கொரோனா வைரஸ்: மும்பையில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கோவிட்-19 தொற்று

மும்பையில் 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா

பட மூலாதாரம், Getty Images

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மும்பையில் 53 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 171 பத்திரிகையாளர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

தொற்று உறுதியான பல பத்திரிகையாளர்களுக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேலும் மகாராஷ்டிராவில் புதிதாக 283 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 483ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் ஒடிஷா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று

இன்றைய நிலவரம்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,265ஆக உயர்ந்துள்ளது.

Banner image reading 'more about coronavirus'
Banner image reading 'more about coronavirus'

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1553 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; 36 பேர் உயிரிழந்துள்ளனர். என இன்று செய்தியாளார்களை சந்தித்த சுகாதாரத் துறையின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்

மேலும் கடந்த 14 நாட்களில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: