கருக்கலைப்பு உரிமை தீர்ப்பு: அமெரிக்காவில் அதிர்வலை - இந்திய சட்டம் என்ன சொல்கிறது?

अमेरिका

பட மூலாதாரம், EPA

அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமை சட்டபூர்வமாக்கப்பட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அது தொடர்பான தீர்ப்பை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது, இதன் பிறகு நாட்டின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் இதுவே இறுதியானது இல்லை என்று கருத்து கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, இப்போது அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்கள், கருக்கலைப்பு உரிமை பெண்களுக்கு சட்டபூர்வமானதா இல்லையா என்பது தொடர்பாக இனி சொந்தமாக விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்கள், கருக்கலைப்பு சட்டங்கள் தொடர்பான புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

13 மாகாணங்கள் ஏற்கெனவே கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கும் சட்டங்களை இயற்றியுள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.

மூடப்படும் கருக்கலைப்பு கிளினிக்குகள்

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் சில மாகாணங்களில் கருக்கலைப்பு கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. இந்த முடிவின் நேரடி தாக்கம் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள லிட்டில் ராக் பகுதியின் கருக்கலைப்பு மருத்துவமனையில் காணப்பட்டது.

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம், EPA

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு விவரம் ஆன்லைனில் பதிவேற்றப்பட்டவுடனேயே அங்கு கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. கருக்கலைப்பு கிளினிக்கின் கதவுகள் மூடப்பட்டன. மருத்துவமனை ஊழியர்கள்,கருக்கலைப்புக்காக முன்பதிவு செய்த நோயாளிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அவர்களின் அப்பாயின்ட்மென்ட் ரத்து செய்யப்பட்டதாகக் கூறினர்.

ஆஷ்லே ஹன்ட் ஒரு செவிலியர். அவர் பிபிசியிடம் கூறுகையில், சில நேரங்களில் நாம் மிகவும் மோசமான செய்திகளைக் கேட்கத் தயாராக இருக்கிறோம், ஆனால் அத்தகைய செய்தி நம்முடன் தொடர்புடையாக இருக்கும்போது அது நம் தலையில் இடி விழுந்தது போல ஆகிறது," என்று கூறினார்.

"இந்த அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படும் என்று நான் நினைத்தேன். அது இன்னும் பெண்களைப் பற்றிக் கவலைப்படும்" என்று மருத்துவமனைக்கு வெளியே நிற்கும் ஹெட் எஸ்கார்ட்ஸ்கரென் கூறுகிறார்.

இதேவேளை, கருக்கலைப்புக்கு எதிரான போராட்டங்கள் கிளினிக்கிற்கு வெளியே நடந்தன. கருக்கலைப்பு கிளினிக்கிற்கு வெளியே தங்கள் கார்களை நிறுத்த வந்தவர்களை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். 'நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்,' என்று போராட்டக்காரர்கள் குரல் கொடுத்தனர்.

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம், EPA

அதிபர் கவலை

தீர்ப்புக்குப் பிறகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில், கருக்கலைப்புக்காகப் பெண்கள் பயணம் செய்வதை மாகாண மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தடுக்காமல் இருப்பதை உறுதி செய்ய முயற்சிப்பதாகக் கூறினார். நாட்டின் சுகாதாரத்துறை, கருக்கலைப்பு மாத்திரைகள் முழுமையான அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் தமது நிலைப்பாட்டை பகிர்ந்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

"அமெரிக்காவில் இன்று பல்லாயிரக்கணக்கான பெண்கள் உடல்நலம் மற்றும் கருக்கலைப்பு மருத்துவ வசதியைப் பெற முடியாமல் இன்றிரவு படுக்கைக்கு செல்வர். அமெரிக்க மக்களின் அரசியலமைப்பு உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன," என்று கமலா ஹாரிஸ் கூறியுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

இதற்கிடையில், கருக்கலைப்பு உரிமை வழங்கிய ரோ மற்றும் வேட் இடையிலான தீர்ப்பை நீண்ட காலமாக எதிர்த்து வருபவரான முன்னாள் அதிபர் மைக் பென்ஸ், வாழ்வின் புனிதத்தை ஒவ்வொரு மாகாணமும் ஏற்றுக்கொள்ளும் வரை ஒவ்வொரு மாகாணத்திலும் கருக்கலைப்பு எதிர்ப்பு பிரசாரத்தை நிறுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம், Reuters

લાઇન

அமெரிக்காவில் கருக்கலைப்பு பற்றிய சர்ச்சை ஏன்?

લાઇન
  • 1971ஆம் ஆண்டு அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்யத் தவறிய பெண்ணின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது ரோ வெர்சஸ் வேட் வழக்கு என்று அழைக்கப்பட்டது.
  • கர்ப்பம் மற்றும் கருக்கலைப்பு பற்றிய முடிவு பெண்ணின் முடிவாக இருக்க வேண்டும், அரசாங்கம் அல்ல என்று அந்த தீர்ப்பு கூறியது.
  • இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1973இல், நீதிமன்றம் கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கியது. அரசியலமைப்புச் சட்டம் கர்ப்பிணிக்கு முடிவெடுக்கும் உரிமையை வழங்குகிறது என்று அந்த தீர்ப்பு கூறியது.
  • இதற்குப் பிறகு, மருத்துவமனைகளில் பெண்களுக்கு கருக்கலைப்பு வசதிகளை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டது.
  • இந்த முடிவு அமெரிக்க பெண்களுக்கு கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் கருக்கலைப்பு செய்வதற்கான சட்டபூர்வ உரிமையை வழங்கியது. இருப்பினும், இரண்டாவது மூன்று மாதங்களில் அதாவது நான்காவது முதல் ஆறாவது மாதம் வரை கருக்கலைப்பு தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
  • ஆனால் அமெரிக்காவில் உள்ள மதக் குழுக்களுக்கு இது ஒரு பெரிய பிரச்னையாக இருந்தது, ஏனெனில் அவர்கள் கருவில் உள்ள சிசிவுக்கும் உயிர் வாழும் உரிமை உண்டு என்று நம்பினர்.
  • இந்த பிரச்னையில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் கருத்துக்கள் வேறுபட்டன. 1980வாக்கில், இது மதப்பிரச்னையாக மாறத் தொடங்கியது.
  • இதற்குப் பிறகு, பல மாகாணங்கள் கருக்கலைப்பைத் தடை செய்யும் விதிகளை அமல்படுத்தின, சில மாகாணங்கள் கருக்கலைப்பு உரிமையை பெண்களுக்கு தொடர்ந்து அளித்தன.
લાઇન
கருக்கலைப்பு சட்டம்

பட மூலாதாரம், Thinkstock

கருக்கலைப்பு சட்டம்

இந்தியாவில் சட்டம் என்ன சொல்கிறது?

இந்தியாவில், கருக்கலைப்பு தொடர்பான சட்டம் கடந்த ஆண்டு திருத்தப்பட்டது, அதன் பிறகு கருக்கலைப்புக்கான 'செல்லுபடியாகும் காலம்' 20 வாரங்களில் இருந்து 24 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்திய சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு அமைச்சகத்தின் கூற்றுப்படி, 2021ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி, இந்தியாவில் மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு (திருத்தம்) சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பிட்ட வகை பெண்களுக்கு கருக்கலைப்புக்கான 'செல்லுபடியாகும் காலம்' நீட்டிக்கப்பட்டுள்ளது, எம்டிபி விதிகளில் திருத்தம் செய்யப்படுவதன் மூலம் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்களுடன் பாலியல் தொடர்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற பாதிக்கப்படக்கூடிய பெண்கள் (ஊனமுற்ற பெண்கள், மைனர் வயதுடைய சிறுமிகள் இந்த வகையில் சேருவர்.

முன்னதாக, இந்தியாவில் 1971ஆம் ஆண்டு மருத்துவ ரீதியிலான கருக்கலைப்பு சட்டம் இருந்தது. அதில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.அந்த சட்டத்தின்படி, ஒரு பெண் 12 வாரங்கள் கர்ப்பமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கருக்கலைப்பு செய்யலாம் என்று இருந்தது. அதே நேரத்தில், 12-20 வாரங்களாக இருந்தால் அவர் இரண்டு மருத்துவர்களின் ஆலோசனை பெறவது கட்டாயமானது. 20-24 வாரங்களில் கருக்கலைப்பு செய்ய பெண் அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் திருத்தப்பட்ட மசோதாவில் 12 வாரங்களிலும் 12 முதல் 20 வாரங்களிலும் கருக்கலைப்பு செய்து கொள்ள மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.

இது தவிர, 20-24 வாரங்களாக கரு இருந்தால், சில வகை பெண்கள் இரண்டு மருத்துவர்களை அணுக வேண்டும், மேலும் 24 வாரங்களுக்கு மேல் வளர்ந்த கருவாக இருந்தால், மருத்துவ ஆலோசனைக்குப் பின்னரே கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.

लाइन
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: