கொரோனா ஊரடங்கால் டாஸ்மாக் மூடல் - இணையத்தை பார்த்து மது தயாரிக்க முயன்றவர்கள் கைது

கொரோனா காலத்தில் குடிப்பழக்கத்தை சமாளிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிக்கும் படம்

இணையதளத்தில் காணொளியைப் பார்த்து வீட்டிலேயே மதுபானம் தயாரிக்க முற்பட்ட இருவர் தமிழக காவல் துறையால் வெள்ளியன்று கைது செய்யப்பட்டனர் என பி.டி.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

பல நாட்கள் ஆகும் இந்த மது தயாரிக்கும் முறையை அவர்கள் முடிக்கும் முன்னரே போலீஸார் அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்தில் கைது செய்யப்பட்டபோது, அவர்கள் இருவரும் மது தயாரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

"அவர்கள் கிட்டதட்ட தயாரிக்கும் முறையை முடித்த நிலையில் வெள்ளிக்கிழமையன்று கைதானர்கள்", என காவல் அதிகாரி ஒருவர் பி.டி.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

மேலும் "அந்த இருவரும் மது எப்படி தயாரிக்க வேண்டும் என்பதை பிரபல காணொளி வலைதளம் ஒன்றில் பார்த்ததாக கூறினர்," என அந்தக் காவல் அதிகாரி கூறியுள்ளார்.

அவர்கள் இருவரில் ஒருவரின் வீட்டிற்குள் மது தயாரிக்கப் பயன்படுத்திய பாத்திரங்களும் பிற பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'

சட்டவிரோதமாக மது உற்பத்தி நடப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறுகிறார்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் 24 மாலை முதல் தமிழக அரசு நடத்தும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுவிட்டன.

"சில நாட்களுக்கு முன்னர், நாட்டுச் சாராயம் தயாரிக்கத் தேவையான கலவையை ஒரு பெரிய பேரலில் கலந்து, அந்தக் கலவை நொதித்து மதுவாக மாறுவதற்காக அதை மூடி வைத்துள்ளார் ஒருவர்."

கொரோனா வைரஸ்

"அந்த பேரலை யாரும் கண்டறியக்கூடாதென குளியறையில் வைத்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அருகில் வேறு எங்கோ சென்றுவிட்டார். அது முழுவதுமாக தயாரான நிலையில் திரும்ப வரலாம் என எண்ணியிருந்தார். அது குறித்து தகவல் அறிந்து, அந்தக் கலவை நாட்டுச் சாராயமாக மாறும் முன்னரே அதை அழித்து விட்டோம்," என அந்த அதிகாரி தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்க நடந்த பல முயற்சிகளை தாங்கள் தடுத்துள்ளதாகவும், அவை குறித்து தகவல் அளிக்கும் கிராம மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: