You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 14,753ஆக உயர்வு - இன்றைய நிலவரம்
தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,753 ஆக அதிகரித்துள்ளது என என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 786 நபர்களில், 95 நபர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
786 நபர்களில் 569 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.
தற்போது,சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,364 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 37 நாட்களாக தொற்று இல்லாத மாவட்டமாக இருந்த ஈரோடு மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செயல்படும் 67 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 3,85,185மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 846 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,128ஆக உயர்ந்துள்ளது என்றார்.தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், 5,349 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் 4 நபர்கள் இறந்துள்ளார் என்றும் அதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்துள்ளது.
இன்று இறந்த நான்கு நபர்களும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் நாள்பட்ட நோய்க்காக அவர்கள் சிகிச்சை எடுத்து வந்தனர் என்றும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ''ஆணையம் நீதி வழங்குமா என்பது கேள்விக்குறிதான்''
- பாகிஸ்தானின் கராச்சியில் பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து - 30 பேர் உயிரிழப்பு
- வடமாநில தொழிலாளர்கள்; வங்கதேச ரயில்கள் மற்றும் சில போலிச் செய்திகள்
- ஒருபுறம் பட்டினி, மறுபுறம் அழிப்பு - அமெரிக்காவை வதைக்கும் கொரோனா வைரஸ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: