குஜராத் நிலநடுக்கம்: புஜ் நகரில் 5.5 அளவில் பதிவு

குஜராத் மாநிலம் புஜ் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரவு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. மக்கள் அச்சத்துடன் வீதிகளில் குவிந்தனர்.

2001ம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கான வீடுகள் தரைமட்டமாயின என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.5 அளவில் இருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்திருக்கிறது என்று குறிப்பிடுகிறது ஏ.என்.ஐ.

நிலநடுக்கம் வலுவாக இருந்தது என்று பொதுமக்களில் ஒருவர் கூறியதாகவும் ஏ.என்.ஐ. தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.,

பாதிப்பு குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

பவநகர், ராஜ்கோட், சுரேந்திர நகர், கட்ச், போர்பந்தர், அகமதாபாத் உள்ளிட்ட இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கிறது பிபிசி குஜராத்தி சேவையின் செய்தி.

உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்று குறிப்பிட்டுள்ள துணை முதல்வர் நிதின் பட்டேல், இது 2001 நிலநடுக்கம் போல தீவிரமானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: