திரிபுரா வன்முறைக்கு உண்மையில் என்ன காரணம்? களத்தில் பிபிசி - சிறப்புச் செய்தி

ரோவாவில் தீக்கிரையான கடைகள்

பட மூலாதாரம், Panna Ghosh/BBC

படக்குறிப்பு, ரோவாவில் தீக்கிரையான கடைகள்
    • எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ்
    • பதவி, பிபிசி செய்தியாளர், திரிபுராவில் இருந்து

திரிபுராவில் ஒரு சிறிய மதரசா பள்ளியில் மொத்தம் ஐந்து மாணவர்கள் படிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களின் முகங்களில் அச்சம் தெரிகிறது.

சிறிது நேரத்திற்கு பிறகு, ஜன்னல் வழியாக நாம் பார்க்கிறோம். பின், அந்த வயதான ஆசிரியரின் பார்வை நம் மீது விழுகிறது.

"எல்லாம் சரியாகத் தானே இருக்கிறது, ஐயா? எதுவும் சண்டை இல்லையே?" என்று அந்த வயதான ஆசிரியர் நம்மிடம் கேட்கிறார்.

மதரசாவுக்கு அருகில் ஒரு சிறிய மசூதி உள்ளது. அது தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது.

அதில் மூன்று அடி நீளம் கொண்ட ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன; மின்விசிறியின் இறக்கைகள் ஒவ்வொரு திசையிலும் வளைக்கபட்டுள்ளன. மேலும், ஆறுக்கும் அதிகமான மின் விளக்குகள் கற்களால் உடைக்கப்பட்டுள்ளன.

மசூதிக்கு பின்னால், ஒரு முஸ்லிம் குடும்பத்தின் வீடு உள்ளது. அதன் எதிரே ஒரு இந்து குடும்பம் வசிக்கிறது.

பிபிசி குழு அங்கு சென்றபோது நம்முடன் உள்ளூர் தலைமை காவலரும் வந்திருந்தார். ஒருவேளை அதனால் தானோ, அங்கிருந்த வீடுகளின் இரு கதவுகள் திறக்கபடவில்லை என நமக்குத் தோன்றுகிறது.

திரிபுரா அரசாங்கத்தின் தர்மநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாமதிலா பகுதி இது. வரலாற்றில் முதன்முறையாக சமீபத்தில்தான் இப்பகுதி மத கலவரத்தை எதிர்கொண்டு உள்ளது.

திரிபுரா வன்முறை

பட மூலாதாரம், Panna Ghosh/BBC

படக்குறிப்பு, தாக்குதலுக்கு இலக்கான மசூதி

என்ன நடந்தது? ஏன் நடந்தது?

2021ம் ஆண்டு அக்டோபர் மாதம், துர்கா பூஜை அஷ்டமி தினத்தன்று இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில், இந்துக்களுக்கு எதிராக பல பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இது முதலில் சிட்டகாவ் மாவட்டத்தில் உள்ள காமிலா நகரத்தில் தொடங்கியது. பின்னர், வங்கதேச அரசு அங்கு வாழும் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளித்தது. அந்த வன்முறை இந்தியாவை விழிப்படைய செய்தது.

"இந்தியா நமக்கு நிறைய உதவிகளை செய்துள்ளது. அந்நாட்டுக்கு நாம் கடமைப்படிருக்கிறோம். நம் நாட்டில் உள்ள இந்து சமூகத்திற்கும் எந்த தீங்கும் நடக்காமலும், இந்தியாவில் இதுபோன்று எதுவும் நடக்காமல் இருக்கவும் விருப்புகிறோம். அதன் பொறுப்பு நம் நாட்டிற்கு உள்ளது.", என்று அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.

ஆனால் இந்த வன்முறையின் விளைவு, வங்கதேசத்தை மூன்று பக்கத்தின் எல்லையாக கொண்டுள்ள திரிபுராவில் உடனடியாக எதிரோலித்தது.

பத்து நாட்களுக்குள், அடையாளம் தெரியாத நபர்கள் கோமதி மாவட்டத்தில் உள்ள மசூதிக்கு தீ வைத்தனர் என்று செய்தி பரவியது. அதன்பிறகு சிபாஹிஜாலா மாவட்டத்தில் உள்ள மசூதியில் வன்முறை நடத்தும் முயற்சி தோல்வியடைந்ததாகவும் செய்தி வந்துக்கொண்டே இருந்தது.

இதனை விடவும், முஸ்லிம்களின் முக்கிய தலைவரான ஜமாத்-ஏ -உல்மா முதல்வர் பிப்லப் குமார் தேவை சந்தித்து பேசினார். அப்போது அவர், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள அமைதி சீர்குலைந்துள்ளது என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசும் உறுதியளித்தது.

प्रतिवाद रैली

பட மூலாதாரம், Panna Ghosh/BBC

படக்குறிப்பு, प्रतिवाद रैली की एक तस्वीर

பானிசாகர் வன்முறை

அக்டோபர் மாதம் 26ம் தேதியன்று, வட திரிபுராவில் இருந்து ஒரு சிறப்பு பேரணி புறப்பட்டது. வங்கதேசத்தின் இந்துக்கள் நடந்த வன்முறைக்கு எதிர்த்து நடந்த பேரணி அது.

கிட்டதட்ட பத்தாயிரம் பேர்கலந்துக்கொண்ட இந்த பேரணியில், விஷ்வ இந்து பரிக்‌ஷத் உறுப்பினர்களை தவிர, மற்ற இந்து அமைப்புகளை சார்ந்தவர்களும், ,முக்கிய உறுப்பினர்களும் இருந்தனர்.

இந்த பேரணி தொடக்கத்தில் அமைதியாக நடந்ததாகவும், பின்னர் வன்முறையாக மாறியதாகவும் சிறுபான்மையினரான முஸ்லீம்கள் தெரிவிக்கின்றனர்.

திரிபுரா வன்முறை
படக்குறிப்பு, பிஜித் ராய், பேரணியின் அமைப்புக் குழு உறுப்பினர்

இந்த பேரணியைநடத்தியவர்களுள் ஒருவர் பிஜித் ராய். அவர் பானிசாகர் விஷ்வ இந்து பரிக்‌ஷத்தின் உறுப்பினரும் ஆவார்.

அவர் பிபிசியிடம்கூறுகையில், "நாங்கள் அமைதியான பேரணி நடத்தவே திட்டமிட்டிருந்தோம். இங்கிருந்து சாம்திலா வரை அமைதியாக பேரணி நடந்தது.

நாங்கள்சென்றுக்கொண்டிருந்தோம். திடீரென அங்கிருந்து சண்டை நடக்கும் சத்தம் கேட்டது.நாங்கள் ஓடிச்சென்று பார்த்தோம். அங்கே கற்கள் எறிந்துக்கொண்டிருந்தனர். இதனைபார்த்து, நாங்கள் தடுத்து நிறுத்தினோம். எதிரில் ஒரு மசூதி இருந்தது. நாங்கள் தான் அந்த மசூதியை காப்பாற்றினோம்.", என்றார்.

திரிபுரா வன்முறை
படக்குறிப்பு, சம்திலா மசூதி

"இந்த பேரணி வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடந்த வன்முறை குறித்தது எனில், இந்திய முஸ்லீம்களை ஏன் மையப்படுத்துகிறீர்கள் ?", என்ற நான் கேட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளிக்கிறார்."இந்திய முஸ்லீம்களுக்கும் எங்களுக்கு இடையே எந்த பகையும் இல்லை; இந்திய முஸ்லீம்களும்நம் மக்களே. எங்களுக்கு எவ்வளவு உரிமைகள் உள்ளதோ, அவர்களுக்கும் அது பொருந்தும்",என்று பிஜித் கூறுகிறார்.

அவர்கள் எந்த மசூதியை காப்பாற்றினார்கள் என்று கூறினாரோ, அந்த மசூதியில் வன்முறையின் தாக்கம் நன்றாகவே தெரிகிறது.

அங்கு தாக்குதலுக்கு முன்பும் பின்னும் உள்ள வித்தியாசம் இன்றும் உள்ளது.

मस्जिद के अंदर की तस्वीर
படக்குறிப்பு, மசூதிக்கு உளளே

இந்த சம்பவம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர், மற்றொரு சிறிய தகரக் கூரை கொண்ட மசூதியிலும் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

திரிபுராவில் முஸ்லீம்கள் சிறுபான்மையினர்; மேலும், அங்குள்ள பெரும்பான்மையினரான இந்துகளின் எண்ணிக்கை 83 சதவீதமாகும். இதிலுள்ள பெரும்பாலான இந்துக்கள் வங்கதேசத்திலிருந்து வந்த இந்துக்களாகும்.

திரிபுராவில் முஸ்லீம்கள் மீது நடந்த வன்முறை, இதன் விளைவே என்று மக்கள் பார்க்கின்றனர். ஆனால், இது தவிர, அங்கு மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அதை மறுபடியும் சந்திக்கும் நிலையில் இல்லை என்ற அச்சத்தில் உள்ளனர்.

திரிபுரா வன்முறை

பட மூலாதாரம், Panna Ghosh/BBC

படக்குறிப்பு, ரோவாவில் பற்றி எரியும் கடைகள்

ரோவாவில் நடந்த வன்முறை

சாம்திலா மசூதியிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, ரோவா நகரம். அங்கு குறைந்தது ஐந்து கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

அங்குள்ள இரண்டு கடைகள் மட்டுமே சேதமடைந்தது என்று எதிர்ப்பு பேரணி குழு தெரிவித்தது. ஆனால், பிபிசி இந்த ஐந்து கடைகளுக்கும் நேரடியாக சென்று நிலவரத்தின் உண்மை நிலையை கண்டறிந்தது.

இந்த கடைகள் முழுதாகவோ அல்லது பாதியோ தீயில் கருகி இருந்தன. அக்கடைகளின் பெயர்கள் -அமீர் உசேன், முகமது அலி தாலுகதார், சனோஹர் அலி, நீசாமுதின்மற்றும் அமீருதீன்.

अमीरुद्दीन
படக்குறிப்பு, அமீருதீன்

அமீருதீன் கூறுகையில்,"எங்களின் எதிரில் முதலில் தகராறு நடந்தது. பின்னர், எங்களின் கடைகளில் திருடி, பிறகு தீ வைத்துவிட்டனர். நாங்கள் மசூதிக்கு எதிரே இருந்தோம்; முன்னால் நாங்கள் சென்று இருக்கலாம் , அனால் காவல்துறையினர் 'நில்லுங்கள்', 'நில்லுங்கள்' என்றுகூறினர்", என்று தெரிவித்தார்.

அமீருதீனின் கடை தீயில் கருகிறது; அதன் அருகில் உள்ள கடையும் தீயில் கருகி, அங்குள்ள குளிர்சாதனப்பெட்டி வெடித்தது.

சனோஹர் அலி ரோவாவில் வசிப்பவர்; அவர் கூறுகையில் , "வன்முறை நடந்தப்போது நாங்கள் அருகிலுள்ள மற்றொரு மசூதிக்கு பின்னால் இருந்தோம்", என்றார்.

அவர் கூறுகிறார்,"அவர்கள் அங்கு முன்னேறி செல்ல முடியாத நிலையில், அவர்கள் கோபமடைந்து எங்கள் கடைகளை தாக்கினர். முதலில், அங்குள்ள கடையில் தீவைத்தனர்; பின்னர், வங்கத்தில் உள்ள கடைக்குதீ வைத்தனர். இங்கு காலணிகள் இருந்தன ; துணிமணிகள் இருந்தன, பைகள் மற்றும் குடைகள் இருந்தன ; மொத்தமாக கருகிவிட்டன", என்கிறார்.

நேரில் பார்த்தவர்களின் கூற்றுப்படி,அங்கு ஏழு அல்லது எட்டு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். ஆனால், அசம்பாவிதங்களை தவிர்க்க அது போதாது என்கின்றனர்.

रोवा में जलती हुई दुकानें
படக்குறிப்பு, ரோவாவில் தீக்கிரையான கடை

கதமதலாவில் என்ன நடந்தது?

சாம்திலா மசூதி மற்றும் சிறுபான்மையினரின் கடைகளில் தீவைப்பு பற்றின சம்பவங்கள் சமூக வலைதளங்களில் காட்டு தீயை போல வேகமாக பரவியது என்று தர்மநகர் மாவட்டத்திலுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கு அரசாங்கத்தின் பாதுகாப்பு வாகனங்கள் சூழ்ந்துக்கொண்டு இருக்கும் நிலையில்,அண்டை பகுதியான கதமதலாவின் சட்டமன்றத்தில்முஸ்லீம்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அன்றைய இரவு பத்து மணியளவில், கதமதலாவுக்கு அருகில் உள்ள சூடாயிபாடி நகரத்தில் வன்முறை ஏற்பட்டது.

மேலும், அங்குள்ள இந்து குடும்பங்கள் வசிக்கும் வீடுகள் மீது கற்கள் எறியப்படட்து.

அதில் ஒன்று, சுனாளிசாஹா என்பவரின் வீடும் அடங்கும்.

அவரின் வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.

திரிபுரா வன்முறை
படக்குறிப்பு, சுனாலி சாஹா மற்றும் அவரது தாயார்

இதுகுறித்து சுனாளி கூறுகையில், " நான் படித்துக்கொண்டு இருந்தேன். திடீரென சிலர் இந்த பக்கத்திலிருந்து வந்து, தகராறு செய்தனர். நாங்கள் வெளியிலும் செல்ல முடியவில்லை; அவ்வளவு வன்முறை நடந்து கொண்டிருந்தது. அம்மா இந்த கதவை மூடிவிட்டார். பின்னர், பத்து, ஐந்து நிமிடங்களில் அமைதியடைந்தது. நாங்கள் வெளியில் வரமுடியவில்லை; ஏனென்றால் அவ்வளவு கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது. இதுபோன்று நடப்பது முதல்முறை என்பதால் எனக்கு மிகவும் அச்சமாக இருந்தது; இப்போதும் மிகவும் அச்சமாக உள்ளது",என்று தெரிவிக்கிறார்.

கதமதலாவின் எம்.எல்.ஏவான இஸ்லாமுதீன் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர் . அவர் கூறுகையில், "பானிசாகர் சம்பவத்திற்கு பிறகு,முஸ்லீம் சமூகம் கோபமடைந்திருக்கிறது என்பது உண்மையே. அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க நாங்கள் ஒவ்வொரு நிலையிலும் முயற்சி செய்து வருகிறோம்", என்று தெரிவிக்கிறார்.

அவர் மேலும் கூறுகையில், "தொடக்கத்தில் காவல்துறை - அரசு நிர்வாகமும் மும்முரமாக இல்லை, பனிசாகர் வன்முறைக்குப் பிறகுதான் நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டது . பானிசாகர் பேரணிக்குப் பிறகு, கதம்தலா, உனகோட்டி மாவட்டம், தர்மநகர், யுவராஜ்நகர் ஆகிய இடங்களில் முஸ்லீம்களின் போராட்டங்கள் தொடங்கின . - நிர்வாகம் செயல்பட்டு உள்ளது." என்று தெரிவிக்கிறார்.

திரிபுராவின் மூன்று மாவட்டங்களில்நடந்த பதட்டமான சம்பவங்களுக்குப் பிறகு நிர்வாகத்தின் செயல்பாடு குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

कदमतला के विधायक इस्लामुद्दीन
படக்குறிப்பு, கடமத்தலா எம்எல்ஏ இஸ்லாமுதீன்

ஏறக்குறைய அனைத்து விவகாரங்களிலும் நடவடிக்கை மெத்தனமாக இருப்பதாகவும், சந்தேகிக்கப்படும் நபர்களை கைது செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும்குற்றச்சாட்டுகள் உள்ளன.

திரிபுரா(வடக்கு) காவல் அதிகாரி பானுபதா சக்ரவர்த்தி இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து பிபிசியிடம் கூறினார், "தர்மநகர் பேரணியில் 10,000 பேர் ஈடுபட்டது உண்மைதான்,ஆனால் மசூதி எரிக்கப்பட்டதா இல்லையா என்பது இன்னும் விசாரணையில் உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது.நடவடிக்கை குறித்த கேள்விக்கு, யாரையும் பாரபட்சமின்றி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளோம்." என்று தெரிவித்தார்.

அழுத்தம்

திரிபுராவை ஒட்டி 856 கிமீ நீளமான எல்லையில் வங்கதேசம் உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் பெரும்பான்மையான முஸ்லீம்கள் டத்திய வன்முறைகள் இங்கு நடந்த சில ஆர்ப்பாட்டங்களைத் தவிர பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

1980 ஆம் ஆண்டில், திரிபுராவில் பெங்காளிகள் மற்றும் பழங்குடியினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது, இதில் இந்துக்கள் மற்றும்முஸ்லிம்கள் இருவரும் ஈடுபட்டனர்.

2018 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தலில் சிபிஎம் தலைமையிலான இடதுசாரி அரசை பாரதிய ஜனதா கட்சி தோற்கடித்தது. அப்போது மாநிலத்தில் 25 ஆண்டுகளாக இடதுசாரிகள் ஆட்சியில் இருந்தனர்.

மாநிலத்தில் பாஜக அரசு அமைந்தது முதல், மத நல்லிணக்கம் பலவீனமடைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதே கேள்வியை திரிபுரா சட்டமன்ற துணை சபாநாயகரும் தர்மநகர் எம்.எல்.ஏவுமான பிஸ்வபந்து சென்னிடம் பிபிசி கேட்டது.

மேலும் முஸ்லிம் சமூகம் பயப்படுகிறதா என்பதை அறிய பிபிசி விரும்புகிறது.

திரிபுரா வன்முறை
படக்குறிப்பு, திரிபுரா சட்டப்பேரவை துணை சபாநாயகரும், தர்மநகர் எம்எல்ஏவுமான பிஸ்வபந்து சென்

பிஸ்வபந்து சென், "இல்லை, அப்படியெல்லாம் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை உணர்ந்து உள்ளனர். நாங்கள் சொல்கிறோம் யார் மோடிக்கு எதிராக, பாஜகவுக்கு எதிராக, பிப்லாப் தேப் ஜிக்கு எதிராக பேசுகிறார்களோ, அவர்களால்தான் வகுப்புவாத பிளவு தொடங்கியது.", என்று கூறுகிறார்.

பானிசாகர் வன்முறை சம்பவத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, திரிபுரா அரசு இரண்டு பெண் பத்திரிக்கையாளர்களை, கலவரம் ஊட்டும் உள்ளடக்கத்தை வெளியிட்டதாகக் கூறி, கைது செய்தது.

ஆனால் இரண்டு நாட்களுக்குள், வகுப்புவாத வன்முறையைப் செய்தி தெரிவித்தால் அங்கு வந்த இந்த இரண்டு பத்திரிகையாளர்களையும் விடுவிக்குமாறு திரிபுரா நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக மூத்த தலைவர் பிஸ்வபந்து சென்னிடம், "பத்திரிக்கைத் துறை எப்போது குற்றமாக மாறியது? பத்திரிகையாளர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள், புகைப்படம் மற்றும் சான்றுகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றால், எந்தக் குற்றமும் இல்லாமல் காவலில் வைப்பதா? என்ன இதுதான் ஜனநாயகமா?"என்ற நாம் கேட்டோம்.

இந்த கேள்விக்கு பிஸ்வபந்து சென் நேரடியாக பதில் அளிக்காமல், ஜனநாயகத்தை முழு நேர்மையான பத்திரிக்கையாளர்கள் தான் எடுத்து கொள்கிறார்கள், அரசியல் கட்சிகள் அல்ல, பலர் ஃபேக் நியூஸ் செய்கிறார்கள், இது ஜனநாயகமா? சில பத்திரிகைகள் உள்ளன, அவர்கள் எப்போதும் எதையாவதை பரப்புகிறார்கள்." என்கிறார்.

ஆனால், உண்மையில் காணப்படுவது கூற்றுக்களிலிருந்து மிகவும் வேறுபட்டது.

இந்த சம்பவங்கள் திரிபுராவின் இதயத்தையே உலுக்கியது என்பதே நிதர்சனம். வன்முறையை உன்னிப்பாகக் கவனித்தவர்கள் மற்றும் சுதந்திர இந்திய வரலாற்றில் திரிபுரா மாநிலத்தில் ஒருபோதும் வகுப்புவாத வன்முறைகள் நடந்ததில்லை என்பதில் பெருமிதம் கொண்டவர்களாக இருந்தனர்.

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பானிசாகர் பிரிவின் தலைவரும், 'பிரதிவாத் பேரணி' அமைப்பாளர்களில் ஒருவருமான பிஜித் ராயிடம், "நடந்ததற்கு அவர்கள் வருந்துகிறார்களா?" என்று கேட்டோம்.

சுமார் பத்து வினாடிகள் இடைநிறுத்தி, "மிகவும் வருந்துகிறோம். அடுத்த நூறு ஆண்டுகளில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்வோம்" என்றார்.

ஒரு சிறிய அரசின் மதரஸாவில் மொத்தம் ஐந்து குழந்தைகள் படிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களின் முகங்களில் அச்சம் தெரிகிறது.

காணொளிக் குறிப்பு, பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் யோகி அரசு - டிசம்பரில் 24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :