சத்தீஸ்கர் தாக்குதலில் காணாமல் போன வீரரை விடுவித்த மாவோயிஸ்டுகள்

பட மூலாதாரம், GANESH SINGH
சத்தீஸ்கரின் பிஜாபுரில் சமீபத்தில் மத்திய துணை ராணுவ படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எதிரான தாக்குதலின்போது பிணைக்கைதியாக பிடித்துச் செல்லப்பட்ட மத்திய ரிசர்வ் காவல் படை வீரர் ராகேஷ்வர் சிங்கை மாவோயிஸ்டுகள் விடுவித்துள்ளனர்.
கடந்த ஐந்து நாட்களாக அவர் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாடுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், பசனகுடா காவல் நிலையத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட அவர், அரசு நியமித்திருந்த மத்தியஸ்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த தகவலை பிபிசியிடம் பேசிய பஸ்தார் பகுதி காவல்துறை உயரதிகாரி பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 1
ராகேஷ்வர் சிங்கை ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அங்குள்ள மருத்துவமனையில் அவரை சேர்த்து மருத்துவ பரிசோசனைக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன் பிறகு அவரிடம் அதிகாரிகள் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 2
முன்னதாக, மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது பெற்றவரும் மாதா ருக்மணி சேவா சன்ஸ்தான் அமைப்பின் தலைவருமான தர்ம்பால் சைனி, உள்ளூர் பழங்குடியின தலைவர் டேலாம் பெளரய்யா நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் புதன்கிழமை மாலையில் மாவோயிஸ்டுகளின் பகுதிக்குச் சென்று அவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டபோதும், அவர் தொடர்புடைய பிற தகவல்களை முழுமையாக வெளியிட அதிகாரிகள் முன்வரவில்லை.

பட மூலாதாரம், MOHIT KANDHARI / BBC
கடந்த சனிக்கிழமை பிஜாபுரில் நடந்த தாக்குதல் சம்பவத்தின்போது 22 மத்திய துணை ராணுவ படையினர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், மாவோயிஸ்டுகள் தரப்பில் நான்கு பேரும் ஒரு பொதுமக்களும் கொல்லப்பட்டதாக மாவோயிஸ்டுகள் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் தெரிவித்தனர்.
அப்போது தங்கள் வசம் ஒரு சிஆர்பிஎஃப் வீரர் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் தாக்குதலில் 24 படையினர் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்தே மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தி அந்த சிஆர்பிஎஃப் வீரரை விடுவிக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 3
முன்னதாக, தங்கள் தரப்பில் ராகேஷ்வர் சிங் இருப்பதாக மாவோயிஸ்டுகள் கூறியதை மத்திய துணை ராணுவப்படை உயரதிகாரிகள் ஏற்க மறுத்தனர். இதைத்தொடர்ந்து அவரை பிணைக்கைதி ஆக பிடித்து வைத்திருக்கும் தகவலை உள்ளூர் செய்தியாளர் மூலம் அரசுக்கு மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். பின்னர் அவர் தங்கள் வசம் இருக்கும் படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து அவரை விடுவிக்கும் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த சமூக செயல்பாட்டாளரும் சிறைக்கைதிகள் விடுதலை குழுவின் அமைப்பாளருமான சோனி சோரி மாவோயிஸ்டுகளை சந்திக்க அவர்கள் உள்ளதாக கூறப்படும் ரகசிய பகுதிக்குச் சென்றார். ஆனால், அவரை சந்திக்காமல் மாவோயிஸ்டுகள் குழுவினர் திருப்பி அனுப்பினர். இதைத்தொடர்ந்து தங்களுடன் பேச்சு நடத்த அரசு சார்பில் முறைப்படி மத்தியஸ்த குழுவினரை நியமிக்க வேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டது.
ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவி மீனு, "இது எனது வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான தருணம். எனது கணவர் திரும்பி வருவார் என்று உறுதியாக நம்பினேன். அவரை மீட்டுக் கொடுத்த அரசுக்கு நன்றி," என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு, 4
உடலைச் சுற்றி கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த ராகேஷ்வர் சிங் என்ற சிஆர்பிஎஃப் வீரரை, முகத்தை துணியால் மறைத்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் ஊர் மக்கள் முன்னிலையில், அரசு நியமித்த மத்தியஸ்த குழுவினரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சியை நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் சுற்றி அமர்ந்தவாறு பார்வையிட்ட காணொளியை உள்ளூர் பத்திரிகையாளர் பதிவு செய்திருந்தார்.
ராகேஷ்வர் சிங் விடுவிப்பு தொடர்பான காட்சிகளை படப்பதிவு செய்த உள்ளூர் பத்திரிகையாளர் கணேஷ் மிஸ்ரா, "நான் ராகேஷ்வர் சிங்கை பார்த்தபோது அவரது உடல்நிலை நன்றாகவே இருந்தது. தோள்பட்டையில் சிராய்ப்புகள் இருந்தன. தாக்குதலுக்கு பிந்தைய நாளிலேயே தாம் மாவோயிஸ்டுகளிடம் பிடிபட்டதாக ராகேஷ்வர் சிங் கூறினார்," என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: