விருதுநகரில் காதலி இறந்ததும் வாட்ஸப் ஸ்டேடஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்த காதலன்

காதலி

பட மூலாதாரம், Getty Images

விருதுநகரில் காதலி ரயில் முன்பு விழுந்து தற்கொலை காதலி உயிர் இழந்த அதிர்ச்சியை தாங்க முடியாத காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ள ராமசாமி புறத்தை சேர்ந்த சோலை மீனா(20). விருதுநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். விருதுநகர் பரங்கி நாதபுரம் தெருவைச் சார்ந்த பிரவின் குமார் (28). இருவரும் காதலித்து வந்துள்ளதாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று இரவு மருத்துவமனைக்கு பணிக்கு சென்ற சோலை மீனா காலை பட்டம்புத்தூர் அருகே ரயில் தண்டவாளத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

சோலை மீனா இறந்த செய்தியை கேட்ட பிரவீன் குமார் அவர் தற்கொலை செய்து கொண்ட சில மணி நேரங்களிலேயே சிலரது பெயரைக் குறிப்பிட்டு ஒரு கடிதத்தை எழுதி வாட்ஸ்ஆப் ஸ்டேடஸாக வைத்துவிட்டு, ரயில் முன் பாய்ந்திருக்கிறார்.

அதில் தலையில் பலத்த காயம் அடைந்த பிரவீன்குமார் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக மாலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மதுரை செல்லும் வழியில் திருமங்கலம் அருகே சென்று கொண்டிருக்கும்போது பிரவீன் குமாரின் உயிர் பிரிந்தது பின்னர் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரவீன்குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது.

எதன் காரணமாக சோலை மீனா தற்கொலை செய்து கொண்டார், சோலை மீனாவின் காதலன் பிரவீன் குமார் எழுதிய கடிதத்தின் உண்மை என்ன என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: