You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மகாராஷ்டிர கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: 13 நோயாளிகள் பலி
மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் ஒரு கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உயிரிழந்தனர்.
மும்பையில் இருந்து 70 கி.மி. தொலைவில் உள்ள விரார் நகரில் வசை என்ற இடத்தில் உள்ள விஜய் வல்லப் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தை அடுத்து, அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
மின் கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து எப்படி நடந்தது?
அதிகாலை 3.30 மணி அளவில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த ஏசி வெடித்து தீப்பிடித்தது என்று சம்பவம் நடந்தபோது அங்கிருந்த ஒரு போலீஸ்காரர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.
தீப்பற்றியபோது தீவிர சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் இருந்தனர். 4 நோயாளிகளும், ஊழியர்களும் வெளியேறினர். ஆனால், மற்ற நோயாளிகளால் வெளியேற முடியவில்லை.
வெளியேறிய நோயாளிகள் 4 பேரும் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கோவிட் அல்லாத நோய்களுக்காக சிகிச்சை பெற்றுவந்த 80 நோயாளிகளுக்கு பாதிப்பு ஏதுமில்லை.
கடந்த புதன்கிழமை மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவு காரணமாக 24 நோயாளிகள் உயிரிழந்தனர்.
விஜயவாடாவில் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 கொரோனா நோயாளிகள் கொல்லப்பட்டனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ஒரு கோவிட் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
இது தவிர, கோவிட் சிக்கல் ஏற்பட்டது முதலே இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும் கோவிட் நோயாளிகள் சிகிச்சை பெறும் பல மருத்துவமனையிகளில் தீவிபத்து ஏற்பட்டு நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
- டெல்லி கொரோனா: காலியான ஆக்சிஜன் - ஆபத்தான கட்டத்தில் நோயாளிகள் - கதறி அழும் மருத்துவர்கள்
- வேலைக்கே போகாமல் 4.8 கோடி ரூபாய் சம்பளம் - ஏமாற்றிய அரசு ஊழியர்
- காஞ்சி கைத்தறி சங்கத்தில் சுருட்டப்பட்ட பல கோடிகள் - இப்படியும் முறைகேடு நடக்குமா?
- தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி - எப்போது கிடைக்கும்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: