நரேந்திர மோதி: "கொரோனா தடுப்பூசி வதந்திகளை தடுக்க ஒத்துழையுங்கள்"

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்பூசி, முக கவசம் தொடர்பாக பகிரப்படும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளிடம் வலியுறுத்தியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி.

கொரோனா, ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில முதல்வர்களுடன் இன்று காணொளி காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி இன்று பேசினார். அதில் இருந்து சில முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

  • 100 ஆண்டுகால மிகப்பெரிய தொற்றுநோய் பாதிப்பின் மூன்றாவது ஆண்டில் இந்தியா இப்போது நுழைந்துள்ளது. ஓமிக்ரானைப் பற்றிய முந்தைய சந்தேகம் இப்போது மெல்ல, மெல்ல நீக்கப்படுகிறது. ஓமிக்ரான் மாறுபாடு முந்தைய வகைகளை விட பல மடங்கு வேகமாக பொது மக்களைப் பாதிக்கிறது.
  • இந்தியாவில் உள்ள நமது விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்கள் ஒவ்வொரு சூழ்நிலையையும் தரவுகளையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். "நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், கவனமாக இருக்க வேண்டும், ஆனால் பீதி அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்பது மட்டும் தற்போதைய சூழ்நிலையில் இருந்து தெளிவாகிறது.
  • இந்த பண்டிகைக் காலத்தில் மக்கள் மற்றும் நிர்வாகங்கள் அவற்றின் விழிப்புணர்வு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கூட்டு அணுகுமுறையை முன்பு கடைப்பிடித்த விதம் ஆகியவைதான் இந்த வைரஸ் பரவல் காலத்தில் நமது வெற்றியின் தாரக மந்திரம் ஆக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

  • கொரோனா தொற்றை எவ்வளவு கட்டுப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அதன் பாதிப்பு குறையும். அறிவியல் அடிப்படையிலான தகவல்கள் மற்றும் நமது மருத்துவ உள்கட்டமைப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மருத்துவ மனிதவளத்தை நாம் தொடர்ந்து அதிகரிக்க வேண்டும்.
  • உலகின் பெரும்பாலான வல்லுநர்கள், எந்த மாறுபாடு இருந்தாலும், கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கான மிகச் சிறந்த ஆயுதம் தடுப்பூசிதான் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் அவற்றின் மேன்மையை நிரூபித்து வருகின்றன. இன்று இந்தியா சுமார் 92 சதவீத பெரியவர்களுக்கு முதலாவது டோஸ் தடுப்பூசி மருந்தை செலுத்தியுள்ளது.
X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

  • இரண்டாவது டோஸின் கவரேஜ் நாட்டில் 70 சதவீதத்தை எட்டியுள்ளது. நமது தடுப்பூசி பிரசாரம் ஒரு வருடத்தை முடிக்க இன்னும் மூன்று நாட்கள் உள்ளன. 10 நாட்களுக்குள், இந்தியா அதன் சுமார் 30 மில்லியன் இளைஞர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளது. இது இந்தியாவின் ஆற்றலைக் காட்டுகிறது,
  • தடுப்பூசி பற்றிய குழப்பத்தை பரப்பும் எந்த முயற்சியையும் நாம் அனுமதிக்கக் கூடாது. தடுப்பூசி போட்டாலும் தொற்று ஏற்படுகிறது என்று பலமுறை கேள்விப்படுகிறோம், அதனால் என்ன பயன்? முக கவசத்தை பற்றி வதந்திகள் உள்ளன, அவை பயனளிக்காது. இதுபோன்ற வதந்திகளை எதிர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
  • கொரோனாவை எதிர்த்துப் போராடியதில் நமக்கு இரண்டு வருட அனுபவம் உள்ளது. அதற்கு எதிரான நடவடிக்கையில் சாமானியர்களின் வாழ்வாதாரத்திற்கு குறைந்தபட்ச பாதிப்பே ஏற்பட வேண்டும், பொருளாதார நடவடிக்கைகள், பொருளாதாரத்தின் வேகத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு உத்தியை வகுக்கும் போதும், ​​​​இந்த விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உள்ளூர் கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அதிகமான பாதிப்புகள் நேரும் இடங்களில், அதிகபட்சமகவும் விரைவாகவும் பரிசோதனை நடப்பதை உறுதி செய்வதும் அவசியம்.
  • பாதிப்புக்குள்ளானவர்கள் இயன்றவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக, வீட்டில் தனிமைப்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதும், நெறிமுறைகளைப் பின்பற்றுவதும், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதும் மிகவும் முக்கியம்.
  • 5-6 மாதங்களுக்கு முன்பு வழங்கப்பட்ட ரூ.23,000 கோடி சிறப்புத் தொகுப்பைப் பயன்படுத்தி பல மாநிலங்கள் அவற்றின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளன. ஒமிக்ரானை சமாளிக்கும் அதே சமயம், சாத்தியமான மாறுபாடுகளுக்கான தயாரிப்புகளை நாம் இன்னும் தொடங்கவில்லை.
  • ஆயுர்வேத விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்தலாம். யுர்வேத பாரம்பரிய மருந்துகள், கசாயம் போன்றவை இந்த பருவத்தில் அவசியமானவை. அவை மருந்தில்லை என எவரும் கூற மாட்டார்கள். நமது வீட்டிலேயே பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் அவை கூட பயன் தரும்.
காணொளிக் குறிப்பு, கொரோனா பொதுமுடக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகள் என்னென்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: