You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிக்டாக் மற்றும் ஹலோ லைட் உள்ளிட்ட 47 மாதிரி சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை
இந்திய அரசால் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட டிக்டாக், ஹலோ போன்ற சீன செயலிகளின் மாதிரி செயலிகளுக்கு (குளோன்) தற்போது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்துள்ளது என ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செல்போன் பயன்பாட்டாளர்களுக்கிடையே மிகவும் பிரபலமாக இருந்த டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், ஷேர்இட், யு.சி. புரௌசர் மற்றும் கிளாஸ் ஆஃப் கிங்ஸ் உள்ளிட்ட 59 செயலிகளை கடந்த ஜூன் மாதம் இந்திய அரசு தடை செய்தது.
இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள், இந்த செயலிகளை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்திருந்த நிலையில், இந்திய அரசின் தடைக்குப் பிறகு அந்த செயலிகளைப் பயன்படுத்த முடியாமல் போனது.
அதேபோல, கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் இருந்தும் இந்த செயலிகள் நீக்கப்பட்டன.
இந்தநிலையில் தடை செய்யப்பட்ட செயலிகளை போன்றே மாதிரி செயலிகள், டிக்டாக் லைட், ஹலோ லைட், ஷேர்இட் லலட் போன்ற பெயர்களின் வெளியானதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், இதுபோன்ற 47 மாதிரி செயலிகளுக்கு இந்திய அரசு தற்போது தடை விதித்துள்ளது.
இந்தியா - சீனா இடையே எல்லைப்பகுதியில் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு சீன நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்குச் சொந்தமான செயலிகளை இந்தியாவில் தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கை நாட்டின் பல்வேறு மட்டங்களில் வைக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு ஊறுவிளைக்கும் வகையில் செயல்பட்டதால் இந்த செயலிகள் தடைவிதிக்கப்படுகிறது’’ என இந்திய அரசு கூறியிருந்தது.
பிற செய்திகள்:
- அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ்: ரஜினி முன்னிறுத்தும் வேட்பாளரா? என்ன சொல்கிறார் அவர்?
- மருத்துவப் படிப்பில் ஓபிசி இடஒதுக்கீடு: மத்திய அரசு சட்டம் இயற்றலாம் - உயர்நீதிமன்றம்
- 30 நொடிகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கிய இஸ்ரேல்
- கதாநாயகனாக சித்தரிக்கப்படும் சர்ச்சில் – கேள்வி எழுப்பும் இந்தியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :