கோவிஷீல்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் தடுப்பூசி - இன்னும் ஒரு நடைமுறை பாக்கி

பட மூலாதாரம், SERUM INSTITUTE INDIA TWITTER
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் மேம்படுத்தி வரும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கலாம் என்று மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பான சிடிஎஸ்சிஓ பரிந்துரைத்துள்ளது.
இந்த பரிந்துரை மீது இந்திய மருத்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் முடிவெடுத்து, இறுதி அனுமதி வழங்கியதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொது பயன்பாட்டுக்கு தடுப்பூசி மருந்துகளை விநியோகம் செய்வது சாத்தியமாகும்.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சக உயரதிகாரிகள் கூறுகையில், "அஸ்ட்ராசெனிகாவின் இந்திய கூட்டாளி நிறுவனமான இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் மேம்படுத்தி வரும் தடுப்பூசி, மருந்துகள் தர நிர்ணய விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதால் அதை அவசரகால தேவைக்கு அனுமதிக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது," என்று தெரிவித்தனர்.
இந்தியாவில் இந்த தடுப்பூசி மருந்தை அறிமுகம் செய்ய பரிந்துரை செய்யப்படுவது முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. இந்த அனுமதி இருந்தால்தான் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போட முடியும். மேலும், சீரம் நிறுவனத்திடம் தடுப்பூசி வாங்க ஒப்பந்தம் செய்துள்ள பிற வெளிநாடுகளுக்கும் அதை விநியோகிக்க சட்ட அனுமதி கிடைக்கும்.
முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக இந்த வாரத்தில் மட்டும் இரண்டு முறை சிடிஎஸ்சிஓ அமைப்பின் நிபுணர் குழு கூடி விவாதித்தது. கோவிஷீல்டை தொடர்ந்து பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தான கோவேக்ஸினுக்கு ஒப்புதல் தரும் நடைமுறைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஒத்தகை ஜனவரி 2ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி குளுமையான பதப்படுத்தப்பட்ட சூழலில் தடுப்பூசி மருந்தை கொண்டு செல்லும் நடவடிக்கை ஒத்திகையின்போது மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே தடுப்பூசி மருந்து போடும் தேவைக்காக 50 மில்லியனுக்கும் அதிகமான தமது தடுப்பூசி மருந்து தயாரிப்பை சீரம் நிறுவனம் தயாராக வைத்திருக்கிறது.
இந்த நிலையில், இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளரின் இறுதி அனுமதி ஓரிரு தினங்களில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவது புத்தாண்டின் தொடக்கத்தில் வெளியான நற்செய்தியாக பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
3 நிறுவனங்கள் விண்ணப்பம்
இந்தியாவில் பாரத் பயோடெக் (கோவேக்சின் தடுப்பூசி), சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா (ஆக்ஸ்ஃபோர்டின் கோவிஷீல்டு தடுப்பூசி), ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் (எம்ஆர்என்ஏ தடுப்பூசி) ஆகிய 3 நிறுவனங்களும் அவசர கால பயன்பாட்டு அனு மதியை கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிக்கு இந்த மாத தொடக்கத்தில் விண்ணப்பித்தன.
கடந்த 9ஆம் தேதி மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பின் (சிடிஎஸ்சிஓ) வல்லுநர் குழு, இந்திய சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான தரவுகளை கேட்டது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசெனிகா நிறுவனமும் இணைந்து உருவாக்கி, இந்தியாவில் தான் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான கூடுதல் தரவுகளை சீரம் நிறுவனம் கடந்த வாரம் வழங்கியது.
பிற செய்திகள்:
- கிரிப்டோ கரன்சிக்கு இந்தியாவில் பெருகி வரும் திடீர் வரவேற்பு - ஏன் தெரியுமா?
- கொரோனா தடுப்பூசி போட நாளை ஒத்திகை - களப்பயிற்சிக்கு தயாராகும் மாநிலங்கள்
- டெல்லி குளிர் 1 டிகிரிக்கு சென்றது: 15 ஆண்டுகளில் இல்லாத நடுக்கம்
- உள் உறுப்புகள் சிதையாமல் கிடைத்தது 20 ஆயிரம் ஆண்டுகள் முன்பு இறந்த விலங்கின் உடல்
- பூர்வகுடிகள் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் தேசிய கீதத்தை மாற்றிய ஆஸ்திரேலியா
- மாதவிடாய் கால சானிட்டரி பேட்களின் 100 கோடி கழிவுகள் எங்கு செல்கின்றன?
- 2020இல் கொரோனாவால் இந்தியாவிலேயே அதிகம் உயிரிழந்த தமிழக மருத்துவர்கள்
- "ரஜினி அரசியலை கைவிட்டதால் தப்பித்தது தமிழ்நாடு" - இலங்கை தமிழர் தலைவர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













