கொரோனா தடுப்பூசி: "இந்தியாவில் முதல் நாளில் 1.91 லட்சம் பேர் போட்டுக் கொண்டனர்"

கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று ஜனவரி 16-ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்டது.

முதல் நாளில் 1,91,181 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதாக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

"ஏன் சுகாதார அமைச்சர், மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்ற விவாதம் தொடங்கிவிட்டது. நான் ஏன் போட்டுக்கொள்ளவில்லை என்று என்னிடம் கேட்கப்பட்டது. நான் கூறினேன் என் முறை வரும்போது நான் போட்டுக்கொள்வேன். அதாவது 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடும் முறை வரும். அப்போது போட்டுக்கொள்வேன்" என்று இந்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்

"தடுப்பூசியின் பாதுகாப்பு, பயன் பற்றி சிறு குழு புரளி பரப்பிவருகிறது. ஆனால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இன்று உற்சாகத்தோடு தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். திறமைவாய்ந்த மருத்துவர்கள் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :