பெட்ரோல் விலை: மத்திய, மாநில அரசுகள் மோதுவது ஏன்? 5 கேள்விகள், எளிய விளக்கங்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
வாகன எரிபொருள் விலையை மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறியது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்வர்கள், பிரதமரின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? இதோ உங்களின் புரிதலுக்காக சில கேள்விகளும் பதில்களும்.
கே. எரிபொருள் விலை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி எங்கே, என்ன கூறினார்?
ப. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஏப்ரல் 27ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெட்ரோல் விலை குறித்து அவர் பேசினார்.
"பெட்ரோல், டீசல் விலை உயர்வுச் சுமையைக் குறைப்பதற்காக கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு அவற்றுக்கான உற்பத்தி வரியைக் குறைத்தது. அதேபோல மாநிலங்களும் உள்ளூரி வரியை குறைக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக்கொண்டது. சில மாநிலங்கள் வரியைக் குறைத்தன. ஆனால், பல மாநிலங்கள் மக்களுக்கு எந்தப் பலனையும் வழங்கவில்லை. இதன் காரணமாக, அந்த மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகமாக உள்ளது. இது இந்த மாநிலங்களின் மக்களுக்குச் செய்கிற அநீதி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரா, கேரளா, ஜார்கண்ட், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் மத்திய அரசு சொன்னதைக் கேட்கவில்லை. எனவே அந்த மாநிலங்களின் மக்கள் தொடர்ந்து சுமையை அதிகரித்து வருகின்றனர்.
வரியைக் குறைத்திருக்காவிட்டால் கர்நாடக மாநிலம் 5,000 கோடி ரூபாயையும் குஜராத் 3,500 கோடி ரூபாயையும் சம்பாதித்திருக்க முடியும். எனவே கடந்த நவம்பர் மாதம் செய்திருக்க வேண்டியதை இப்போது நீங்கள் செய்து, மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்து மக்களுக்கு அந்தப் பலனை வழங்கி ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கே. இந்திய பிரதமரின் கருத்துக்கு மாநில முதல்வர்கள் தெரிவித்தது என்ன?
ப. பிரதமரின் இந்தக் கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடுமையாக எதிர்வினையாற்றினார். "பிரதமருடனான இன்றைய கலந்துரையாடல் ஒரு பக்கச் சார்புடனும் தவறான தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் ஒரு ரூபாய் மானியத்தை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தந்து வருகிறோம். கோவிட் - 19 நிலவரம் குறித்த கூட்டத்தில் பிரதமர் எரிபொருள் விலையைப் பற்றி பேசியிருக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்தார்.
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவும் பிரதமர் மோதியைக் கடுமையாக விமர்சித்தார். "மாநிலங்களிடம் வரியைக் குறைக்கச் சொல்லிக் கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசே ஏன் வரியைக் குறைக்கக்கூடாது? தெலங்கானா அரசு கடைசியாக 2015இல் எரிபொருள் விலையை உயர்த்தியது. அதற்குப் பிறகு விலையை உயர்த்தவில்லை. மத்திய அரசு வரிகளை மட்டுமல்லாமல், 'செஸ்'ஐயும் உயர்த்தியது. உங்களுக்குத் தைரியமிருந்தால் வரிகளை உயர்த்தியது ஏன் என்பதை விளக்குங்கள்" என்று கூறினார்.

பட மூலாதாரம், MK STALIN
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் பிரதமரின் கருத்தைக் கடுமையாகச் சாடினார். "2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற்போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு. பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படக்கூடிய தலவரியையும் தலமேல்வரியையும், மாநில அரசுகளோடு பகிர்ந்தளிக்கத் தேவையில்லை என்பதால் இந்த வரிகளை மிகக் கடுமையாக உயர்த்தி, அதனால் கிடைக்கும் லட்சக்கணக்கான கோடி வருவாயை முழுவதும் தனதாக்கிக் கொண்டது மத்திய அரசு.
சில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என்ற காரணத்திற்காக இந்தத் தேர்தலுக்கு முன்பாக அதிரடியாக பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்து வேடம் போட்டது மத்திய அரசு. தேர்தல்கள் முடிந்த பின்பு, அடுத்த வாரமே மடமடவென விலையை முன்பு இருந்ததை விட உயர்த்தி, மக்கள் மீது கூடுதல் சுமையை சுமத்தியிருக்கிறது மத்திய அரசு.
இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். யார் பெட்ரோல் விலையைக் குறைப்பதில் உண்மையிலேயே முனைப்பு காட்டுகிறார்கள்; யார் பெட்ரோல் விலையைக் குறைப்பது போல நடித்து, பழியை மற்றவர்கள் மீது போடுகிறார்கள் என்பதை மக்களுடைய முடிவிற்கே நான் விட்டு விடுகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
கே. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசலுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது?
ப. தமிழ்நாடு அரசு தரும் தகவல்களின் அடிப்படையில் ஏப்ரல் 26ஆம் தேதி நிலவரப்படி, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை ரூ. 56.70. கலால் வரி, செஸ் உட்பட மத்திய அரசு வசூலிக்கும் வரி ரூ. 27.90. மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி ரூ. 22.54. போக்குவரத்து செலவு லிட்டருக்கு ரூ. 0.15. டீலருக்கான கமிஷன் ரூ. 3.56. முடிவில், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 110.85. 2014ல் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 75.74.
டீசலைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் டீஸலின் அடிப்படை விலை ரூ. 58.29. கலால் வரி, செஸ் உட்பட மத்திய அரசு வசூலிக்கும் வரி ரூ. 21.80. மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரி ரூ. 18.45. போக்குவரத்து செலவு லிட்டருக்கு ரூ. 0.15. டீலருக்கான கமிஷன் ரூ. 2.25. முடிவில், சென்னையில் ஒரு லிட்டர் டீஸலின் விலை ரூ. 100.94. 2014ல் ஒரு லிட்டர் டீஸலின் விலை ரூ. 62.27.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
கே. பெட்ரோல், டீஸல் விலை உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?
ப. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை, எரிபொருள் மீதான வரியைக் குறைப்பது இயலாத காரியம் என்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட பிறகு, மாநில அரசின் வரி திரட்டும் அதிகாரம் வெகுவாகக் குறைந்துவிட்டதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும் கோவிட் - 19 பரவலால் வரி வருவாய் பாதிக்கப்பட்டிருப்பதோடு, செலவுகள் அதிகரித்திருப்பதாகவும் கூறியுள்ள நிதியமைச்சர், மத்திய அரசுதான் செஸ் மற்றும் சர்சார்ஜ்களைக் குறைத்து, பெட்ரோலில் இருந்து மத்திய அரசு வசூலிக்கும் வரியிலிருந்து மாநிலங்களுக்கு உரிய பங்கைத் தர வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.
மத்திய அரசு அதிக வரியை விதித்துவிட்டு, மாநில அரசுகளை வரியைக் குறைக்கச் சொல்லக்கூடாது என்றும் செஸ் மற்றும் சர்சார்ஜை 2014ஆம் ஆண்டில் இருந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
கே. தமிழ்நாடு அரசு வரியைக் குறைக்க மறுப்பது ஏன்?
ப. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் மீதான வரியை 3 ரூபாய் குறைத்ததன் மூலம் வருடத்திற்கு ரூ. 1,160 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை, 2019-20ல் பெட்ரோல் - டீஸல் மீது விதிக்கப்பட்ட வரியால் ரூ. 2,39,452 கோடி கிடைத்தது. ஆனால், 20 -21ல் இந்த வருவாய் ரூ. 3,89,622 கோடியாக உயர்ந்திருக்கிறது.
ஆனால், இந்த வருவாயிலிருந்து தமிழ்நாடு அரசுக்கு 2019 -20ல் 1,163.13 கோடி ரூபாய் கிடைத்த நிலையில், 20-21 அந்தத் தொகை 837.75 கோடி ரூபாயாகக் குறைந்திருக்கிறது.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை 5 ரூபாயும் டீஸல் மீதான வரியை பத்து ரூபாயும் குறைத்தது. இதனால், மாநில அரசுக்குக் கிடைக்கும் வரி வருவாயும் 1,050 கோடி ரூபாய் அளவுக்குக் குறைந்தது.
ஆகவே, இந்தச் சூழலில் மாநில அரசு தனது வரியைக் குறைக்க முடியாது என்கிறார் தமிழ்நாடு நிதியமைச்சர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












