நரேந்திர மோதி பிரசாரத்தில் கலந்துகொள்ள சென்ற எஸ்.பி. வேலுமணி, தனபால் கார்கள் விபத்து

பிரதமர் மோதி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த வழியில் தமிழ்நாடு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் தனபால் ஆகியோர் சென்ற கார்கள் விபத்துக்குள்ளாயின.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொள்ளும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு வேலுமணி, தனபால் ஆகியோர் சென்றுகொண்டிருந்த நிலையில்தான் இந்த விபத்து நடந்துள்ளது.
கார்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டாலும், யாருக்கும் காயம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
கொடுவாய் என்ற இடத்துக்கு அருகே இருவரது கார்களும் முன்னே பின்னே சென்று கொண்டிருந்தபோது இரு வண்டிகளும் ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான வாகனத்தில் எஸ்.பி.வேலுமணியின் மகனும் பயணித்ததாக தெரிய வருகிறது.விபத்துக்குப் பிறகு கார்கள், கிரேன் உதவியோடு அப்புறப்படுத்தப்பட்டன. இருவரும், வேறு கட்சி நிர்வாகிகளின் கார்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:








