You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மோதி அமைச்சரவை 2.0: 15 கேபினட், 28 இணை அமைச்சர்கள் பதவியேற்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் உள்பட 43 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். இதில் 15 பேர் கேபினட் அந்தஸ்துடன் கூடிய அமைச்சர்களாகவும் முருகன் உள்பட 28 பேர் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோதியின் யோசனைப்படி இந்த நியமனத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் செய்துள்ளதாக அவரது மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேபினட் அமைச்சர்கள்
- நாராயண் டாடு ராணே
- சர்பானந்த சோனவால்
- டாக்டர் வீரேந்தர் குமார்
- ஜோதிர்ஆதித்ய சிந்தியா
- ராம்சந்திர பிரசாத் சிங்
- அஷ்வினி வைஷ்ணவ்
- பஷுபதி குமார் பராஸ்
- கிரண் ரிஜிஜு
- ராஜ் குமார் சிங்
- ஹர்தீப் சிங் பூரி
- மன்சூக் மாண்டவியா
- பூபேந்தர் யாதவ்
- பர்ஷோத்தம் ரூபாலா
- ஜி. கிஷண் ரெட்டி
- அனுராக் சிங் தாகுர்
இணை அமைச்சர்கள்
- பங்கஜ் செளத்ரி
- அனுப்ரியா சிங் படேல்
- டாக்டர் சத்ய பால் சிங் பாகெல்
- ராஜீவ் சந்திரசேகர்
- ஷோபா கரண்ட்லஜே
- பானு பிரதாப் சிங் வெர்மா
- தர்ஷண விக்ரம் ஜார்தோஷ்
- மீனாக்ஷி லேகி
- அன்னபூர்ணா தேவி
- ஏ. நாராயணசாமி
- கெளஷல் கிஷோர்
- அஜய் பட்
- பி.எல். வெர்மா
- அஜய் குமார்
- செளஹான் தேவுசின்ஹ்
- பக்வந்த் குபா
- கபில் மோரேஷ்வர் பாட்டீல்
- பிரதிமா பூமிக்
- டாக்டர் சுபாஸ் சர்கார்
- பகவத் கிஷண் ராவ் கரட்
- ராஜ்குமார் ரஞ்சன் சிங்
- டாக்டர் பாரதி பிரவீண் பவார்
- பிஷேஸ்வர் துடு
- ஷாந்தனு துடு
- டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்
- ஜான் பார்லா
- எல். முருகன்
- நிஷித் பிராமனிக்
மத்தியில் 2019ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோதி தமது அமைச்சரவையில் மேற்கொள்ளப்போகும் முதலாவது மாற்றம் இது என்பதால் இந்த அமைச்சரவை விரிவாக்கம் அரசியல் ரீதியிலான கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா முழுவதும் 25 வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பிரநிதித்துவம் தரும் வகையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற்றுள்ளனர்.
12 பேர் பதவி பறிப்பு
பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவுபடுத்தப்பட்ட வேளையில், பழைய அமைச்சரவையில் இருந்து சதானந்த கெளடா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்பட 12 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அந்த 12 பேரின் ராஜிநாமாவை ஏற்கும்படி பிரதமர் மோதி இன்று மாலை பரிந்துரை செய்ததையடுத்து அவர்களின் கடிதங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று அவரது மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் பட்டியலில் டி.வி. சதானந்த கெளடா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருடன் சேர்த்து தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் குமார் காங்வார், பாபுல் சுப்ரியோ, தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ், ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, தேபஸ்ரீ செளத்ரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் தாவர்சந்த் கெலாட் ஏற்கெனவே மாநில ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை கர்நாடகா மாநில ஆளுநராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் நியமித்தார்.
அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிளங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்களுக்கு பாஜக மேலிடம் தேர்தல் பணிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
- இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் - எல்ஓசி போல மாறுகிறதா எல்ஏசி?
- 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரதட்சணை: இந்திய திருமணங்கள் பற்றிய ஆய்வு
- யூட்யூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இனி என்ன நடக்கும்?
- யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?
- ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பைக் கவனிக்கும் தமிழக மாணவர்கள்
- கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்