You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா இந்தியா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 681 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4,257 பேர் குணமடைந்துள்ளனர். 16,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
நோய் தொற்று பரவல் அவரச (திருத்த) சட்டம் 2020இன் கீழ் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்களிடமிருந்து 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் இந்த அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்திய அரசு இந்த அவசர சட்டத்தை இயற்றியுள்ளது.
இதுகுறித்து நேற்று ட்வீட் செய்திருந்த பிரதமர் நரேந்திர மோதி, கோவிட் 19 நோய் தொற்றை எதிர்த்துப் போராடும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளரின் பாதுகாப்பை உறுதிபடுத்த, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நோய் தொற்று பரவல் அவரச (திருத்த) சட்டம் 2020 உதவும் என தெரிவித்தார்.
உலக வங்கி அறிக்கை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள சுமார் 4 கோடி மக்களை பாதித்துள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.
ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப் பகுதிகளுக்கு திரும்பியதாக புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு புலம்பெயர்வை கொரோனா வைரஸ் பரவல் மோசமாக பாதித்துள்ளது என்றும் உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: