இந்து கொரோனா நோயாளி உடலை அடக்கம் செய்த முஸ்லிம் அமைப்பு - தஞ்சையில் நெகிழ்வு

பட மூலாதாரம், TMMK
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை17) இறந்த கொரோனா நோயாளி ஒருவர் உடலை முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்தனர்.
இந்த செய்தி பரவலாக கவனம் பெற்றது. இதற்கு இறந்தவர் இந்து என்பது மட்டுமே காரணமல்ல.
தஞ்சாவூர் மாவட்டம் பண்ணவயல் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி(62) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவார காலமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துவந்தார். கடந்த வெள்ளியன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் (தமுமுக) இலவச அவசர ஊர்தி சேவை மூலமாக அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், TMMK
பிபிசி தமிழிடம் பேசிய தமுமுகவின் மாநில செயலாளர் ஐ.பாதுஷா, ''இறந்தவர் எந்த மதம் என்பது எங்களுக்கு முக்கியமில்லை. இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்யவேண்டும் என்பதை ஒரு சேவையாக தமுமுக தமிழகம் முழுவதும் செய்துவருகிறது. கருணாநிதியை பொறுத்தவரை அவர் கொரோனாவால் இறந்ததால், நாங்கள் பாதுகாப்பு உடை அணிந்து அவரது உடலை மருத்துவமனையில் இருந்து இடுகாட்டிற்கு எடுத்துச்சென்றோம்,''என்றார்.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?

''இறந்தவரின் பொருட்களை வாங்க அவரின் உறவினர் சிலர் தயாராக இல்லை. அச்சம் அதிகமாக இருந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு தயக்கம் இல்லை. இறந்தவரின் உடலுக்கு உரிய மரியாதை தரவேண்டும் என்பதற்காக அரசின் வழிகாட்டுதல்படி உடலை அடக்கம் செய்தோம்,'' என்றார் பாதுஷா.

பட மூலாதாரம், TMMK
மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டபோது, கருணாநிதி ஒரு வார காலமாக கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்ததாகவும், மூச்சு திணறல் அதிகரித்து இறந்ததாகவும் தெரிவித்தனர். ''தமமுகவினர் மத ரீதியான வித்தியாசம் எதுவும் பார்க்காமல், கருணாநிதியின் உடலை அடக்கம் செய்தனர். இது போன்ற தன்னார்வலர்கள் கொரோனா காலத்தில் மிகவும் அவசியம்,'' என்றார் தனியார் மருத்துவமனையின் மேலாளர் ஆறுமுகம்.
இறந்த கருணாநிதி, தஞ்சாவூர் மாவட்ட பாஜகவின் மாவட்டத் தலைவரான பண்ணவயல் இளங்கோவின் உறவினர் என பல செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை பாஜக தலைவர்களைத் தொடர்புகொண்டு உறுதி செய்ய முயன்றோம். ஆனால், இதனை உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருக்கும் இந்த 5 நாடுகளை அறிவீர்களா?
- பாடகி சுசித்ரா சாத்தான்குளம் வழக்கு தொடர்பான காணொளியை நீக்கியது ஏன்? - பிபிசிக்கு பேட்டி
- கொரோனா தடுப்பு மருந்து: இந்தியாவில் நாளை முதல் தொடங்குகிறது பரிசோதனை
- இரானில் உண்மையில் எத்தனை பேருக்கு கொரோனா தொற்று இருந்தது? - அதிபர் வெளியிட்ட கணக்கு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












