You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் ஊரடங்கு: வட இந்தியத் தொழிலாளர்கள்; வங்கதேச ரயில்கள் மற்றும் சில போலிச் செய்திகள்
இரண்டு ரயில் பெட்டிகளின் நடுவே உள்ள இணைப்பில் பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பயணிப்பது போல ஒரு காணொளி சமூக வலை தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வட இந்தியப் பெண் தொழிலாளி ஒருவர் ரயிலில் இடம் கிடைக்காமல் இவ்வாறு பயணிக்கிறார் என்று கூறிப் பகிரப்படும் காணொளி பார்ப்பவர்களை ஒருவேளை கண்கலங்க வைத்திருக்கலாம்.
ஆனால், அது உண்மையல்ல. அது இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட காணொளியே அல்ல. உண்மையில் அது வங்கதேசத்தில், 2016ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட காணொளி.
ஊரடங்கு அமலான பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப பேருந்து, ரயில் என எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவைக் கூட நடந்தே கடக்கும் முயற்சில் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலார்களின் இன்னல்மிகு காணொளிகள் சமூக ஊடகங்களில் நிரம்பிக் கிடக்கின்றன.
ஆனால், அதன் பெயரிலேயே சில போலிக் காணொளிகளும் பகிரப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு காணொளிதான் இது.
கடந்த காலங்களிலும் வெவ்வேறு ஒரு காரணம் கூறப்பட்டு, வட இந்தியாவில் எடுக்கப்பட்ட காணொளி என்று இது பகிரப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்களுக்காக மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு ஷார்மிக் ரயில்களில் அவர்கள் கூட்டமாகப் பயணிப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் ஒரு காணொளியும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரயில் எஞ்ஜினுக்கு முன்னாலும், ரயில் பெட்டிகளின் மேலேயும் மக்கள் நின்று கொண்டும் உட்கார்ந்து கொண்டும் பயணிப்பதை அதில் காண முடியும்.
உண்மையில் இந்த காணொளியில் இருப்பது வெளிமாநில தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு ரயிலா?
இந்தக் காணொளியும் வங்கதேசத்தில் எடுக்கப்பட்ட காணொளி என பிஐபி உண்மை பரிசோதிக்கும் குழு செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் கூட்டமாக பயணிப்பது போன்ற காணொளி மும்பையிலிருந்து மேற்கு வங்கம் செல்லும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில் என பகிரப்பட்டது.
ஆனால் உண்மையில் அது வங்கதேசத்தில் ரயில்களில் கூட்டம் அதிகம் இருப்பதாக 2018ல் எடுக்கப்பட்ட காணொளி ஆகும்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
சமூக வலைதளத்தில் இவை இரண்டும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களின் காணொளி என தவறாக சித்தரிக்கப்படுகின்றன.
ஷார்மிக் சிறப்பு ரயில்கள்
மே 1 முதல் வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்காக மாநிலங்களுக்கிடையே சிறப்பு ரயில்கள் விடப்பட்டன. கோவிட்-19 தொற்று காரணமாக இந்த ரயில்களில் சமூக விலகல் கடைப்பிடிப்பதாக இந்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இதுவரை சுமார் 20 லட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு வந்தடைந்ததாக கூறப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: