15,21-7 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார் சிந்து.

சிங்கப்பூர் ஒபன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் பெறுகிறார் சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச் சுடும் போட்டியில் வெண்கலம் வென்றார் அன்ஜும்

இந்திய துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அன்ஜும் மொட்கில், ஐஎஸ்எஸ்எஃப் உலகப் கோப்பையின் 50 மீ பெண்கள் துப்பாக்கிச் சுடும் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

402.9 புள்ளிகளுடன் அன்ஜும் முன்றாம் இடத்தை பிடித்தார்.

சனிக்கிழமையன்று நடைபெற்ற ரான்கிங் சுற்றில் ஆறாவது இடத்தை பிடித்து இறுதிப் போட்டிக்கு தேர்வானார் அன்ஜும்.

இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அனா யாங்சென் தங்கப் பதக்கமும், இத்தாலியை சேர்ந்த பார்பரா கம்ப்ரோ வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :