"சிங்கம்" ஹீரோ போல இருக்காதீர்கள் - புதிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் மோதி அறிவுரை

மோதி

பட மூலாதாரம், Getty Images

சிங்கம் படத்தில் வரும் கதாநாயகன் போல பணியில் சேரும்போதே, ஏரியா ரவுடிகள் அனைவரும் பயப்பட வேண்டும் என நினைக்கும் போக்கை தவிருங்கள் என்று பயிற்சி முடித்த இந்திய காவல் பணி அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அறிவுரை வழங்கியுள்ளார்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபபாய் பட்டேல் தேசிய காவல் பயிற்சிக்கல்லூரியில் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களிடையே காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை பேசினார்.

அப்போது அவர், சிங்கம் படத்தில் நேர்மை தவறாத மற்றும் கடமையில் இருந்து விலகாத காவல் அதிகாரியாக நாயகன் வேடம் அமைந்திருக்கும். அந்த படங்களை பார்த்து விட்டு, தங்களை பற்றி பெரிய அளவில் சிலர் நினைத்துக் கொண்டு செயல்படுவதால் உண்மையான போலீஸ் பணி உதாசீனப்படுத்தப்படுகிறது. அப்படி இருக்காமல் பணியாற்றுங்கள் என்று அறிவுரை வழங்கியிருக்கிறார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

உங்கள் சீருடையை நினைத்து நீங்கள் பெருமிதப்பட வேண்டுமே தவிர, அதை கொண்டு பலத்தை காட்டக்கூடாது. காக்கி சீருடையின் மரியாதையை ஒருபோதும் இழக்காதீர்கள் என்றும் பிரதமர் மோதி கூறினார்.

விதிகளுக்கு இயல்பாகவே முக்கியத்துவம் உண்டு. ஆனால், பங்களிப்புடன் பணிசெய்வதற்குத்தான் சிறப்பு முக்கியத்துவம் இருக்கும். பணி சார்ந்த செயல்பாட்டுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்தால், விதிகளின்படி செயல்படுவதும் தாமாகவே வரும். இவை இரண்டும் சேர்ந்தால், காவல் பணி மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் காவல்துறையினர் செய்த "நல்ல வேலையை" பாராட்டிய பிரதமர் மோதி, அவர்களின் செயல், காக்கிச்சீருடைக்குள் மறைந்திருக்கும் மனிதத்தை பொதுமக்கள் மனங்களில் ஆழமாக பதியச்செய்துள்ளது என்று கூறினார்.

உடற்பயிற்சி ஆர்வலரான பிரதமர் மோதி, ஐபிஎஸ் அதிகாரிகள் யோகா மற்றும் பிராணயம் செய்வதன் மூலம் அவர்களின் வேலை தொடர்பான மன அழுத்தம் அதிகரிக்காமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தினார்.

"அனைவருக்கும் யோகா மற்றும் பிராணயம் நல்லது. இதயத்திலிருந்து செய்யப்படும் எந்தவொரு வேலையையும் செய்பவர், ஒருபோதும் மன அழுத்தத்தை உணர மாட்டார்கள்" என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: