இந்திய அரசியலில் தாக்கம் செலுத்தும் உபி, பஞ்சாப் தேர்தல் முடிவுகள் - எப்படி?

உத்தர பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பி பி சி நிருபர்

இந்த அனிமேஷனை பார்வையிட ஜாவா ஸ்கிரிப்ட் வசதியுடைய உலாவி (ப்ரெளசர்), நிலையான இன்டர்நெட் சேவை அவசியம்.

உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரபூர்வம் இன்னும் சில மணி நேரத்தில் வெளியாகவுள்ளன. இதில் பஞ்சாப் நீங்கலாக மற்ற நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி கிட்டத்தட்ட வெற்றியை எட்டியிருப்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவுகளில் பிராந்தியக் கட்சிகள் தவிர, பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எதிர்கொள்கின்றன.

மாநிலங்களவை இடங்களின் சமன்பாடு

முதலில், ராஜ்யசபா பற்றி அறிவோம்.

இது குறித்து, மூத்த பத்திரிகையாளர் அனில் ஜெயின் கூறுகையில், மாநிலங்களவையில் உள்ள 245 இடங்களில் தற்போது 8 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது பாஜகவிற்கு 97 இடங்கள் உள்ளன. அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 114 ஐ எட்டுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, அசாம், இமாச்சலப் பிரதேசம், கேரளா, உ.பி., உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 70 ராஜ்யசபா இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

உ.பி.யில் 11 இடங்களுக்கும், உத்தராகண்டில் ஒரு இடத்துக்கும், பஞ்சாபில் இரண்டு இடங்களுக்கும் இந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இந்த மூன்று மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் ராஜ்யசபா சமன்பாட்டை நேரடியாகவே பாதிக்கும் என்பது தெளிவாகிறது.

அனில் ஜெயின் கூறுகையில், "முன்பு மாநிலங்களவையில் பெரும்பான்மையை விட பாஜக வெகு குறைவான இடங்களைப் பெற்றிருந்த போதிலும், ஐந்து மாநிலங்களின் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்றால், வரும் நாட்களில் அவை பெரும்பான்மையிலிருந்து வெகுவாகவே விலகி விடும். இது குடியரசுத் தேர்தலிலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்."

குடியரசு தலைவர் தேர்தலில் தாக்கம்

राज्यसभा

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தல் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது.

மறைமுக வாக்கு மூலம் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. மக்களுக்கு பதிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்கிறார்கள்.

குடியரசு தலைவர் தேர்தலை ஒரு தேர்வுக் குழு நடத்துகிறது. இந்தக் குழு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

குடியரசு தலைவர் தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விகிதாசார பிரதிநிதித்துவ முறையின்படி, ஒவ்வொரு வாக்குக்கும் ஒரு தனி முக்கியத்துவம் உள்ளது.

எம்.பி.க்களின் வாக்குகளின் வலிமை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் வெவ்வேறு மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்தது.

உதாரணமாக, நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் எம்எல்ஏக்களின் வாக்குக்கான புள்ளிகள் 208 ஆகவும், குறைந்த மக்கள்தொகை கொண்ட மாநிலமான சிக்கிமின் எம் எல் ஏ-க்களின் வாக்குகளுக்கு 7 புள்ளிகளாகவும் உள்ளன.

ஒவ்வொரு எம்.பி.யின் வாக்குகளின் வெயிட்டேஜ் 708 ஆகும். இந்தச் சூழலில் ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ஒவ்வொரு கட்சியினருக்கும் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்படவேண்டியவை.

மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்கள் வாக்குகளும்

உத்தர பிரதேசம்

பட மூலாதாரம், RASHTRAPATI BHWAN

இந்தியாவில் மொத்தம் 776 எம்பிக்கள் உள்ளனர். 776 எம்.பி.க்களின் வாக்குகளின் வெயிட்டேஜ் - 5,49,408 (சுமார் ஐந்தரை லட்சம்)

இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4120. இந்த அனைத்து எம்எல்ஏக்களின் கூட்டு வாக்கு 5,49,474 (சுமார் ஐந்தரை லட்சம்)

இதன்படி, குடியரசு தலைவர் தேர்தலில் மொத்த வாக்குகள் - 10,98,882 (தோராயமாக 11 லட்சம்)

பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் எளிதில் வெல்ல முடியுமா இல்லையா என்பதை இந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் நீரஜா செளத்ரி கூறுகிறார். உத்தர பிரதேசத்தில் 2017ஆம் ஆண்டை விட அதிக இடங்கள் பெற பாஜக தவறிவிட்டால், குடியரசுத் தலைவர் தேர்தலில் அதற்குப் பின்னடைவு ஏற்படும்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக முன் நிறுத்தப்படும் வேட்பாளர் குறைவான வாக்குகளைப் பெற்றாலும் வெற்றி பெறுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அனில் ஜெயின் கூறுகிறார்.

பாஜகவிடம் தற்போது 398 எம்.பி.க்கள் உள்ளதாகவும், அனைத்து மாநிலங்களிலுமுள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையைச் சேர்த்தால் 1,500 பேர்தான் என்றும் அவர் தெரிவித்தார். இவற்றில் பெரும்பாலானவை குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்கு மதிப்பு உள்ள மாநிலங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற, ஐந்தரை லட்சத்துக்கும் சற்று அதிகமான வாக்குகள் தேவை. பிஜேபிக்கு நாலரை லட்சம் வாக்குகள் உள்ளன, மீதியை கூட்டணி கட்சிகளின் உதவியுடன் சாதிக்க முடியும். பிரச்சினைகளின் அடிப்படையில் பாஜகவை ஆதரிக்கும் கட்சிகள் கொண்ட மாநிலங்களின் எம் எல் ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்களின் ஆதரவையும் அக்கட்சி பெறலாம். இதனால், பா.ஜ.,வுக்கு பெரிய சிரமம் இருக்காது.

மோடி-யோகி நற்பெயர்களின் மீதான தாக்கம்

உத்தர பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

உத்தர பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் வகையில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்காலத்தில் பிரதமர் பதவி வேட்பாளராவாரா என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

உ.பி.யில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளதால் மோதியின் புகழ் இன்னும் செல்லுபடியாகிறது என்றும் அவரது பல்வேறு திட்டங்களின் பயனாளிகள் அவருடன் தோளோடு தோள் நிற்கின்றனர் என்றும் புரிந்துகொள்ளலாம் என்று நீரஜா கூறுகிறார்.

இது குறித்து, மூத்த பத்திரிக்கையாளர் அதிதி ஃபட்னிஸ் கூறுகையில், முடிவுகள் எப்படியிருந்தாலும், அதன் தாக்கம் யோகி மற்றும் மோதியின் செல்வாக்கு மீதே இருக்கும் என்கிறார்.

"பாஜக தலைவர்களின் முன்னுரிமைப் பட்டியலில் யோகி ஆதித்யநாத் தற்போது ஐந்தாவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் வெற்றி பெற்றால், அவர் இரண்டாம் இடத்துக்கு வரலாம். ஆனால் அவர் தோற்றால், மேலிடத்திலிருந்து கேள்விகள் எழுப்பப்படும். அதாவது, உ.பி.யில் வெற்றி பெற்றால் மோடி-யோகி என்ற முத்திரை வலுப்பெறும், இடங்கள் குறைந்தால் வலுவிழக்கும். "

இது மத்திய பாஜகவின் முடிவுகளிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அதிதி மேலும் கூறுகிறார். சென்ற முறையை விட, பா.ஜ.,வின் செயல்பாடு சிறப்பாக இல்லையென்றால், மத்திய அரசின் வேகம் குறையும். மத்திய அரசு விவசாயச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது, ஆனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவை தோல்வி கண்டன. இது கருத்துப் போரை பாதிக்கும், எதிர்க்கட்சிகள் வலுப் பெறும்.

பஞ்சாபின் கணக்கும் ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலமும்

உத்தர பிரதேசம்

பட மூலாதாரம், Getty Images

மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா செளத்ரி, உ.பி.க்கு பிறகு பஞ்சாப் மாநிலத்தின் முடிவுகள் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறார்.

"ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சி அமைக்கும் நிலையில் இருப்பதால்,இந்திய அரசியலில் அந்தக் கட்சி மீதான பார்வை மாறலாம். அவரது கட்சியில் சேர விரும்பும் மக்களின் வரிசையும் அதிகரிக்கலாம்.

இப்போது வரை, மூன்றாம் அணியில் ஆம் ஆத்மி கட்சிக்குப் பெரிய மதிப்பில்லை. ஆனால் பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெறுவது ்்த கட்சிக்கு ஒரு பெரிய பாய்ச்சலாக இருக்கும். எதிர்கட்சி என்ற முறையில், அரவிந்த் கேஜ்ரிவாலின் மதிப்பு வெவ்வேறு மாநிலங்களிலும் கூடும். மேலும் காங்கிரஸால் கேஜ்ரிவாலுக்கு இந்த நிலை உருவாகும்," என்று அவர் கூறுகிறார்.

காங்கிரஸ் மீதான தாக்கம்

உத்தர பிரதேசம்

பட மூலாதாரம், Twitter/AICC

இந்த ஐந்து மாநிலங்களின் முடிவுகள் ராகுல், பிரியங்காவுக்கு மிகவும் முக்கியமானவை.

காங்கிரஸ் மூத்த பத்திரிக்கையாளர் ரஷித் கித்வாய், "உத்தராகண்ட், பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்கள் காங்கிரசுக்கு முக்கியமான மாநிலங்களாக இருக்கும். பஞ்சாபில் தலித் முதல்வர் என்ற முகத்துடன் காங்கிரஸ் களம் இறங்கியது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் தோற்றால், கட்சி, குறிப்பாக ராகுல் காந்தி மோசமாகப் பாதிக்கப்படுவார்.இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த மாநிலம், அங்கு அக்கட்சிக்கு பாஜகவுடன் நேரடிப் போட்டி இல்லை. இது வரும் நாட்களில் தேசிய அளவில் காங்கிரஸின் எதிர்க்கட்சிப் பிம்பத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்." என்று குறிப்பிட்டார்.

இந்தத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸின் உட்கட்சி அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரஷீத் மேலும் கூறுகிறார். பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், ராகுல், பிரியங்காவுக்கு எதிர்ப்புக் குரல் குறையும். ஆனால் அப்படி நடக்கவில்லை. இனி இவர்களின் தலைமைக்கு அதிருப்தி தெரிவித்து சில பெரிய தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறலாம். ஆனால், ஐந்து மாநிலங்களில் எங்கும் ஆட்சி அமைப்பதில் காங்கிரஸ் வெற்றிபெறவில்லை என்றால், காங்கிரஸில் பல பிளவுகள் ஏற்பட்டு, அதிலிருந்து பல பிராந்தியக் கட்சிகள் உருவாகலாம் என்பதே கள யதார்த்தம்.